Body

டயலொக், இலங்கையின் முதலாவது முழுமையான உள்@ர்மயமாக்கப்பட்ட கேட்டல் மேம்பாட்டு மொபைல் App ஆன Petralex இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

21 ஜுன் 2020         கொழும்பு

 

news-1

தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் ப்ரோடிகின் மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் நிலைத்தன்மை பிரிவின் மேலாளர் தம்மித குணவர்தன ஆகியோர் Petralex App ஐ அறிமுகம் செய்கின்றார்கள்.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஸ்மார்ட்ஃபோன் அடிப்படையிலான செவிப்புலன் மேம்பாட்டு தீர்வுகளில் உலகளவில் முன்னணியாளரான Petralex உடன் இணைந்து பிரபலமான மொபைல் சாதனங்களுக்கு Petralex app இனை அறிமுகப்படுத்துவதனை அறிவித்துள்ளது. Petralex, பாவனையாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட்ஃபோனில் wired அல்லது Bluetooth ஹெட்செட் மூலம் செவிப்புலன் மேம்படுத்தும் கருவியாக பயன்படுத்த அனுமதிக்கின்றது. இந்த புரட்சிகர App ஆனது செவித்திறன் இழப்பை சந்திக்கக்கூடும் என கவலையடைபவர்கள் அல்லது செவித்திறன் குறைபாட்டை அனுபவிப்பவர்களை இலக்காக கொண்ட அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடியதாகவும், இலகுவாக அணுகக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

முதல் பயன்பாட்டில், Petralex ஒரு ஹெட்செட் அல்லது Bluetooth சாதனத்தை பயன்படுத்தி செவிப்புலன் பரிசோதனைகளை எளிதாக்குகின்றது. பாவனையாளர்கள்கேட்க விரும்பும் சரியான அதிர்வெண்ணை அடையாள காண App பல அதிர்வெண்களை வெளியிடும். அதற்கேற்ப ஒலியை பெருக்கும். இந்த App ஆனது தேவையற்ற பின்னணி சத்தங்களை தீவிரமாக நீக்குகின்றமையினால் இதன் மூலம் பேச்சு நுண்ணறிவு அதிகரிக்கப்படுகின்றது. பாரம்பரிய செவிப்புலன் கருவிகளை போலன்றிதொலைபேசி பற்றரியின் மூலம் மொபைல் app இயக்கப்படுவதினால் மேலும் ஒரு பற்றரியினை மாற்ற வேண்டிய அவசியமில்லை. கேட்கும் சிரமங்களை கொண்டவர்களுக்கு அவர்கள் பயன்படுத்த சௌகரியமாக இருக்கும் ஒரு கருவியை வழங்குகின்றது. பழக்கமான அன்றாட சாதனங்கள் கூடுதல் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதுடன் கூடுதல் கொள்முதலும் அவசியமிற்ற நபர்கள் தங்களுக்கு தேவையான உதவியினை அவர்கள் மிகவும் வசதியாக பெற்றுக்கொள்ளவதற்கு அனுமதிக்கின்றது. App தொழில்முறை பரிசோதனை மற்றும் வணிக ரீதியாக பொருத்தப்பட்ட கேட்கும் கருவிகளை மாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறுவன அதிகாரி ~pயாம் மஜீத் கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் சிறப்பு மிக்க Petralex இனை அறிமுகப்படுத்தியதில் டயலொக் பெருமிதம் கொள்கின்றது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான முழுமையான ஆதரவோடு முழுமையடைந்துள்ளது. அதன் மூலம் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான எங்கள் ஆதரவை மேலும் விரிவுப்படத்த உத்தேசித்துள்ளோம். அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும் மேம்படுத்தவும் இலகுவான அணுகக்கூடிய தீர்வுகள்ää கல்விää தொழில்முறை மற்றும் அன்றாட வாய்ப்புகளுக்கு சமமான அணுகலை அனுமதிக்கும் போது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் தீவிரமாக ஈடுபடுகின்றோம். செவிப்புலன் இழப்பினை அடையாளம் காணப்படுவதையும் ஆரம்பத்தில் கவனிக்கப்படுவதையும் உறுதி செய்ய வழமையான செவிப்புலன் பரிசோதனைகளின் முக்கியத்தவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பயன்பாடு செயல்படுகின்றது என தெரிவித்தார்

இந்த App இனது Google Play Store மற்றும் Apple App Store இல் மாதாந்த கட்டணம் ரூ.1900க்கு கிடைத்தாலும் டயலொக் மற்றும் Petralex இடையேயான கூட்டு முயற்சியில் சந்தையில் இலங்கை ரூபாய் 180 மற்றும் வரிகளை மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கின்றது. பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் ‘Add to Bill’ என்பதை பயன்படுத்தி செலுத்த முடியும். கிரடிட் மற்றும் டெபிட் அட்டைகளை இணைக்க வேண்டிய அவசியமின்றி இலகுவாக பணம் செலுத்த முடியும்.