Body

டயலொக், Digital Trust Awards 2024 இல் தொழில்நுட்ப மீண்டெழுகைக்கான (Technology Resilience) ISACA அங்கீகாரத்தை பெற்றது

2024 ஜூலை 05         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

படத்தில் இடமிருந்து வலமாக: ஜெஃப்ரி பெரேரா, இணை ஆலோசகர், வலையமைப்பு நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப Cloud தொழிற்பாடுகள், உட்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் தொழிற்பாடுகள், டயலாக் ஆசிஆட்டா பிஎல்சி; அஷேன் ஜயசேகர, துணைத் தலைவர், ISACA இலங்கைக் கிளை; சுபாஷ் சந்திர போஸ், நாட்டுப் பணிப்பாளர், BPC வங்கி தொழில்நுட்பங்கள்; தர்மசிறி குமாரதுங்க, செயலாளர், தொழில்நுட்ப அமைச்சு; தருஷி புஷ்பகுமார, சிரேஷ்ட இணைத் தலைவர் - இணைய பாதுகாப்பு, நிர்வாகம் மற்றும் இணக்கப்பாடு, டயலாக் ஆசிஆட்டா பிஎல்சி; பராஷ் சமத், தகவல் பாதுகாப்புத் தலைவர், டயலாக் ஆசிஆட்டா பிஎல்சி; அசங்க ப்ரியதர்ஷன, நிலைபேற்றுத்தன்மைத் தலைவர் மற்றும் குழு இடர் மற்றும் இணக்கப்பாட்டுத்தலைவர், டயலாக் ஆசிஆட்டா பிஎல்சி; லக்‌மல் எம்புல்தெனிய, தலைவர், ISACA இலங்கைக் கிளை.

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 2024 ஜூன் 13ந்திகதி நடைபெற்ற அங்குரார்ப்பண Digital Trust Awards நிகழ்வில் தொழில்நுட்ப மீண்டெழுகைக்கான (Technology Resilience) விருதை ISACAவிடமிருந்து பெற்றுக்கொண்டது. ISACA என்பது தகவல் அமைப்பு / தகவல் தொழில்நுட்ப ஆளுகை, இடர், கணக்காய்வு, இணையப்பாதுகாப்பு, மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் 50 ஆண்டுகாலமாக உலகளாவிய ரீதியில் முன்னணி வகித்து வருகிறது. இந்நிகழ்வு துறை முன்னோடிகள், கொள்கை வகுப்பாளர்கள், இணையப்பாதுகாப்பு நிபுணர்கள் இவர்களுடன் ஆளுகை, இடர், இணக்கப்பாடு, மற்றும் தனியுரிமை சார்ந்த வல்லுனர்களையும் ஒன்று திரட்டி வளரும் சவால்கள் குறித்து கலந்துரையாடி சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து, வியூகங்களை முன்வைத்து டிஜிட்டல் நம்பகத்தன்மையை பல்வேறு துறைகளுக்கும் விஸ்தரித்தது.

“ISACA அமைப்பிலிருந்து தொழில்நுட்ப மீண்டெழுகைக்கான விருதைப் பெறுவது, தொழில்நுட்ப புதுமை மற்றும் மீண்டெழுகைக்காக நாம் காட்டும் அர்ப்பணிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். இவ்விருது, எங்களின் டிஜிட்டல் தளங்களை வலுவானதும் பாதுகாப்பானதுமாக மாற்றும் பணியில் தொடர்ந்து உழைத்திட ஓர் உத்வேகத்தை அளித்திருக்கிறது” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்.

இந்த விருது பெறுவதற்கான தகுதிகள், பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதில் முகாமைத்துவத்தின் அர்ப்பணிப்பு மற்றும் வலுவான, மீண்டெழுகைமிக்க (Resilient), பாதுகாப்பான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை பராமரிப்பது என்பனவாகும். இவை ஏழு உள்ளூர் நிபுணர்கள் குழு மூலம் மதிப்பிடப்பட்டன. இந்நடுவர் குழாத்தில் வலையமைப்பு உட்கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் சட்டம், இடர் முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் நிபுணர்களாக உள்ளவர்கள் இடம்பிடித்திருந்தனர். ISACA இலங்கைக் கிளை நிகழ்ச்சியில் குறிப்பிட்டவாறு, கொழும்பில் இந்த நிகழ்வை நடத்துவதன் மூலம், டிஜிட்டல் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இப்பிராந்தியம் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதுடன், ஆசியா முழுவதும் டிஜிட்டல் சூழலமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் தொடர்புகளை பேணல், அறிவு பரிமாற்றம் மற்றும் கூட்டுறவுகளுக்கான தளமாக செயல்படுகிறது என்பதையும் குறிப்பிட்டுக்காட்டுகிறது.

தனது பங்குதாரர்களிடையே மேன்மை, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை உறுதியோடு தொடர்ந்து பேண டயலொக் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறது.