Body

டயலொக் இலங்கையின் மிகச்சிறந்த மொபைல் வலையமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2018 ஆகஸ்ட் 14ம் திகதி         கொழும்பு

 

Ookla®Speedtest® மூலம் இலங்கையில் அதிதுரித வலையமைப்பு டயலொக் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

news-1

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்திற்கு 2018ம் ஆண்டுக்கான Speedtest® விருதினை Ookla® வழங்கியுள்ளது. மற்றும் Ookla® உலகளாவிய ரீதியில் மொபைல் வலையமைப்பு சோதனைகள், தரவு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்கின்றது. Speedtest ஆனது நாடு முழுவதிலுமுள்ள இலங்கையர்களால் பரிசோதிக்கப்பட்ட வலையமைப்பு வேக விபரங்களை பிரதிபலிப்பதாக அமைகின்றது. மற்றும் மக்கள் அனைவரினதும் விருப்ப தெரிவாக வழங்கப்படும் விருதும் தொடர்ந்து 6 வருடங்களாக சிறந்த இணைய சேவை வழங்கனரான டயலொக் இற்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சராசரி டவுன்லோட் வேகம் 16.80Mbps ஆகும். டயலொக் வாடிக்கையாளர்கள் Speedtest Intelligence® data மூலம் உறுதிப்படுத்திய 21.73Mbps வேகத்தில் இணையத்தினை பயன்படுத்துகின்றார்கள். Ookla வின் Speedtest விருதானது உலகளாவிய ரீதியில் இணைய சேவை மற்றும் மொபைல் வழங்குனர்களுக்கான அங்கீகாரமாகும். Ookla இந்த விருதின் மூலம் சந்தையில் முன்னணி அதிவேக வலையமைப்பு வழங்குனரை தீர்மாணிக்கின்றது. இது 2018 ஆம் ஆண்டு முதல் 6 மாத காலப்பகுதியில் வாடிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட Speedtest மூலம் தீர்மாணிக்கப்படுகின்றது.

Ookla வின் நிர்வாக துணைத்தலைவர் Jamie Steven கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் அதிதுரித வலையமைப்பாக டயலொக் தெரிவு செய்யப்பட்டமைக்கு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அங்கீகாரமானது 2018ம் ஆண்டின் முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டில் வாடிக்கையாளர்களினால் Speedtest இன் தரவுகளின் அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ookla வின் கடுமையான பகுப்பாய்வுகளின் மூலம் வழங்கப்பட்டதாகும் ookla வினால் வழங்கப்பட்ட அறிக்கையானது டயலொக் சிறந்த டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தினை கொண்டதற்காகவும் மிக குறைந்த காலப்பகுதியில் தகவல்களை பரிமாற்றக்கூடிய வேகத்தினை கொண்டதற்கமையவுமே இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டயலொக் 4G மூலமாக Streaming videos, YouTube மற்றும் Dialog ViU போன்ற தளங்களின் ஊடாக வீடியோ உள்ளடக்கங்களை அணுக சிறந்த செயற்றிறனினை கொண்டுள்ளது.

அதிவேக மற்றும் பரந்தளவிலான வலையமைப்பாக திகழ்வதினால் இலங்கை சனத்தொகையில் 77% மக்களை அடைந்துள்ளமையினையிட்டு டயலொக் பெருமிதம் கொள்கின்றது. மேலும் தற்போது டயலொக் 4G தொழில்நுட்பத்தினை தனது Tower களில் செயன்முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 4G LTE on 900Mhz (L900) தொழில்நுட்பத்தை செயன்முறைப்படுத்துவதன் மூலம் வலையமைப்பினை பரந்தளவில் விரிவுப்படுத்தி அதிவேக மொபைல் புரோட்பாண்ட் சேவையினை 87% மக்கள் தொகைக்கு வழங்கியுள்ளது. 2100MHz band மாற்றீடு செய்யும் முகமாக 4G, Massive MIMO, Carrier Aggregation மற்றும் Flexible Bandwidth allocation இல் தனது முதலீட்டினை செய்துள்ளது. இது இணைய பாவனையினை அதிகரிக்க வேண்டிய அவசியமான செயற்றிறனினை சிறந்த முறையில் வழங்குவதனை டயலொக் தொடர்ந்து உறுதி செய்கின்றது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை இயக்க நிர்வாக அதிகாரியான கலாநிதி Rainer Deutschmann கருத்து தெரிவிக்கையில் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலுமுள்ள இலங்கையர்களால் 100,000 தடவைகளுக்கு மேல் பரிசோதிக்கப்பட்டு நாட்டின் மிக வேகமான வலையமைப்பாக டயலொக் சான்றளிக்கப்பட்டுள்ளது. எங்கள் 13 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு உலக தரத்திலான வலையமைப்பை உருவாக்க எங்கள் இடைவிடா முயற்சிகளுக்கான இந்த அங்கீகாரத்தின் மூலம் கௌரவிக்கப்படுகின்றோம். எமது மொபைல் தொலைபேசிகளில் தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களை நாங்கள் அனைவரும் விரும்பி பார்க்கின்றோம். இதற்கான எமது வலையமைப்பானது விரைவாகவும் குறைந்த இடைவெளியில் வீடியோக்களை பகிர்ந்துக்கொள்ள உதவுகின்றமையினால் இலங்கையர் அனைவரினதும் தெரிவாக டயலொக் காணப்படுகின்றது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தொழில்நுட்ப அதிகாரியான பிரதீப் டீ அல்மேதா கருத்து தெரிவிக்கையில் டயலொக் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு டிஜிட்டல் எதிர்காலத்தை செயற்படுத்த அதிவேக இணையத்தின் நன்மைகளை வழங்குவதையே தனது இலக்காக கொண்டுள்ளது. இதற்காக டயலொக் இலங்கையில் சகல இடங்களிலும் 4G யினை விரிவுப்படுத்துதல், L900 கவரேஜினை அதிகரித்தல் மற்றும் சகல டயலொக் வாடிக்கையாளர்களும் 4G சிம் அட்டையினை பயன்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய விடங்களில் கவனம் செலுத்துகின்றோம். VoLTE (4G Voice) அழைப்பு திறனை கொண்ட ஒரே ஒரு வலையமைப்பு டயலொக் ஆகும். இதுவே டயலொக் இன் 4G வலையமைப்பு தரத்திற்கான ஒரு சான்றாகும்.

டயலொக் கடந்த ஆண்டு தெற்காசியாவில் முதன் முறையான 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்தது. தெற்காசியாவில் உள்ள சேவை வழங்குனர்களில் முன்னணியில் திகழ்வது எமது புரோட்பாண்ட் வலையமைப்பாகும். புதுமை மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தின் அறிமுகப்படுத்துவதற்கான டயலொக் அர்ப்பணிப்பு புரோட்பாண்ட் தொழில்நுட்பத்தில் பிராந்திய தலைமைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

டயலொக் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தமது சிம் அட்டைகளை 4G க்கு மேம்படுத்தவதற்கான வசதிகளை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த அதிதுரித 4G சிம் அட்டைகளை டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியதுடன் www.dialog.lk/4Gsim எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ளவும் முடியும்.