Body

அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டயலொக் பாடசாலை ரக்பி லீக் 2020 மார்ச் மாதத்தில் ஆரம்பமாகின்றது.

29 பெப்ரவரி 2020         கொழும்பு

 

news-1

இடமிருந்து வலம் இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் சுசந்த மெண்டிஸ், இலங்கை ரக்பி கால்பந்து நடுவர் சங்கத்தின் தலைவர் டோனி அமித், ஆசிய ரக்பி போட்டிகள் மற்றும் உயர் செயல்திறன் தலைவர் அசங்க செனவிரத்ன, இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி கால்பந்து சங்கத்தின் தலைவர் பி.ஏ. அபேரத்னே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார, இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் லசித குணரத்ன, இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி கால்பந்து சங்கத்தின் செயலாளர் நிரோத விஜேராம மற்றும் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் ஊடக மற்றும் வர்த்தக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்~ சமரநாயக்க

news-1

பிரிவு 1A அணித்தலைவர்கள்

news-1

பிரிவு 1B அணித்தலைவர்கள்

பாடசாலைகளின் ரக்பி லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளுக்கான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் மூன்று ஆண்டு அனுசரணைக்கான உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட டயலொக் பாடசாலை ரக்பி லீக் 2020 மார்ச் மாதத்தில் ஆரம்பமாகின்றது. இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரும்ää விளையாட்டின் செழிப்பான ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தனது நோக்கத்திற்கு அமைய எமது எதிர்காலத்திற்கு இன்றே முதலீடு செய்கின்றது. டயலொக் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக்கின் தொடக்க ஆட்டம் தர்மராஜா கல்லூரிக்கும்ää புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையே கொழும்பின் புனித பீட்டர்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. லீக் சாம்பியன்ஷிப்பின் பிரிவு 1 ஆனது ஒரு சுற்று round robin வடிவத்தில் இரண்டு குழுக்களாக 12 பாடசாலைகளுக்கு இடையே 30 போட்டிகளைக் கொண்டிருக்கும்.

டயலொக் பாடசாலை ரக்பி லீக் 2020 இன் பிரிவு 1A இல், கொழும்பு ராயல் கல்லூரி, கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி, கல்கிஸ்சை புனித தாமஸ் கல்லூரி, கொழும்பு இசிபதன கல்லூரி, கண்டி டிரினிட்டி கல்லூரி, கல்கிஸ்சை அறிவியல் கல்லூரி, கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, வித்யார்த்த கல்லூரி, கண்டி கடுகஸ்தோட்டை புனித அந்தோனி கல்லூரி, மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரி ஆகிய பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரிவு 1B மற்றும் 1C பிரிவுகளின் கீழ் மேலும் இருபத்தி நான்கு பாடசாலைகள் போட்டியிடவுள்ளதுடன் மேலும் 24 பாடசாலைகளும் டயலாக் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக்கின் பிரிவு 2 இல் போட்டியிடவுள்ளது. மேலும் டயலொக் ஆசிஆட்டா 10 முதல் 18 வயதிட்குட்பட்ட ஆண்கள் அணிக்கும் 10 முதல் 19 வயதிட்குட்பட்ட பெண்கள் அணிக்கும் அனுசரணை வழங்குகின்றது.

கடந்த மூன்று சீசன்களில் சாம்பியன்களாக கொழும்பு ரோயல் கல்லூரி முதல் போட்டியாளர்களில் ஒருவராக திகழ்கின்ற அதே நேரத்தில் கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு இசிபதன கல்லூரி மற்றும் கண்டி டிரினிட்டி கல்லூரி ஆகியவையும் முன்னணி அணிகளாக திகழ்கின்றன. டயலொக் ஜனாதிபதியின் Knockout போட்டி தொடர் ஜூன் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் இறுதிப் போட்டியானது கொழும்பில் உள்ள அழகிய ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2019 ஆம் ஆண்டில், கொழும்பு புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரியை 18க்கு 15 என வீழ்த்தி வெற்றி வாகயை சூடிக்கொண்டது.

kick-off குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார, "டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் மற்றும் Knockout போட்டி தொடருக்கான இலங்கை பாடசாவைகளுக்கான ரக்பி கால்பந்து சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த மூன்று ஆண்டு நிதியுதவி ஒப்பந்தம், இலங்கையின் நாளைய சாம்பியன்களில் முதலீடு செய்வதற்கான எங்கள் அராப்பணிப்புக்கு ஒரு சான்றாகும், இது பாடசாலை ரக்பி மட்டத்திலிருந்து கிளப் ரக்பி மட்டத்திற்கு சென்று அதன் பின் தேசிய ரக்பி நிலைக்கு வந்து சர்வதேச அரங்கில் சிறந்து விளங்குவதே இதன் முதன்மையான நோக்கமாகும். பாடசாலைகள், கிளப் மற்றும் தேசிய ரக்பி ஆகியவற்றின் அனுசரணையாளர்கள் என்ற வகையில், ஆசிய ரக்பி சுற்றுவட்டத்தில் இந்த விளையாட்டு மிக உயர்ந்த இடத்தை எட்டுவதற்காகவும், திறமைகளை வளர்ப்பதற்காகவும், இன்றே முதலீடு செய்வதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். போட்டிகள் அனைத்தும் சிறப்பான முறையில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ ஊடக வெளியீட்டு நிகழ்வில்போது இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி கால்பந்து சங்கத்தின் தலைவர் பி. ஏ. அபேரத்ன உரையாற்றுகையில், இலங்கையின் முன்னணி விளையாட்டு அனுசரணையாளர்களில் ஒருவரான டயலொக் ஆசிஆட்டாவுடன்; இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி கால்பந்து சங்கம் (SLSRFA) கூட்டிணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. பாடசாலைகளின் ரக்பி போட்டிகள் பாடசாலை விளையாட்டு நாற்காட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வாகும் மேலும் டயலொக் ஆசிஆட்டாவுடனான இக் கூட்டு முயற்றியானது தொடரினையும் விளையாட்டையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதன் மூலம் இந்த வீரர்களிடையே நல்ல விளையாட்டுத் திறனையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்துக் கொள்வோம் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

இலங்கை ரக்பிஇ கிளப் ரக்பி லீக் மற்றும் Clifford கோப்பை knock out; போட்டிகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக டயலொக் ஆசிஆட்டா திகழ்கின்றது. இலங்கையில் நடைபெறும் ஆசியா செவன்ஸ் சாம்பியன்ஷிப்பின் போட்டிகளுக்கும் டயலொக் நிதியுதவியினை வழங்குவதுடன் இலங்கை ரக்பி கால்பந்து நடுவர்களின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராகவும் உள்ளது. இலங்கை தேசிய கிரிக்கெட், கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளின் பெருமைமிக்க ஆதரவாளராகவும் ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் கைப்பந்து, சிரேஷ்ட கைப்பந்து தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட நெட்பால் போட்டிகள், பிரீமியர் கால்பந்து, பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் பாராலிம்பிக் ஆகியவற்றுடன் டயலொக் நிறுவனம் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. இராணுவ பாரா விளையாட்டுக்கள், தேசிய பாரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணியை முன்னிலைக்கு கொண்டு வருதற்கும் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது.