Body

இலங்கையில் முதல் முறையாக Doc990, Amazon’s Alexa ஊடாக டிஜிட்டல் சுகாதார சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

2023 பெப்ரவரி 28         கொழும்பு

 

Doc990 Introduces Digital Health Services

வீட்டிலிருந்தவாறே சுகாதார சேவையை எளிதாக அணுகுவதற்கான அடுத்த எல்லையை அறிமுகப்படுத்துமுகமாக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் அனுசரணையில் இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனரான Doc990, இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் சுகாதார சேவைகளுக்கென Amazon Alexa Voice Command ஐ விரிவுபடுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சமானது வாடிக்கையாளர்களுக்கு Alexa மூலம் எளிய குரல் கட்டளைகளுடன் (voice commands) Doc990 சேவைகளை எளிதாக அணுக உதவுகிறது, இதை Android, iOS மற்றும் Alexa app மற்றும் Alexa - தொடர்புடைய வீட்டு சாதனங்கள் மூலம் அணுகலாம். எனவே, பயனர்கள் Alexa வழியாக இலகுவாக மருத்துவ ஆலோசனைக்காக ஒரு மருத்துவரை முன்பதிவு (செனல்) செய்து கொள்ளலாம். மேலும் அவர்களின் டயலொக் மொபைல் பிற்கொடுப்பனவு மாதாந்த கட்டண பட்டியலில் (பில்) மொத்தக் கட்டணத்தை உடனடியாகச் சேர்க்கலாம், அல்லது அவர்களின் முற்கொடுப்பனவு இருப்பிலிருந்து கழிப்பதன் மூலமோ அவர்களின் கிரெடிட்/டெபிட் கார்ட், genie, eZ Cash போன்றவற்றின் மூலமோ செலுத்தலாம்.

இந்த சேவையை அறிமுகப்படுத்திய நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதான டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ, "தொழில்நுட்பத்தின் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் நவீன பயனாளிகளின் வளர்ந்து வரும் டிஜிட்டல் வாழ்க்கை முறைக்கு உதவும் சுகாதார சேவைக்கான அணுகலை எவ்வாறு மேம்படுத்துவது என்பன தொடர்பிலான தேடலில் Doc990 எப்போதும் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில், Alexa குரல் கட்டளைகள் (Alexa voice commands) ஊடாக Doc990 சேவைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம், ஏனெனில் இந்த அம்சம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சுகாதார சேவைகளை வசதியாக அணுகுவதற்கு உதவுகிறது, இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பின் நிமித்தம் அதிநவீன,ஒருங்கிணைந்த, மின் வணிக (e-commerce) உட்கட்டமைப்பை செயல்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் ஓர் இயங்குதளமாக இருப்பதில் டயலொக்கின் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது" என்றார்.

Digital Health Private Limited மூலம் செயல்படுத்தப்படும் Doc990, பயனர்களுக்கு அவர்களது மொபைல் ஃபோன்களின் வசதிக்கேற்ப மருத்துவ சேவைகளை வழங்குகிறது. 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் துணை நிறுவனமான Doc990, 140க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 5,000க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் பயனர்களை இணைக்கின்றது.இதனை www.doc.lk ஊடாகவும், 990 க்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவும் அல்லது Doc990 app ஊடாகவும், Android மற்றும் iOS ஊடாகவும் அணுகிட முடியும். Doc990 ஆனது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைகள் உட்பட பலவிதமான மருத்துவ சேவைகளை வழங்கும் அதேவேளை பயனர்கள் தகுதியான மருத்துவர்கள், தரமான மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் வீட்டிலிருந்தவாறே டிஜிட்டல் ஹெல்த் தொழில்நுட்பம் (digital health tech) மூலம் இணைவதற்கான சேவைகளையும் வழங்குகின்றது.