Body

Xiaomi 17T 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது டயலொக்

2026 செப்டம்பர் 09         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: ஷஹஸ்தா புலத்சிங்ஹல, பிரிவுத் தலைவர், Abans PLC; சதுர ஜயவர்தன, முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி, Abans PLC; தேஷான் விஜேவீர, சாதனப் பிரிவுத் தலைவர், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஷிரோமி அலி, உதவித் துணைத் தலைவர், கார்ப்பரேட் திட்டமிடல், மூலோபாயம் மற்றும் வளர்ச்சி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கெய்ன் வாங், நாட்டின் தலைவர், Xiaomi Sri Lanka; வித்யா சாஹர், பொது முகாமையாளர், Gnext Sri Lanka; சந்தனி கஜதீர, சந்தைப்படுத்தல் தலைவர், Xiaomi Sri Lanka; நளக்க ரம்புக் பொத்த, பொது முகாமையாளர், செயல்பாடுகள், Stelacom Pvt Ltd; அஷான் ரணசிங்க, பிராண்ட் முகாமையாளர், குழுமச் சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, உயர்தர (Flagship) செயல்திறன், பிரீமியம் Leica கேமரா தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் அதிநவீன இணைப்புச் சேவைகளைக் கொண்ட Xiaomi 17T 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் பரந்து விரிந்துள்ள 1,000க்கும் அதிகமான நேரடி 5G கோபுரங்களுடன் இயங்கும், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் அதிவேக 5G வலையமைப்பான 'Dialog 5G Ultra' ஊடாக இச்சாதனத்திற்கான சேவைகள் முழுமையாக வழங்கப்படுகின்றன.

Xiaomi 17T 5G மாடலானது 12GB RAM மற்றும் 512GB internal storage ஐ கொண்டுள்ளதால், ஒரே நேரத்தில் அலுவல் தேவைகள், பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் content creation என பல வேலைகளையும் தடையின்றிச் செய்ய முடிகிறது. மேலும், இது 6.59 அங்குல AMOLED திரை மற்றும் Android 16 இயங்குதளத்துடன் சிறந்த காட்சி அனுபவத்தைத் தருகிறது.

புகைப்படக் கலைக்காக (Photography), இதில் Leica என்ஜினீயரிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP Main Camera, 50MP Telephoto Camera, 12MP Ultra-Wide Camera மற்றும் 32MP Front Camera ஆகியன இடம்பெற்றுள்ளன. Leica Photographic Styles, Filters, Watermark options மற்றும் Shutter sound ஆகியவற்றைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் புகைப்படங்களை விரும்பியவாறு தனிப்பயனாக்கிக் (Customise) கொள்ளலாம்.

இவற்றுடன் AI Writing, Speech Recognition, Interpreter, Search மற்றும் Creativity Assistant போன்ற Xiaomi HyperAI அம்சங்கள், NFC வசதி, IP68 பாதுகாப்புத் தரம் மற்றும் நீண்ட நேரப் பயன்பாட்டிற்கு ஏற்ற 6500mAh பேட்டரி எனப் பல சிறப்பம்சங்கள் இதில் நிறைந்துள்ளன.

Xiaomi 17T 5G ஸ்மார்ட்போனானது தெளிவான HD ஸ்ட்ரீமிங், அதிவேக பதிவிறக்கங்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் தடையற்ற கேமிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. தமது 4G சாதனத்திலிருந்து 5G சாதனத்திற்கு தரமுயர்த்தும் வாடிக்கையாளர்கள், டயலொக் ஊடாக Xiaomi 17T 5G ஐக் கொள்முதல் செய்யும்போது பிரத்யேகமாக 275GB இலவச டேட்டாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடு முழுவதிலுள்ள 120 க்கும் மேற்பட்ட டயலொக் கிளைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் மூலம் Xiaomi 17T 5G ஸ்மார்ட்போனை ரூ. 224,999 விலையில் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள டயலொக் கிளைக்கு விஜயம் செய்யவும் அல்லது https://dialog.lk/ இணையதளத்தைப் பார்வையிடவும்.