Body

‘செனஹே சியபத’ முன் முயற்சியில் மாத்தறை கொடபொல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்கியுள்ளது

31 July 2018         Colombo

 

news-1

Hon. Sagala Ratnayaka, Minister of Project Management, Youth Affairs & Southern Development, officially handing over a newly built home to recipient, M.G. Sanath Asangka, whilst Amali Nanayakkara, Group Chief Marketing Officer, Dialog Axiata PLC and A.S.S.Kumara, Senior Assistant Secretary, Ministry of Defence looks on.

news-1

The eight completed houses under the Senehe Siyapatha 2017 initiative in Kotapola, Matara district.

செனஹே சியபத முன் முயற்சியின் தொடர்ச்சி டயலொக் வாடிக்கையாளர்கள் வழங்கிய தாராளமான நன்கொடைகளுடன் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மூலம் நன்கொடைகள் மும்மடங்காக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் மாத்தறை மாவட்டத்திலுள்ள கொடபொல பிரதேசத்தில் எட்டு வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. செயற்றிட்ட முகாமைத்துவ அமைச்சர்ää இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்களால் சம்ரதாயப்பூர்வமாக வீட்டின் உரிமையாளர்களிடம் வீட்டின் சாவி கையளிக்கப்பட்டது

பாதுகாப்ப அமைச்சின் மூத்த உதவி செயளாலர் திரு. A.S.S குமார, கொட்டபொல பிரதேசத்தின் பிரதேச செயளாலர் G. அமரசிங்க, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவர் காவன் ரத்நாயக்க டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும நிறுவன அதிகாரி ~pயாம் மஜுத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

செனெஹே சியபத செயற்றிட்டத்தின் 2017ம் ஆண்டின் முன்முயற்சியின் முதல் கட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் கோடபொல பிரதேசத்தில் 8 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 2ம் மற்றும் 3ம் கட்டங்களாக முறையே எஹெலியகொடää இரத்தினபுரி மாவட்டத்தில் 25 வீடுகளும் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 4 வீடுகளும் பூர்த்தியாகவுள்ளன. பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் மேற்பார்வையின் கிழ் முப்படை பிரிவுகளால் சிவில் கட்டுமான சேவைகள் வழங்கப்பட்டன. 2017 மே மாதம் 27ம் திகதி இந்த செயற்றிட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக னுயைடழப நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கைகோர்த்துக்கொள்ளும் படி அன்புடன் அழைத்திருந்தது. அதன் பிரதிபலனாக 2 வாரத்தில் 16.53 மில்லியன் ரூபாய் சேகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒப்புக்கொண்டமைக்கு அமைய டயலொக் நிறுவனம் 33.47 மில்லியன் ரூபாவை இணைத்து இந்த செயற்றிட்டத்திற்கு நன்கொடை வழங்கியது. சுஐடு ப்ரபொட்டி பிஎல்சி தங்களின் பங்களிப்பாக 7.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. மொத்தமாக 57.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் முகமாக செனஹே சியபத செயற்றிட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பில் கோகலை மாவட்டத்தில் அரநாயக்க எனும் இடத்தில் 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த செயற்றிட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) நிபந்தனைகளுக்கு அமைய இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன் அதற்காக அவசியமான பங்களிப்பினை வழங்குவதற்காக இலங்கை முப்படையினரும் இணைந்துக்கொண்டார்கள். மேலும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் கண்காணிப்பில் இச் செயற்றிட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது.

இளைஞர் விவகாரங்கள்ää திட்ட மேலாண்மை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க கருத்தினை பின்வருமாறு தெரிவித்திருந்தார். வெல்லத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடும் போது எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியினை தருகின்றது. இத்தகைய சிறப்பு முயற்சிக்காக தங்களின் நேரத்தையும் முயற்சிகளையும் பங்கிட்டுக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கூறினார்.

"கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவினை வழங்கும் முகமாக எமது வாடிக்கையாளர்களும் தங்களுடைய பங்களிப்பினை வழங்கியமைக்காக நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நன்கொடை வழங்கப்பட்டமையானது எமது வாடிக்கையாளர்கள் ஏனையவர்களுக்கு உதவுவதற்காக எந்நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என்பதே இதன் பிரதிபலிப்பாகும். பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்தவ அமைச்சு மற்றும் ஏனைய அலுவலகத்தின் ஆதரவுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குதல் என்பது எமக்கு பெருமையே." என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரியான அமலி நாணயக்கார அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிதி தொகையின் மூலம் பகிர்ந்தளிப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் கணக்காய்வு நிறுவனத்தினால் சுயாதீனமாக கணக்காய்வு செய்யப்பட்டது.