Body

கொவிட் -19 தொற்றுநோய் முயற்சிகளை ஆதரிக்கும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் டயலொக் ஆசிஆட்டாவின் நன்றிகள்

'சுவ திரி' தகவல் தொடர்பு வசதியை விரிவுபடுத்துகிறது

செப்டெம்பர் 26, 2021         கொழும்பு

 

Supun Weerasinghe, Group Chief Executive, Dialog Axiata PLC exchanging the MOU with Dr. S.H. Munasinghe, Secretary, Ministry of Health

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை டாக்டர் எஸ். எச். முனசிங்க அவர்களிடம் செயலாளர், சுகாதார அமைச்சர்கள் முன்னிலையில் கையளித்தார்.

படத்தில் இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, சுகாதார அமைச்சு செயலாளர் டாக்டர் எஸ்.எச். முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, மற்றும் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் மற்றும் கொவிட் -19 க்கு பொறுப்பான அமைச்சக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் மற்றும் முன்னணியில் அயராது உழைக்கும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி செலுத்தவதற்காக, சுகாதாரத் துறைக்கான இலவச தகவல் தொடர்பு வசதியான 'சுவ திரி' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னணியில் இருந்து உயிர் காக்கும் சுகாதார ஊழியர்களைப் பலப்படுத்தும் இந்த 'சுவதிரி' தகவல் தொடர்பு வசதி, அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருப்பதனையும், கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான அவர்களின் முயற்சிகளை மேலும் ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. D2D 1000 நிமிடங்கள் D2D 1000 SMS மற்றும் 6 GB anytime Data ஆகியவை 3 மாத காலத்திற்கு இலவசமாக வழங்கப்படும் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருத்துவமனை இயக்குனர்களாலும் பரிந்துரைக்கப்படும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் இந்த சேவையானது வழங்கப்படும்.

மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் மற்றும் கொவிட் -19 க்கு பொறுப்பான அமைச்சக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி கருத்து தெரிவிக்கையில், கௌரவ சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் சுகாதார சேவைகள் இயக்குனர், மேலதிக செயலாளர்கள் மற்றும் துணை இயக்குனர், ஜெனரல்கள் ஆகியோரின் சார்பாக இந்த தொற்றுநோயின் போது முதல் நாளிலிருந்து முன்னோடி பங்காளராக இருந்து வரும் டயலொக் ஆசிஆட்டாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். டயலொக் சிறந்த மருத்துவ உட்கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளி பராமரிப்புக்கு சிறந்த உதவிகளை வழங்குவதைத் தாண்டி, இந்த 'சுவதிரி' தொலைத்தொடர்பு வசதி மூலம், தொற்றுநோய்க்கு மத்தியில் அயராது உழைக்கும் மற்றும் ஆபத்தில் இருக்கும் நமது சுகாதார ஊழியர்களை ஊக்குவித்து ஆதரிக்கிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்து அயராது போராடும், நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், எங்கள் சமூகங்களைப் பாதுகாக்கவும், குணப்படுத்தவும் அவர்கள் மேற்கொண்ட அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதற்காக இந்த திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இன்று நாம் மோசமான சவால்களை எதிர்கொள்கின்ற போதிலும், அனைத்து இலங்கையர்களையும் பராமரிப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொது சுகாதார ஊழியர்களும் உத்தியோகபூர்வ தகவல்தொடர்பு வசதிகளை இலவசமாக வழங்கவும், தடுப்பூசி மையங்கள், இடைநிலை மையங்கள் மற்றும் கொவிட் -19 சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அடையாளம் காண உதவுவதற்கும் தொற்றுநோய்களின் போது தொடர்புகளை வழங்குதல் போன்ற தேசிய சுகாதார முயற்சிகளுக்கு உதவுவதற்காக டயலொக் தொடங்கிய பல சிறப்பு முயற்சிகள் புதிய பக்கேஜ் அறிமுகத்துடன் ஒன்றிணைகின்றது.