Body

டயலொக் வழங்கும் அனைத்து புதிய Power Planகளுக்கும் பல பிரத்தியேகமான அனுகூலங்கள்!

2023 மே 25         கொழும்பு

 

Dialog Club Vision Members Enjoy Exclusive Screening of Ponniyin Selvan 2

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தனது பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் அதிகபட்ச சேவையை வழங்குவதற்காக பல பிரத்தியேக அனுகூலங்களை வழங்கும் புதிய மேம்படுத்தப்பட்ட Power Plan பக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, அனைத்து புதிய Power Plan களுக்கும் நீங்கள் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு இலவசமாக Roll-over செய்யலாம், உங்கள் அன்புக்குரியவர்களுடன் 50 GB வரை டேட்டாவைப் பகிரலாம் (Data Share), மாதத்திற்கு ரூ.120க்கு Unlimited YouTube ஐ அனுபவிக்கலாம், டயலொக் வலையமைப்பிற்குள் மாத்திரம் கிடைக்கின்ற தற்போதைய Unlimited Calls வசதியை ரூ. 100 இற்கு எந்தவொரு வலையமைப்பிற்குமான Unlimited Calls ஆக upgrade செய்யவும் முடிவதுடன் Smartphones மற்றும் சாதனங்களை வாங்கும் போது பிரத்தியேகமான தள்ளுபடிகள் உட்பட பல நன்மைகளுடன் இணையற்ற பிற்கொடுப்பனவு அனுபவத்தையும் இது வழங்குகிறது.

இவற்றுள் வெவ்வேறு Plan களை தேர்வுசெய்ய முடிவதுடன் நான்கு Plan களுக்கும் D2D Unlimited calls மற்றும் 1000 SMS கள் வழங்கப்படும். அத்துடன் தமது Data தேவைக்கேற்ப பொருத்தமான Dialog Power Plan ஐ தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. ரூ.600 மற்றும் அதற்கு மேல் தேர்வு செய்ய கூடியவாறு Power Planகள் உள்ளன, அதன்படி ரூ.600 plan இல் 5GB Data, ரூ.800 plan இல் 10GB Data, ரூ.1200 plan இல் 20GB Data மற்றும் ரூ.2000 plan இல் 50GB Data பெறலாம். வாடிக்கையாளர்கள் dialog.lk மூலம் புதிய இணைப்பைப் பெற முடியும் அல்லது MyDialog App மூலம் upgrade செய்ய முடியும்.

இதற்கு மேலதிகமாக, Power Plan அதன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு வாய்ந்த "7 Star" loyalty தர நன்மைகளுடன், Smartphones, புதிய டயலொக் இணைப்புகள் (Dialog Television மற்றும் Home Broadband) உட்பட Dongles/Wingles ஆகியவற்றிற்கு பிரத்தியேக விலைக்கழிவுகள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக, Dialog விற்பனை பிரதிநிதிகளிடமிருந்து சந்தாதாரர்கள் பிரத்தியேக சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளையும் பெறுவர்.

டயலொக் Power Plan பற்றிய மேலதிக விபரங்களுக்கு https://dlg.lk/3Id6x6m ஐப் பார்வையிடவும்.