'Play for a Cause' 2023 ஆம் நடப்பு ஆண்டில் நான்கு பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆதரவளிக்கின்றது
2023 மார்ச் 27 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் டயலொக் என்டர்பிரைஸ் பிரிவு குழும பிரதம அதிகாரி நவீன் பீரிஸ்m 143வது Battle of the Blues இன் அனுசரணை காசோலையை கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அதிபர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை மார்க் பில்லிமோரியா, மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர், ஆர்.எம்.எம். ரத்நாயக்க, மற்றும் உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் நான்கு பாடசாலைகளின் அங்கத்தவர்கள் மற்றும் ரோயல் - தோமியன் கூட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் நிர்வாகக் குழு ஆகியோரின் முன்னிலையில் கையளித்தார்
'நீலங்களின் சமர்' (Battle of the Blues) போட்டிகளையிட்டு முன்கொண்டு செல்லப்படுகின்ற 'Play for a Cause' (ஒரு காரணத்திற்காக விளையாடுதல்), செயற்றிற்றத்திற்கமைய, கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி இடையேயான வருடாந்த கிரிக்கெட் போட்டியையொட்டி அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய நான்கு பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய, கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்னாயக்க மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை மார்க் பில்லிமோரியா ஆகியோரின் தலைமையில் றோயல் - தோமியன் கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டுக் குழுவினால் மாதம்பகம மத்திய கல்லூரி, காலி ஸாரியா கல்லூரி, ஹம்பாந்தோட்டை சேவமுக்தா வித்தியாலயம், பொலன்னறுவை மிஹிந்தலை வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மேற்படி கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படுவதற்கு தகுதியான பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டவையாகும்.
பாடசாலைகளில் கிரிக்கெட் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, போட்டியில் பெறப்படுகின்ற ஒவ்வொரு ஓட்டத்திற்கும் 1,000 ரூபாவையும் , வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 10,000 ரூபாவையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தமை நினைவுகூரத்தக்கது. அதன்படி, கடந்த ஆண்டு நடந்த உற்சாகமான போட்டியின் போது 834,000 ரூபாவை 'Play for a Cause' உறுதிமொழிக்கமைய டயலொக் வழங்கியது. மேலும் , 'Play for a Cause' உறுதிமொழி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 40க்கும் மேற்பட்ட தகுதிபெற்ற பாடசாலைகளுக்கு 8,442,800 ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் Esports அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, பிரீமியர் கால்பந்து, பராலிம்பிக் விளையாட்டுக்கள், இராணுவ பரா விளையாட்டுகள், மற்றும் உலக பராலிம்பிக் விளையாட்டுகளுக்கு இலங்கை அணியை வலுப்படுத்துதல் ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி இலங்கை விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றது.