Body

டயலொக் ஆசிஆட்டா மற்றும் Huawei ஆகியவை சுகாதார அமைச்சுடன் பங்காளர்களாக இணைந்து Telepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்குகின்றது

12 மே 2020         கொழும்பு

 

news-1

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு வல்லுனர்கள் எவ்வாறு தொலைத் தொடர்பு தீர்வுகள் மூலம் ஒன்றிணைக்க முடியும் என்பது பற்றியதாகும்.

news-1

இடமிருந்து வலம்: Huawei Technologies Lanka Co., (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி Liang Yi, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்கடர் அனில் ஜாசிங்ஹ, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் Huawei Technologies Lanka Co., (Pvt) Ltd, Huawei Technologies Co., Ltd, ஆகியவை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சுடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் தேர்தெடுக்கப்பட்ட, 30 மருத்துவமனைகளுக்கு Telepresence இணைப்பு வசதிகளை வழங்கியுள்ளது. இந்த முற்று முழுதான Telepresence தளமானது சுகாதார அமைச்சுக்கு தேசிய eHealth தளத்தின் ஊடாக சுகாதார பராமரிப்பு, சுகாதார கல்வி மற்றும் சுகாதார தகவல் சேவைகளை வழங்க இது உதவுகின்றது.

தொலைதூர மருத்துவ நிபுணர் ஆலோசனைகள், மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி, சுகாதார தகவல் சேவைகள், தொலைதொடர்பு, நேரடி video conferencing போன்ற டிஜிட்டல் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் கள பணியாளர்களுக்கான மொபைல் அணுகல் உள்ளிட்ட தடுப்பு, ஊக்குவிப்பு, நோய் தீர்வு மற்றும் புனர்வாழ்வு பராமரிப்பு வழங்கல் போன்றவை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தீர்வின் முக்கிய நன்மைகளில் ஒன்று என்னவென்றால், அனைத்து நிபுணர்களையும் கொழும்புக்கு வரவழைக்க வேண்டிய அவசியமின்றி இப்போது பிராந்தியங்களில் இருந்தவாரே ஒருங்கிணைக்க முடியும். இது video conferencing, மருத்துவ ஆலோசனைகள் பற்றி விவாதிக்கää உயர் நிபுணர்களின் விளக்கத்திற்கான வசதிகளுக்கு இடையில் முன்னோக்கி சோதனைகளை மேற்கொள்ளல், புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரவை தொடர்ந்து பகிர்வதன் மூலம் நோயாளிகளைக் கண்காணித்தல், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், மருத்துவமனைகள் மற்றும் வசதிகளுக்கு இடையில் ஒருங்கிணைத்தல், தொழில்முறை ஆரோக்கியத்தை மேற்கொள்ளுதல் தொடர்புடைய கல்வி மற்றும் பொது சுகாதார நிர்வாகத்தை நடத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். மேலும், இந்த தீர்வுகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், தொலைதூர தேசிய மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் மருத்துவம் தொடர்பான தகவல்களைப் பயிற்சி வைத்தியசாலையில் உள்ள சிறப்பு வை;தியர்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும்.

Huawei Technologies, Telepresence ஒத்துழைப்பு தீர்வுகளை வழங்குவதோடு, சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தேவையான தீர்வுகளை நிறுவுவதோடு, மூன்று வருட காலத்திற்கு பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை இலவசமாக வழங்கும். டயலொக், மூன்று வருட காலத்திற்கு 30 மருத்துவமனைகளை இணைக்கும் இலவச இணைப்புகளை வழங்குவதன் மூலம் இந்த முயற்சிக்கு தனது ஆதரவினை நல்குகின்றது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சி கருத்து தெரிவிக்கையில் “இந்த நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகளின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முழுமையாக உதவியதற்காக டயலொக் மற்றும் Huawei ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். தற்போது நாடு முழுவதிலுமிருந்து சுகாதாரப் பாதுகாப்பு வல்லுனர்கள் அனைத்து வகையான கலந்துரையாடல்களுக்கும் கொழும்புக்கு வருகை தர வேண்டியுள்ளது. ஆனால் இப்போது இந்த தீர்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் மற்றும் அனைத்து நிபுணர்களையும் கொழும்புக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கலாம் என கூறினார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், சுகாதார அமைச்சுக்கு இந்த Telepresence தீர்வுகளை எளிதாக்கியதற்காக டயலொக் மற்றும் Huawei ஆகியோருக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தேசிய கூட்டு eHealth அமைப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள 30 மருத்துவமனைகளின் சுகாதார வழங்குனர்களை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தவும், எல்லைகளை கடந்து அணுகவும்;, ஒத்துழைப்பு மற்றும் வள பகிர்வுகளை ஊக்குவிக்கும் போது திறம்பட கவனிப்பை வழங்கவும் உதவுகிறது. இந்த கோவிட் -19 தொற்றுநோய்க்கு அவசியமாக தேவைப்படும் இந்த வசதிகளை வழங்கியதற்காக டயலொக் மற்றும் Huawei ஆகியோருக்கு நாங்கள் குறிப்பாக நன்றி கூறுகிறோம்” என தெரிவித்தார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில் “நாடு முழுவதும் உள்ள சுகாதார நிபுணர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வுக்கு வசதியாக மிக சமீபத்திய Telepresence உள்கட்டமைப்பை பயன்படுத்துவதற்கான இந்த முயற்சியில் எங்களுடன் கூட்டிணைந்த Huawei மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்த மையப்படுத்தப்பட்ட eHealth அமைப்பு தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மற்றும் அதற்கு அப்பால் நம் நாட்டிற்கு சேவை செய்ய உதவும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு மேம்பட்ட video conferencing அனுபவத்தின் மூலம் சுகாதார நிபுணர்களிடையே நெருக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது. எங்கள் மக்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிறந்த தொழில்நுட்பத்திற்கான அணுகலை வழங்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

“பௌத்த தம்மபத வசனங்களில் உள்ளவாறு” ஆரோக்கியமே எமது செல்வமாகும்” Huawei Technologies Lanka Co (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Liang Yi கருத்து தெரிவிக்கையில், “புதுமையான ICT தீர்வுகள் மூலம் தற்போதைய சூழ்நிலைகளுடன் போராட உதவ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் கூட்டிணைந்தமை எங்களுக்கு மரியாதையளிக்கின்றது. முழு இலங்கை தேசமும் மகத்தான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நாங்கள் ஒன்றாக சவாலை சமாளித்து ஆரோக்கியமான வாழ்க்கையை இந்த அழகான தீவுக்கு வழங்குவோம்” என கூறினார்.