Body

இலங்கையில் மலிவு விலையிலான 5G அனுபவங்களை விரிவுபடுத்துவதற்காக Xiaomi Redmi 15C ஸ்மார்ட்போனை Dialog அறிமுகப்படுத்துகிறது

2026 ஜனவரி 22         Colombo

 

நலக ரம்புக்பொத்த, பொது முகாமையாளர் (செயற்பாடுகள்) - Stelacom Pvt Ltd; ஷயானா கிறிஸ்டீன், பிராண்ட்ஸ் தலைவர் (மொபைல்) - டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; வித்யா சாகர், பொது முகாமையாளர் (விற்பனை) - Gnext Sri Lanka; திசர கஸ்தூரியாரச்சி, துணைத் தலைவர் - வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் (டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); சந்தனி கஜதீர, சந்தைப்படுத்தல் தலைவர் - Xiaomi Sri Lanka; தேஷான் விஜேவீர, சாதனப் பிரிவு தலைவர் - வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள்; சஹஸ்த புலத்சிங்ஹல, வகைப்படுத்தல் தலைவர் (Category Head) - Abans PLC.

இலங்கையின் முதற்தர இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Xiaomi Sri Lanka, GenNext Sri Lanka மற்றும் Abans PLC ஆகியவற்றுடன் இணைந்து, மலிவு விலையிலான 5G வசதி கொண்ட Xiaomi Redmi 15C ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய 5G வலையமைப்பான 'Dialog 5G Ultra' ஊடாக, அடுத்த தலைமுறை இணைப்பின் நன்மைகளை அதிகளவான வாடிக்கையாளர்களுக்குச் சென்றடையச் செய்வதற்கான டயலொக்கின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு அங்கமாக இந்த அறிமுகம் அமைகிறது.

நவீன Digital வாழ்க்கை முறையை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Xiaomi Redmi 15C, உயர்தர 'Refresh rate' கொண்ட பெரிய Display, நீண்ட நேரம் உழைக்கக்கூடிய Fast charging வசதி கொண்ட Battery மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த Camera system ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 5G Processor மூலம் இயங்கும் இந்தச் சாதனம், Dialog 5G Network-உடன் இணையும்போது வேகமான Browsing, Download மற்றும் மேம்பட்ட Digital experiences-களை வழங்குகிறது. மாணவர்கள், இளம் Professionals மற்றும் 5G-க்கு மாற விரும்பும் தற்போதைய மொபைல் பாவனையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பு மக்களுக்கும் அதிவேக இணைய வசதியை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துவதில் Dialog வகிக்கும் பங்கை இந்த Xiaomi Redmi 15C அறிமுகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கல்வி, வேலை, பொழுதுபோக்கு மற்றும் அன்றாட தொடர்பாடல் சார்ந்த டிஜிட்டல் சேவைகளை மக்கள் இன்னும் ஆழமாகப் பயன்படுத்தும் வகையில் Dialog தனது வலையமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

Xiaomi Redmi 15C இப்போது Dialog விற்பனை நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கிடைக்கிறது. மேலதிக விபரங்களுக்கு https://www.dialog.lk/phones/xiaomi-redmi-15c-5g-4gb என்ற இணையதளத்தை பார்வையிடவும்.