Body

Dialog Smart Home வீட்டிற்குரிய தடையற்ற Wi-Fi க்கு 'Wi-Fi Mesh' ஐ அறிமுகப்படுத்துகிறது

பெப்ரவரி 1st, 2023         கொழும்பு

 

Dialog Smart Home வீட்டிற்குரிய தடையற்ற Wi-Fi

Dialog Smart Home அதன் எதிர்கால தயார்நிலை தீர்வுகளுக்கமைய சமீபத்திய மேலதிக, 'Wi-Fi Mesh' ஐ அறிமுகப்படுத்தும் அதேவேளை, இது ஒரு முழுமையான மற்றும் மிகவும் பாதுகாப்பான வீட்டு Wi-Fi அமைப்பாக, குறைந்த கவரேஜ் புள்ளிகளை அகற்றுவதன் மூலம் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் Wi-Fi இணைப்பை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

எளிதாக அமைக்கக்கூடிய 'Wi-Fi Mesh' சாதனமானது, முழுமையான Wi-Fi கவரேஜையும் சிறந்த ஒன்லைன் அனுபவத்தையும் உறுதி செய்யும் முகமாக, நவீனகால பயனர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், முழு வீடு அல்லது அலுவலக வயர்லஸ் கவரேஜ்களில் smart home தீர்வுகள்/சாதனங்களின் தடையற்ற இணைப்பையும் இது உறுதி செய்கிறது. Wi-Fi Mesh ஐ கட்டுக்களாக (bundles) வாங்கலாம் மற்றும் Wi-Fi 6- செயல்படுத்தப்பட்ட AX 1800 கட்டுக்கள் உட்பட இரண்டு மாதிரி (models) வடிவங்களில் இது கிடைக்கிறது, AX 1800 கட்டின் விலை ரூ. 34,990 மற்றும் AC 1200 கட்டின் விலை ரூ. 24,990 ஆகும்.. Wi-Fi Mesh சாதனங்களை www.dialog.lk/smarthome ஊடாக அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் கொள்வனவு செய்யலாம்.

பாவனையாளர் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சேர்த்தல் /அகற்றுதல் உட்பட குழந்தைகளை இணையத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் பெற்றோர் கையாளக்கூடிய கட்டுப்பாட்டு அம்சங்கள், பாவனையாளர் பயன்பாடு மற்றும் வேகத்தை விரைவுபடுத்தும் சாதனங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடவுச்சொற்களை தொலைவிலிருந்து மாற்றும் திறன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் தடையின்றி எளிதாகக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் பாவனையாளர்களுக்கு உதவும் பிரத்தியேக Dialog Smart Home மொபைல் App ஐ இந்த புதிய சாதனச் சலுகை உள்ளடக்கியுள்ளது. மேலும், Dialog Smart Home Wi-Fi Mesh ஆனது Dialog Home Broadband உடனான இணக்கப்பாட்டுடன் பிற Broadband அல்லது fiber வலையமைப்பை ஆதரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .

Wi-Fi Mesh அறிமுகம் தொடர்பில் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான டிஜிட்டல் அதிகாரி லசந்த தெவெரப்பெரும கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய காலகட்டத்தில் Wi-Fi இணைப்பு வீடுகள் மற்றும் அலுவலகங்களின் இதயமாக மாறியுள்ளது, மேலும் Wi-Fi ஐ அறிமுகப்படுத்துவதில் டயலொக் மகிழ்ச்சியடைகின்றது. Wi-Fi Mesh என்பது, உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் எந்த அறையிலும் நம்பகமான மற்றும் வலுவான Wi-Fi இணைப்பை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சாதனம் ஆகும் . பிரத்தியேக Smart Home Mobile App உடன், Dialog Smart Home வழங்கும் இந்த சமீபத்திய சலுகையானது நிலையான மற்றும் அதிக பாதுகாப்பான Wi-Fi இணைப்பை எளிதாக்குவதுடன், உங்களின் எதிர்கால Smart Home சாதனங்களுக்கான அடித்தளத்தையும் வழங்குகின்றது.

Dialog Smart Home Wi-Fi Mesh பற்றிய மேலதிக விபரங்களை www.dialog.lk/smarthome ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.