Body

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Abans PLC நிறுவனத்துடன் இணைந்து Motorola G35 5G மற்றும் Motorola G57 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது

2026 ஜூன் 26         கொழும்பு

 

இடமிருந்து வலம்: சகுனி ரதலியகொட (பிராண்ட் மேலாளர், Motorola, Abans PLC); தேஷான் விஜேவீர (சாதன வணிகம், வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); சமிக கொடமன்ன (பணிப்பாளர் நாயகம், Stelacom Pvt Ltd); ஷிரோமி அலி (உதவித் துணைத் தலைவர், கார்ப்பரேட் திட்டமிடல், உத்தி மற்றும் வளர்ச்சி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); சதுர ஜயவர்தன (தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, Abans PLC); சமில ஜனரங்க (பொது மேலாளர், கார்ப்பரேட் சேனல், Abans PLC); அஷான் ரணசிங்க (பிராண்ட் மேலாளர், குழுமச் சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); சமித் பெர்னாண்டோ (சிரேஷ்ட பிராண்ட் மேலாளர், Abans PLC).

இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Abans PLC நிறுவனத்துடன் இணைந்து Motorola G35 5G மற்றும் Motorola G57 5G ஆகிய ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இப்புதிய அறிமுகமானது, இலங்கையிலுள்ள நுகர்வோருக்கு மலிவு விலையிலான 5G ஸ்மார்ட்போன் அனுபவங்களை விரிவுபடுத்துவதற்கு வழிவகுக்கின்றது. Motorola இன் அண்மைக்கால 5G ஸ்மார்ட்போன் வரிசையின் ஒரு பகுதியாக சந்தைக்கு வரும் இச்சாதனங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, மெய்மறக்கச் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நம்பகமான அன்றாட செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் 5G வலையமைப்பான 'Dialog 5G Ultra' இன் அதிவேக ஆற்றலை அனுபவிக்க முடியும். இவ்வேளையில், 'Dialog 5G Ultra' வலையமைப்பானது நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், 1,000 இற்கும் மேற்பட்ட நேரடி 5G தளங்களுடன் (Live 5G sites) தனது சேவைகளைச் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்றாட பயனர்களுக்குத் தடையற்ற இணைப்பு, பொழுதுபோக்கு மற்றும் ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளும் (Multitasking) வசதிகளை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனங்கள், 6.72 அங்குலத் திரை (Display), Dolby Atmos Stereo Speakers மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இவ்விரு ஸ்மார்ட்போன்களும் 8GB RAM மற்றும் 128GB Internal storage கொண்டுள்ளமையினால், சீரான மென்பொருள் செயல்பாட்டிற்கும் அன்றாட உற்பத்தித்திறனுக்கும் சிறந்த ஆதரவை வழங்குகின்றன. அத்துடன், வெவ்வேறு சூழல்களில் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்வதற்கு ஏதுவாக, 50MP பின்பக்கக் கேமரா உள்ளிட்ட மேம்பட்ட கேமரா அமைப்புகளையும் இச்சாதனங்கள் கொண்டுள்ளன.

Motorola G35 5G மற்றும் Motorola G57 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் 'Dialog 5G Ultra' வலையமைப்பில் தடையற்ற இணைப்பை ஆதரிப்பதுடன், அதிவேக Streaming, Downloads உள்ளிட்ட அன்றாட மொபைல் பயன்பாடுகளை மேம்படுத்துகின்றன. இச்சாதனங்களைக் கொள்வனவு செய்யும் புதிய 5G வாடிக்கையாளர்கள், பிரத்யேகமான 275GB இலவச டேட்டா சலுகையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவராவர். மேலும், வாடிக்கையாளர்களின் நிதியியல் சுமையைக் குறைக்கும் பொருட்டு, 'Lesi Pay' ஊடாக 18 மாத காலத் தவணைக்கட்டண திட்டத்தின் கீழ் இச்சாதனங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சந்தையில் Motorola G35 5G இன் விலை ரூபா 73,999 ஆகவும், Motorola G57 5G இன் விலை ரூபா 82,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சாதனங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 120 இற்கும் மேற்பட்ட டயலொக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்தான மேலதிக விபரங்களுக்கு https://dialog.lk/phones/motorola-g57-5g-8gb என்ற இணையதளத்திற்கு விஜயம் செய்யவும்.