Body

டயலொக் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் 'Govi Mithuru' சேவையை மேம்படுத்துகிறது: இலங்கையின் முதல் AI-அடிப்படையிலான விவசாய ஆலோசனைத் தளம்

இப்போது AI Chat, Voice Bot மற்றும் AI குரல் உதவியாளருடன்

2025 செப்டம்பர் 25         Colombo

 

Dialog Customers Contribute to Little Hearts

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநர், தமது முன்னோடி விவசாய ஆலோசனைத் தளமான Govi Mithuru-இல் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கும் வீட்டுத் தோட்டக்காரர்களுக்கும் நாட்டின் மிகவும் நம்பகமான டிஜிட்டேல் துணையாக தனது பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Dialog AI-இனால் வலுவூட்டப்பட்ட இந்த முன்னெடுப்பு, தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்க்கையை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்கிறது. இது விவசாயிகள், தோட்டக்காரர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஒருங்கிணைந்த, எதிர்காலத்திற்குத் தயாரான விவசாயத்திற்கு அதிகாரமளிக்கிறது. இப்போது Govi Mithuru செயலியில் மும்மொழி AI Chat மற்றும் Voice Bot, படங்களின் அடிப்படையிலான பூச்சி கண்டறிதல் மற்றும் 616 ஊடான இருமொழி AI குரல் அழைப்பு உதவியாளர் ஆகியவற்றுடன், Govi Mithuru ஒவ்வொரு இலங்கையருக்கும் புத்திசாலித்தனமான, எளிதில் அணுகக்கூடிய விவசாய ஆதரவை வழங்குகிறது.

Govi Mithuru கையடக்கச் செயலி மூலம், பயனர்கள் இப்போது மும்மொழி AI Chat மற்றும் Voice Bot-உடன் தொடர்புகொண்டு சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விவசாயம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு, நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட பதில்களை நிகழ் நேரத்தில் பெறலாம். கூடுதலாக, செயலியில் உள்ள புதிய படங்களின் அடிப்படையிலான பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் அம்சம், விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம், AI-ஆல் உருவாக்கப்படும் நோயறிதல்களையும் சிகிச்சை பரிந்துரைகளையும் உடனடியாகப் பெற உதவுகிறது. இந்த இரண்டு அம்சங்களும் முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. இது பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விவசாய ஆலோசனையின் நன்மைகளை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களுக்காகவும், டயலொக் நிறுவனம் 616 என்ற Govi Mithuru IVR சேவையின் மூலம் AI குரல் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அழைப்பை மேற்கொள்வதன் மூலம், பயனர்கள் சிங்களம் அல்லது தமிழில் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் உரையாடல் வடிவில் உடனடிப் பதில்களைப் பெறலாம். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விவசாயத்தின் நன்மைகள், அடிப்படை கையடக்கத் தொலைபேசி இணைப்பை மாத்திரம் நம்பியிருக்கும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூகங்களையும் சென்றடைவது உறுதிசெய்யப்படுகிறது.

இலங்கையின் விவசாயத் துறை குறைந்த பயிர் உற்பத்தி, அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் சரியான நேரத்தில் நிபுணர் ஆலோசனை கிடைப்பதிலுள்ள மட்டுப்பாடுகள் போன்ற சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இந்த இடைவெளிகளை உணர்ந்து, டயலொக் நிறுவனம் 2015-இல் Govi Mithuru-வை நாட்டின் முதல் மொபைல் அடிப்படையிலான விவசாய ஆலோசனை சேவையாக அறிமுகப்படுத்தியது. இன்று, இது 32-க்கும் மேற்பட்ட பயிர்கள், GAP சான்றிதழ் மற்றும் எதிர்கால பயிர் திட்டமிடல் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது. மேலும், Govi Mithuru பெரிய அளவிலான விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், வீட்டுத் தோட்டக்காரர்கள் மற்றும் விவசாயத் தொழில்முனைவோர்களுக்கும் நம்பகமான, உள்ளூர் நிலைமைகளுக்குப் பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் பயிர் பராமரிப்பை மேம்படுத்தவும், இழப்புகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

"தொழில்நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு இலங்கையருக்கும் அதிகாரமளிப்பதே டயலொக்கின் நோக்கம். Govi Mithuru-வின் இந்த வளர்ச்சி, விவசாயத்தில் நிலையான புதுமைக்கான எங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது," என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி-இன் குழு தலைமை நிறுவன அதிகாரி அசாங்க பிரியதர்ஷனா கூறினார்.

புதிய AI அம்சங்களை அனுபவிக்க, பயனர்கள் Google Play Store மூலம் Govi Mithuru செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது 616-க்கு அழைத்து செயற்கை நுண்ணறிவுடனான குரல் உதவியாளரைப் பதிவுசெய்து அணுகலாம். இந்த மேம்பாடுகளின் மூலம், டயலொக் நிறுவனம், Govi Mithuru இலங்கையின் விவசாய மற்றும் வீட்டுத் தோட்ட சமூகத்தினரின் முழுமையான தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு வலிமையான, எதிர்காலத்திற்குத் தயாரான தளமாகத் தொடர்ந்து திகழ்வதை உறுதி செய்கிறது. மேலும் தகவலுக்கு: www.dialog.lk/govi-mithuru எனும் இணையதளத்தைப் பார்வையிடவும்.