Body

டயலொக் சிரேஷ்ட பிரஜைகளை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கு பிரஷன்சா Future Connect Forum இனை ஏற்பாடு செய்திருந்தது

06 February 2020         Colombo

 

news-1

 

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையில் டயலொக் பிரஷன்சா – Future Connect Forum இன் முதலாவது நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு டிஜிட்டல் தொடர்பான விடயங்களை கற்றுக்கொடுத்தல், அதிகாரம் அளித்தல் மற்றும் நம்பிக்கை திறனினை வளர்ப்பதற்கான முயற்சியாக திகழ்கின்றது.

2020 ஜனவரியில் நடைபெற்ற இந்த Forum Derana 60+ உடன் கூட்டிணைந்து, பங்கேற்பாளர்களுக்கு பயனளிக்கும் பொருட்டு பல அறிவின் பகுதிகளை இலக்காக கொண்டு இந்த விடயத்தில் ஒரு முழுமையான அணுகுமுறையினை மேற்கொண்டது. Forum இன் போது ஸ்மார்ட்ஃபோனினை எவ்வாறு பயன்படுத்துவது, மொபைல் App கள், சமூக வலைப்பின்னல், ஆன்லைன் ஆராய்வு, மற்றும் e-banking, e-commerce தலைப்புக்களின் கீழ் ஏனைய ஆன்லைன் சேவைகளின் மூலம் டிஜிட்டல் வாழ்க்கை முறைக்குள் நுழைதல் போன்றவற்றை கற்றுக்கொடுத்தது.

ஓய்வூதிய திணைக்களத்துடன் இணைந்து, அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு பிரத்தியேக பக்கேஜாக டயலொக் பிரஷன்சா மொபைல் பக்கேஜினை வெற்றிகரமாக அறிமுகம் செய்தது. இந்த பிரத்தியேக பக்கேஜில் இலவச ஸ்மார்ட்ஃபோன் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், டயலொக் வலையமைப்புகளுக்கு இடையில் 200 நிமிட அழைப்பு நேரம், இலவச 300 SMS உடன் ரோமிங், IDD மற்றும் பெறுமதி சேர் சேவைகளுக்கு விலைக்கழிவுகளையும், ஆசிரி வைத்தியசாலை மற்றும் Doc990 ஆகியவற்றுக்கு மேலதிக சலுகைகளையும் வழங்குகின்றது. இவை அனைத்தையும் 638 ரூபாய் என்ற மிகக்குறைந்த கட்டணத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த forum இல் கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை செயற்பாட்டு அதிகாரி ரெய்னர் டாய்ச்மென், Future Connect Forum இன் வெற்றியுடன், டயலொக் பிரஷன்சா அறிமுகமானது இலங்கையில் உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் வாழ்க்கையினை வளப்படுத்தவதற்குமான முயற்சியாக அமைக்கின்றது. அனைத்து மக்களையும் டிஜிட்டல் முறையில் திறமையானவர்களாக மாற்றுவதற்கும் அது தொடர்பான விடயங்களை கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்குமான ஒரு மிகப்பெரிய பயணத்தின் ஒரு பகுதியாகும்.

2020ஆம் ஆண்டில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதனை முன்னெடுப்பதே இந்த forum இன் நோக்கமாகும். மேலும், ஓய்வூதிய துறையினை டிஜிட்டல் மயமாக்கியதுடன் ஓய்;வூதிய திணைக்களத்துடன் இணைந்து தேசிய ஓய்வூதிய தினத்தினை முன்னிட்டு ‘Sri Lanka Pensions App’ இனை அறிமுகப்படுத்தியது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான இலங்கையின் முதல் மொபைல் App இனை குறிக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் அவர்கள் சேவைகளை அணுகிட அதிகாரம் அளித்துள்ளது.

பிரஷன்சா மொபைல் பக்கேஜ் அல்லது Future Connect Forum பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள www.dialog.lk/Prashansa க்கு செல்லுங்கள்