Body

தடையற்ற இணைய அணுகலுக்கான unlimited speed-based Fibre plans-ஐ டயலொக் அறிமுகப்படுத்துகிறது

2025 ஆகஸ்ட் 07         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் நம்பர் 1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடற்ற இணைய அனுபவத்தை வழங்க ஒரு புதிய சகாப்தத்திற்கு வழி வகுக்கிறது. அதன் மேம்பட்ட Dialog Fibre வலையமைப்பு மூலம், எந்த Fair Usage Policy (FUP) கட்டுப்பாடுகளும் இல்லாத, முற்றிலும் unlimited மற்றும் speed-based broadband package-களை இப்போது அறிமுகப்படுத்துகிறது.

இணைப்புத்திறனை மறுவரையறை செய்யும் ஒரு முன்னோடி நடவடிக்கையில், டயலொக் கட்டுப்பாடற்ற, முற்றிலும் unlimited data usage-ஐ வழங்கும் புதிய postpaid speed-based Fibre packages-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான broadband திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தரவு வரம்புக்குப் பிறகு வேகத்தைக் குறைக்கும் Fair Usage Policies-ஐ (FUP) பயன்படுத்துகின்றன. ஆனால், அதற்கு மாறாக, இது இலங்கையின் முதல் முற்றிலும் unlimited Fibre broadband வாய்ப்பாகும். இது எந்தவிதமான throttling, quota கட்டுப்பாடுகள், வேகம் குறைப்பு, data caps, அல்லது மறைக்கப்பட்ட வரம்புகள் இல்லாமல் நிலையான, அதிவேக இணையத்தை வழங்குகிறது, வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத online அனுபவத்தை உறுதி செய்கிறது. தற்போது, நான்கு விதமான packages கிடைக்கின்றன: 100 Mbps வேகத்திற்கு ரூ.7,850, 300 Mbps வேகத்திற்கு ரூ.14,850, 600 Mbps வேகத்திற்கு ரூ.27,850 மற்றும் 1000 Mbps வேகத்திற்கு ரூ.39,850 (அனைத்து விலைகளும் வரிகள் தவிர்த்து). ஒவ்வொரு திட்டத்திற்கும் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலம் உண்டு. இந்த சேவையானது, Dialog Fibre இணைப்புள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அவர்களின் பகுதியில் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து வழங்கப்படும்.

இந்த புதிய திட்டங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தடையின்றி streaming, remote work, gaming மற்றும் content creation போன்ற அதிக data தேவைப்படும் காரியங்களைச் செய்பவர்களுக்கு, நிலையான வேகத்தை உறுதி செய்கிறது. எந்த FUP கட்டுப்பாடுகளும் இல்லாததால், வாடிக்கையாளர்கள் மாதம் முழுவதும் ஒரே வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். இது இலங்கையின் broadband சேவைகளில் டயலொக்-இன் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி voice சேவைகளையும் activate செய்துகொள்ளலாம்; இதற்கு மாதாந்திர கட்டணம் எதுவும் இல்லை, அழைப்புகளுக்கு வினாடிக்கு கட்டணம் மட்டுமே விதிக்கப்படும்.

இந்த முற்றிலும் unlimited Fibre broadband packages-களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டயலொக் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற மதிப்பு, வேகம் மற்றும் சுதந்திரத்தை வழங்கி, நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வழிநடத்தும் ஒரு டிஜிட்டல் மாற்ற வழிகாட்டியாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது.

Activate செய்ய, 1777-க்கு அழைக்கவும் அல்லது மேலும் தகவலுக்கு www.dialog.lk/home-broadband/fibre -ஐப் பார்வையிடவும்.