Body

டயலொக், MAS மற்றும் Hemas ஆகியவற்றின் ஒன்றிணைவில் ‘மனிதநேய ஒன்றிணைவு’ அவசர நிவாரணம் வழங்கல் ஆரம்பம்!

100,000க்கும் மேற்பட்ட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சர்வோதய உடன் இணைந்து அவசர நிவாரணம்

ஏப்ரல் 20th, 2022         கொழும்பு

 

Manudam Mehewara Initiative by Dialog

25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக அவசரகால நிவாரண விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சவால்மிகுந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் நோக்கில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் PwC Sri Lanka ஆகியன இணைந்து ‘மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண திட்டத்தினூடே அவசர நிவாரணங்களை வழங்கும் பணிகளை கூட்டாக ஆரம்பித்துள்ளன.

பாதிப்பிற்குள்ளாகியுள்ள சமூகங்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில், ‘மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண திட்டமானது அதன் நிறைவேற்று பங்காளரான சர்வோதய மற்றும் கணக்காய்வு பங்காளரான PwC Sri Lanka உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட பங்காளர்களுடன் கைகோர்த்தவாறு, டயலொக், MAS மற்றும் Hemas ஆகிய நிறுவனங்களின் நிதியுதவி பங்களிப்பில் வழங்குகின்ற மேற்படி ‘மனிதநேய ஒன்றிணைவு' நிவாரணத்தினூடே, 100,000 க்கும் மேற்பட்ட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆழ்ந்த வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குகின்றது. மேலும், சுயாதீன தொலைக்காட்சி, சியத்த, ஸ்வர்ணவாஹினி, டிவி தெரண மற்றும் வசந்தம் ஆகியன ஊடக பங்காளிகளாக இந்த முயற்சியில் இணைந்துள்ளன.

மேற்படி ‘மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண திட்டத்தின் மூலம் 25 மாவட்டங்களில் அவசர நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை மேற்படி ‘மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண வேலைத்திட்டமானது 60-90 நாட்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மனிதநேய ஒன்றிணைவு' அவசரகால நிவாரண விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த அனைத்து பெறு நிறுவனங்களையும் இந்த முயற்சியுடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைக்கின்றது.