Body

டயலொக் ஆசிஆட்டா 1990 சுவ செரிய அவசர சேவைகளுக்கான உத்தியோகபூர்வ இணைப்பாளராக தனது பங்களிப்பை அளிக்க முன்வந்துள்ளது

ஏப்ரல் 21, 2023         கொழும்பு

 

Suwa Seriya 1990

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, 1990 சுவ செரிய அறக்கட்டளையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்கவிடம் அனுசரணையை கையளிப்பதை படத்தில் காணலாம். மேலும் படத்தில் (இ-வ) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இடர் மற்றும் இணக்கப்பாடு குழுவின் தலைவர் அசங்க பிரியதர்ஷன, மற்றும் 1990 சுவ செரிய அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டி சில்வா ஆகியோரையும் காணலாம்.

இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நாடளாவிய ரீதியில் இலவச முன்-மருத்துவமனை அவசர சிகிச்சை சேவையை வலுவூட்டுவதற்கு உத்தியோகபூர்வ ‘இணைப்பு கூட்டாளராக’ 1990 சுவ செரிய அவசர சுகப்படுத்தல் (எம்பிலியுலன்ஸ்) சேவைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.

1990 சுவ செரிய அறக்கட்டளை அனைத்து இலங்கையர்களுக்கும் அத்தியாவசிய அவசர சிகிச்சையை வழங்கி வருகின்றது, அதற்கமைய நாளொன்றுக்கு 1050+ சிகிச்சைகளை கையாளும் அதே வேளை சராசரியாக 11.40 நிமிடங்கள் பதிலளிக்கும் நேரத்தை செலவிடுவதுடன் மொத்தமாக வருடத்திற்கு 6 மில்லியன் அழைப்புகளுக்கு பதிலளிக்கிறது. இந்த அர்ப்பணிப்பின் மூலம், 1990 சுவ செரிய அவசரகால சுகப்படுத்தல் சேவைகள் இயங்குதளத்தை புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், நாடு முழுவதும் தொடர்ச்சியான இணைப்புக் கட்டமைப்பை வழங்குவதற்கும் மற்றும் அவசரநிலைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள பதிலளிப்பை உறுதிசெய்வதன் மூலமும் சுவ செரிய அவசர சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தலூடாக டயலொக் மேம்படுத்தியுள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், "அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம், மேலும் 1990 சுவ செரிய உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், உயிர்களை காத்திடுவதற்கு தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதற்கமைய, 1990 சுவ செரிய எம்பியூலன்ஸ் சேவையை சிறந்த இணைப்பு உள்கட்டமைப்புடன் மேம்படுத்துவதே எங்கள் இலக்காக அமைந்துள்ளது, இதன்மூலம் இந்த உயிர்காக்கும் சேவையினை நாடு முழுவதிலும் உள்ள அதிகமான மக்களுக்கு அவர்களால் வழங்கக்கூடியதாக இருக்கும்" என்றார்.

1990 சுவ செரிய அறக்கட்டளையின் தலைவர் துமிந்திர ரத்நாயக்க தெரிவிக்கையில், "டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியை எங்களின் உத்தியோகபூர்வ இணைப்புப் பங்காளியாக வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இந்த கூட்டாண்மையானது அவசர சிகிச்சை தேவைப்படுகின்ற இன்னும் அதிகமான இலங்கையர்களை சென்றடைய எங்களுக்கு உதவிகரமாக அமையும். அதற்கமைய டயலொக் வழங்கும் ஆதரவுடன், புதிதாக நிறுவப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விரைவான பதிலளித்தல் நேரத்தை வழங்க முடியும், இறுதியில் எம்மால் இன்னும் அதிக உயிர்களைக் காத்திடுவதற்கு அது வழிசமைக்கும். சமூகப் புத்தாக்கம் மற்றும் பொறுப்புணர்வைத் தூண்டுவதில் டயலொக்கின் இத்தகைய அர்ப்பணிப்புக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம், நமது மக்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வாறு தொடர்ந்தும் ஒன்றாகச் செயல்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்" என்றார்.

சுவ செரிய பற்றிய கூடுதல் விபரங்களை https://www.1990.lk/ மூலம் அணுகலாம்.