மத்திய ஆசிய கிண்ண மகளிர் கரப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை தேசிய மகளிர் அணி பலம் பொருந்திய அணியாக களம் காணுகின்றது
2023 மே 18 கொழும்பு
பின் வரிசை (இ-வ) அப்ஸரா செவ்மாலி, அயேஷா மதுரிகா, கவீஷா லக்ஷானி, ஜகத் சேனதீர - பயிற்றுவிப்பாளர், சார்ளஸ் திலகரத்ன - தலைமை பயிற்றுவிப்பாளர், சந்திம அகரவிட்ட - உதவி பயிற்றுவிப்பாளர், திலினி வாசனா, காஞ்சனா சதுரானி
முன்வரிசை (இ-வ) டிலுஷா சஞ்சீவனி, ப்ரீதிகா ப்ரமோதனி, இரேஷா உமயங்கி, அர்னா வசந்தி, பியுமி பாஷினி, ஜே. திலகராஜ், சச்சினி சாருகா, நதுனி ஹிமன்சலா
இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா, நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெறும் மத்திய ஆசிய மகளிர் சவால் கிண்ணத்திற்கான போட்டிகளில் இலங்கை தேசிய மகளிர் கரப்பந்து அணிக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
மே மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி ஆறு நாட்களுக்கு இடம்பெறவுள்ள இப்போட்டிகளில் 'B' பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மகளிர் கரப்பந்து அணி மே மாதம் 22ஆம் திகதி உஸ்பெகிஸ்தானை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது, அதனை தொடர்ந்து 23ஆம் திகதி கஜகஸ்தானையும், 24ஆம் திகதி மாலைதீவையும் எதிர்கொள்ளும்.
'A' பிரிவில் இடம்பெற்றுள்ள போட்டியை நடத்துகின்ற மற்றும் நடப்பு செம்பியனான நேபாளம் அணி கிர்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இறுதிப் போட்டி மே 28 ஆம் திகதியன்று இடம்பெறும்.
டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.