Body

Dialog Suraksha, உங்கள் கண்ணான செல்வங்களை இமை போல் காத்திடும் இலவச சேவை

26th July 2024        Colombo

 

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ‘Dialog Suraksha’-வை அறிமுகப்படுத்துகிறது. இணையவெளியில் உங்கள் பிள்ளையை பாதுகாத்திடும் ஒரு இலவச சேவையே இது. இதில் உங்கள் பிள்ளை இணையவெளியில் கற்கையிலும் விளையாடுகையிலும் அவர்களை காத்திடும் வகையில் இச்சேவைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Dialog Suraksha பெற்றோருக்கு நிம்மதியையும் சிறார்களுக்கு ஆரோக்கியமான முறையில் டிஜிட்டலை பாவிக்கும் பழக்கத்தையும் அளிக்கிறது. நிகழ்நிலையில் (Online) அவர்கள் செய்யும் அத்தனை நடவடிக்கைகளையும் ஒரே இடத்தில் கண்காணிக்க இது இடமளிக்கிறது. சிறார்கள் கல்விக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் அதிக நேரத்தை நிகழ்நிலையில் செலவிடுவதிலிருந்து காக்க இது உதவுகிறது. Dialog Suraksha பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் முழுமையாக இணையத்தை முடக்குதல், பாதுகாப்பற்ற வலைத்தளங்களை முடக்குதல், கற்றல் மற்றும் வேலை சார்ந்த உள்ளடக்கங்களை மட்டும் அணுக அனுமதித்தல், நிர்ணயித்த நேரவரையறைக்குள் இணையப்பாவனையை மட்டுப்படுத்தல் ஆகிய வசதிகளை அளிக்கிறது. மேலும் பிள்ளையின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் (Real-time) அறிந்து கொள்ளும் அம்சமும் இதில் உண்டு.

உங்கள் பிள்ளைக்கு ஒரு மொபைல் இணைப்பை வழங்குவதாயின் அஞ்சாமல் டயலொக்கை தெரிவு செய்யலாம். Dialog Suraksha இணையப் பாதுகாப்பு சேவை உங்கள் பிள்ளையை எங்கிருந்தும் எந்நேரத்திலும் காக்கும்.

உங்கள் பிள்ளையின் உலகை பாதுகாப்பானதாக்கி எப்போதும் அவர்களோடு இணைந்திருங்கள். அனைத்து டயலொக் மொபைல் மற்றும் Home Broadband வாடிக்கையாளர்களும் dialog.lk மூலம் இச்சேவையை இலவசமாக செயற்படுத்த முடியும்.