Body

டயலொக் நெட்வொர்க் சேவைகள் 'சிறந்த பணியிடமாக' சான்றளிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 10, 2022         கொழும்பு

 

Dialog Network Services Certified as a Great Workplace

படத்தில் இடமிருந்து வலமாக: டயலொக் நெட்வொர்க் சேவைகள், மக்கள் தலைவர் சுமுது வீரக்கொடி டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் டயலொக் நெட்வொர்க் சேவைகள் பிரிவு இயக்குனர், பிரதீப் டி அல்மேடா, டயலொக் நெட்வொர்க் சேவைகள் பிரிவு பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜனக் பெர்னாண்டோ, Great Place to Work® Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி ஷானிகா ரத்நாயக்க, Great Place to Work® Sri Lanka நிறுவனத்தின் கணக்கு முகாமையாளர் டெபோரா ஜேம்சன், நெட்வொர்க் சேவைகள் மனித வள வர்த்தக பங்குதாரர் யாதவா மாரசிங்ஹ

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி க்கு முழுமையாக உரித்தான துணை நிறுவனமான டயலொக் நெட்வொர்க் சேவைகள் (DBS) ஆனது, உயர் செயல்திறன் மற்றும் பலதரப்பட்ட பணிக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதில் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, இலங்கையில் பணி புரிவதற்கான மிகச்சிறந்த இடம் என்ற சான்றினை பெற்றுள்ளது.

உயர்-செயல்திறன் கொண்ட பணியிட கலாச்சாரங்கள் மீதான உலகளாவிய அதிகாரம், கிரேட் பிளேஸ் டு வொர்க்® நிறுவனம், சிறந்த பணிச்சூழலை அங்கீகரிப்பதற்குத் தேவையான அளவுகோல்கள், கட்டமைப்புகள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குகிறது. இந்த அங்கீகாரம் கிரேட் பிளேஸ் டு வொர்க்® இன் கருத்துக்கணிப்புக்கு பதிலளித்த DNS ஊழியர்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துகிறதுடன் இது ஒரு நிறுவனத்தில் உள்ள நம்பகத்தன்மை, மரியாதை, நேர்மை, பெருமை மற்றும் தோழமை ஆகியவற்றின் மூலம் நம்பிக்கையின் சுகாதார காரணிகளை முதன்மையாக மதிப்பீடு செய்தது. மதிப்பீட்டு மாதிரியானது பணியிடங்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறதுடன் அதன் முடிவுகள் உலகெங்கிலும் உள்ள சிறந்த பணியிடங்களுக்கு நிறுவனங்கள் தங்களைத் தரப்படுத்த அனுமதிக்கின்றது.

இந்த சாதனையின் போது கருத்து தெரிவித்த டயலொக் நெட்வொர்க் சேவைகள் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக் பெர்னாண்டோ, “எங்கள் வலையமைப்புச் சேவை செயற்பாடுகளில், எங்களிடம் உள்ள மிகவும் பெறுமதியான மற்றும் மிகப் பெரிய சொத்து எமது மக்களே. மக்களை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தை உருவாக்குவதில் எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதில் நாங்கள் பெருமையடைகிறோம். கொவிட்-19 தொற்று நோயின் உச்சக்கட்டத்தின் போது நாங்கள் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், புரோட்பாண்ட் தேவையின் எழுச்சிக்கு சேவை செய்ய நீட்டிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைய எங்கள் குழு அதிக அளவிலான படைப்பாற்றலை வெளிப்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்.

டயலொக் நெட்வொர்க் சேவைகள் (பிரைவட்) லிமிட்டட் (DNS), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி க்கு முழுமையாக உரித்தான துணை நிறுவனமாகும், இது இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக நாட்டின் மிகப்பெரிய மொபைல் வலையமைப்பை இயக்குகின்றது. DNS ஆனது இலங்கையின் வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் வலுவூட்டல் மற்றும் செழுமைப்படுத்துவதற்கு பல டிஜிட்டல் இணைப்பை செயல்படுத்துவதற்கு வலையமைப்பு செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு சேவைகளில் சிறந்ததை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.