Body

நல்லூர் திருவிழா 2026 இல் பக்தர்களின் யாத்திரை அனுபவத்திற்கு டயலொக் ஆதரவு

2026 செப்டம்பர் 11         கொழும்பு

 

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2026 நல்லூர் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் பயணத்தை மேலும் இலகுவாக்கவும், திருவிழா அனுபவத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட சேவைகள் ஊடாக அவர்களுக்கு ஆதரவளித்தது. இவ்வாண்டு வழங்கப்பட்ட ஆதரவானது நல்லூர் திருவிழாவுடனான டயலொக்கின் தொடர்ச்சியான பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

செப்டம்பர் 7 முதல் 9 வரை நடைபெற்ற நல்லூர் திருவிழா, இலங்கையின் வட பிராந்தியத்தில் நடைபெறும் மிக முக்கிய ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

திருவிழாவின் மூன்று நாட்களிலும், நல்லூர் கோவிலை மானிப்பாய், சாவகச்சேரி மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று முக்கிய பாதைகளுடன் இணைக்கும் இலவச இருவழி இரட்டை அடுக்கு பேருந்து (Double-decker shuttle) சேவைகளை டயலொக் இயக்கியது. இச்சேவை பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர மேலதிக போக்குவரத்து வசதியை வழங்கியது. மேலும், நல்லூர் கோவிலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் டயலொக் இலவச பிரார்த்தனைப் புத்தகங்களை விநியோகித்தது, இதனால் பக்தர்கள் வளாகத்திற்குள் நுழையும் போது புத்தகங்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

2026 நல்லூர் திருவிழாவிற்கான டயலொக்கின் ஆதரவானது, சமூகங்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்திருப்பதற்கும், இலங்கை முழுவதிலும் உள்ள முக்கிய ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு பங்களிப்பதற்குமான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. தனது பங்களிப்பின் மூலம், சமூகங்களை ஒன்றிணைக்கும் மற்றும் நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கும் பாரம்பரியங்களை டயலொக் தொடர்ந்து அங்கீகரித்து மதித்து வருகிறது.