பழைய 2G SIM-களை மேம்பட்ட 4G இணைப்பிற்கு மாற்றுவதன் மூலம் Dialog உங்களது மொபைல் அனுபவத்தை மேம்படுத்துகிறது
மிகச்சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்குவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் பழைய 2G SIM கார்டுகளை படிப்படியாக நீக்கி, வாடிக்கையாளர்களை Dialog இன் அதிநவீன நெட்வொர்க் தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் புதிய SIM இற்கு மாற வழிவகுக்கிறது. இந்த முயற்சியானது மேம்பட்ட நெட்வொர்க் நம்பகத்தன்மை (network reliability), பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு (enhanced security) மற்றும் நவீன மொபைல் வசதிகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த இணைப்பை வழங்குவதற்காக Dialog மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பழைய SIMகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் தங்களது SIM கார்டுகளை எவ்வித கட்டணமுமின்றி புதிய SIM இற்கு (New SIM) upgrade செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த upgrade ஆனது, வளர்ந்து வரும் நெட்வொர்க் தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிப்பதுடன், தரமான குரல் சேவை (voice service), டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவைகளைத் தடையின்றிப் பயன்படுத்துவதையும் உறுதி செய்யும்.
නිතර අසන පැන
Dialog நிறுவனம் இந்த கட்டத்தில் 2G நெட்வொர்க்கை நிறுத்தவில்லை. இருப்பினும், பழைய 2G SIM கார்டுகள் காலாவதியானவை என்பதால் அவை படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. புதிய 4G SIM இற்கு upgrade செய்வது சிறந்த நெட்வொர்க் இணக்கத்தன்மை (network compatibility), மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை அணுகுவதை உறுதி செய்கிறது.
2G SIM இலிருந்து 4G SIM இற்கு மாறுவது மிகவும் முக்கியமானது; ஏனெனில், பழைய 2G தொழில்நுட்பத்தில் எளிதாக ஏற்படக்கூடிய இடைமறிப்பு (interception), மோசடி (fraud) மற்றும் போலி நெட்வொர்க் செயல்பாடுகள் (fake network activity) போன்ற அபாயங்களுக்கு எதிராக 4G ஆனது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பான மொபைல் இணைப்பை வழங்குகிறது. மேலும், இது online banking , QR கொடுப்பனவுகள் மற்றும் government apps போன்ற முக்கியமான டிஜிட்டல் சேவைகளை பாதுகாப்பாக அணுக உதவுகிறது. உங்களது SIM ஐ upgrade செய்வதனால், நீங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைல் பிளான்களைப் (mobile plans) பயன்படுத்துவதோ அல்லது உங்களது தற்போதைய handset மூலம் நெட்வொர்க்கை அணுகுவதோ தடைபடாது.
- இணைய அணுகல் (Internet Accessibility)
- சிறந்த அழைப்புத் தரம் (Better call quality - VoLTE)
- மேம்பட்ட பாதுகாப்பு (Improved security)
- நவீன நெட்வொர்க் அம்சங்கள் மற்றும் எதிர்கால அப்கிரேட்களை அணுகும் வசதி (Access to modern network features and future upgrades)
இல்லை, SIM replacement (மாற்றீடு) செய்த பின்னரும் உங்களது தற்போதைய மொபைல் எண் மாறாமல் அப்படியே இருக்கும்.
இல்லை. தங்கள் SIM ஐ மாற்ற வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு SMS அனுப்பப்படும், அவர்கள் இந்த SIM replacement ஐ முற்றிலும் இலவசமாகச் செய்துகொள்ளலாம்.
இல்லை. உங்களது balance, ஆக்டிவ் பேக்கேஜ்கள் (active packages) மற்றும் இணைப்பின் உரிமையாளர் விபரம் (connection ownership) ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.
நீங்கள் உங்களது SIM ஐ மாற்றவில்லை எனில், பழைய SIMகள் முழுமையாக நிறுத்தப்பட்டவுடன், அது காலப்போக்கில் அழைப்புகள் (calls), SMS மற்றும் இதர மொபைல் சேவைகளை ஆதரிப்பதை நிறுத்தக்கூடும்.
உங்களது SIM மாற்றப்பட வேண்டும் எனில், Dialog நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு உத்தியோகபூர்வ SMS அறிவித்தல் ஒன்று கிடைக்கும்
இந்த புதிய SIM கார்டை நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொலைபேசியிலேயே பயன்படுத்தலாம். நீங்கள் 2G நெட்வொர்க் வசதி மட்டுமே கொண்ட தொலைபேசியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்குத் தொடர்ந்து அழைப்புகள் (calls) மற்றும் SMS சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும், 4G Data வேகம் மற்றும் VoLTE தொழில்நுட்பம் மூலமாக மிகத் தெளிவான உயர்தர அழைப்பு வசதிகளை அனுபவிக்க, உங்களிடம் 4G அல்லது 5G தொழில்நுட்பம் கொண்ட தொலைபேசி இருப்பது அவசியமாகும். ஆனால், நீங்கள் ஏற்கனவே 4G அல்லது 5G தொழில்நுட்பம் கொண்ட தொலைபேசியைப் பயன்படுத்துபவர் எனில், இந்த புதிய SIM கார்டு மூலம் மிக வேகமான Data சேவைகள், உயர் பாதுகாப்பு மற்றும் VoLTE வசதி உள்ள பகுதிகளில் மிகத் தெளிவான அழைப்பு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏதேனும் ஒரு Dialog Experience Centre, Dialog விற்பனை நிலையம் (Retail Outlets) அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் (Authorized stores) உங்களது SIM கார்டை மாற்றிக்கொள்ளலாம்.
உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்யப் பயன்படுத்திய ஏதேனும் ஒரு செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, SIM கார்டில் பதிவுசெய்யப்பட்ட உண்மையான உரிமையாளரே சேவை மையத்திற்கு (Service Centre) நேரில் வருவது கட்டாயமாகும்.
புதிய SIM கார்டு Activate ஆகும் வரை சிறிது நேரத்திற்குச் சேவைகளில் தடை ஏற்படலாம். ஆனால், புதிய SIM கார்டைத் தொலைபேசியில் உட்புகுத்திச் சிறிது நேரத்தில் வழக்கம் போல் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் Dialog விற்பனை நிலையத்திற்கு வந்து SIM கார்டை மாற்றுமாறு கோர வேண்டும். அல்லது, அடையாளத்தை உறுதிப்படுத்தும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர், அந்த SIM கார்டை உங்களது பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம்.
Dialog விற்பனை நிலையத்தில் இந்தச் செயல்முறைக்கு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.
பழைய SIM கார்டில் உள்ள தொலைபேசி எண்கள் தானாக புதிய SIM கார்டுக்கு மாறாது. எனவே, SIM கார்டை மாற்றுவதற்கு முன்னர் உங்களது Contacts எண்களைப் பாதுகாப்பாக வேறு ஒரு இடத்தில் Backup செய்து வைத்துக்கொள்ளவும்.
இது Dialog நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தியாகும். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள நீங்கள் Dialog அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை (Customer Care) அழைக்கலாம்.
SIM கார்டுகளை மாற்றும் வசதி தற்போது Dialog விற்பனை நிலையங்களில் மட்டுமே உள்ளது. எனவே, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள Dialog விற்பனை நிலையத்திற்குச் செல்லவும்.