பிரத்தியேக கொள்கை தொடர்பான அறிவித்தல்


பதிப்பு: 2.0
இற்றைப்படுத்திய திகதி: 2020 டிசம்பர் 28

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள்/இணை நிறுவனங்கள் (இதனகத்துப் பின்னர் கூட்டாக "டயலொக்" "எங்களுக்கு" "நாம்" அல்லது “எங்கள்" என குறிப்பிடப்படுகின்ற) எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், வணிகப் பங்காளிகள், வருகைதருவோர்கள், வேலைவாய்ப்பு பெறுபவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பிரத்தியேக தரவுகளையும் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் /அல்லது வணிக பங்காளர்களுக்காக பணிபுரியும் அல்லது அவர்கள் சார்பில் செயற்படும் தனிநபர்களின் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள (ஒட்டுமொத்தமாக “தரவு விடயம்" என குறிப்பிடப்படும்) பிரத்தியேக தரவுகளைப் பாதுகாப்பதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.

டயலொக் நிறுவனத்தில் பிரத்தியேக கொள்கை தொடர்பாக நாங்கள் தீவிரமாக கருத்தில்கொள்கிறோம் மேலும் எங்களின் அனைத்துச் செயல்பாடுகளும் உங்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து வெளிப்படையாக இருக்கின்ற எங்கள் நம்பிக்கை தத்துவங்களினால் ஆதரவளிக்கப்படுகின்றன, உங்கள் பிரத்தியேக தரவுகளை நாம் பயன்படுத்துவதில், வலுவான இணையப் பாதுகாப்பு நடைமுறைகள் உட்பட மற்றும் பிரத்தியேக தரவு பரிமாற்றம் தேவைப்படும்போது உரிய கவனத்தைச் செலுத்துகின்றோம்.

உங்கள் பிரத்தியேக தரவுகளைச் செயன்முறைப்படுத்துகின்ற போது டயலொக் நிறுவனம் பின்வருவனவற்றை உறுதி செய்யும்:

  1. உங்களின் பிரத்தியேக தரவுகள் சட்டரீதியாகவும் வெளிப்படையான முறையிலும் செயன்முறைப்படுத்தப்படும், இதன் மூலம் உங்கள் பிரத்தியேக தரவுகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து செயன்முறை நடவடிக்கைகளையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

  2. உங்கள் பிரத்தியேக தரவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மாத்திரமே எங்களால் சேகரிக்கப்படும், மேலும் அந்த நோக்கங்களுடன் பொருந்தாத வகையில் மேலும் செயன்முறைப்படுத்தப்படமாட்டாது.

  3. கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட மற்றும் தேவைப்படும் பிரத்தியேக தரவுகளை மாத்திரமே நாங்கள் சேகரிப்போம், மேலும் தேவைப்படுவதை விட அதிகமான பிரத்தியேக தரவுகளைச் சேகரிக்க மாட்டோம்.

  4. உங்களின் பிரத்தியேக தரவுகள் துல்லியமாக இருக்கும் மற்றும் தேவைப்படும் இடங்களில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.

  5. உங்கள் பிரத்தியேக தரவுகள், செயன்முறைப்படுத்தப்படுகின்ற நோக்கங்களுக்காக அவசியமானதை விட, உங்கள் பிரத்தியேக தரவுகளை அடையாளம் காண்கின்ற முறையில் வைக்கப்படமாட்டாது.

  6. பிரத்தியேக தரவுகளின் பொருத்தமான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உங்கள் பிரத்தியேக தரவுகள் செயன்முறைப்படுத்தப்படும்.

இந்த பிரத்தியேக கொள்கை தொடர்பான அறிவித்தல் (“பிரத்தியேக அறிவித்தல்”) பின்வருவனவற்றை விளக்குகிறது:

  1. என்ன வகை பிரத்தியேக தரவுகள் எவ்வாறு எங்களால் சேகரிக்கப்பட்டு மேலும் எங்களால் எவ்வாறு செயன்முறைப்படுத்தப்படுகின்றது:

  2. எந்த நோக்கங்களுக்காக இது எங்களால் சேகரிக்கப்பட்டு மேலும் செயன்முறைப்படுத்தப்படுகின்றது.

  3. பிரத்தியேக தரவுகளின் மூலங்கள் (ஏதேனும் இருந்தால்);

  4. பிரத்தியேக தரவுகள் யாருக்கு வெளிப்படுத்தப்படுகிறது மற்றும்

  5. உங்கள் பிரத்தியேக தரவுகளை எவ்வாறு அணுகுவது மற்றும் புதுப்பிப்பது மற்றும் பிரத்தியேக தரவுகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு எங்கு செல்ல வேண்டும்.

மற்றொரு நபரின் பிரத்தியேக தரவுகளை நீங்கள் எங்களுக்கு வழங்கினால், அந்த நபரின் பிரத்தியேக தரவுகளை எங்களுக்கு வழங்குவதற்கு முன்பு அவரிடமிருந்து நீங்கள் ஒப்புதலைப் பெற்றுள்ளீர்கள் என்பதை இதன் மூலம் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இந்த பிரத்தியேக அறிவித்தலில் உள்ள ‘உங்கள் பிரத்தியேக தரவுகள்’ பற்றிய குறிப்புகளில் நீங்கள் எங்களுக்கு வழங்கும் அத்தகைய தனிநபரின் பிரத்தியேக தரவுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

இந்த பிரத்தியேக அறிவித்தலை நீங்கள் பெறும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளுக்கான நியதிகள் மற்றும் நிபந்தனைகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும். இந்த அறிவிப்புக்கும்; அத்தகைய குறிப்பிட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால், அத்தகைய முரண்பாட்டின் அளவிற்கு இந்த அறிவித்தல் நடைமுறையில் இருக்கும்.

புதிய அறிவித்தலை இங்கே மற்றும்/அல்லது எங்கள் ஏனைய தளங்களில் இடுகையிடுவதன் மூலம் நாங்கள் காலத்துக்கு காலம் இந்த பிரத்தியேக அறிவித்தலை திருத்தலாம், மாற்றலாம், மேம்படுத்தலாம் அல்லது புதுப்பிக்கலாம். மேலும் எமது உற்பத்திகள் மற்றும்/அல்லது சேவைகள் என்பவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இதுபோன்ற மாற்றங்கள் மேம்படுத்தல்கள் அல்லது புதுப்பிப்புகளுக்கு நீங்கள் கட்டுப்பட்டிருக்கிறீர்கள்

குழந்தைகளைப் பற்றிய பிரத்தியேக தரவுகள்

நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் பிரத்தியேக தரவுகளை (உதாரணமாக, உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை) எங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர், உங்கள் பெற்றோர், பாதுகாவலர் அல்லது உங்கள் மீது பெற்றோருக்குப் பொறுப்புள்ள நபரின் ஒப்புதலைப் பெற்றுள்ளீர்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாங்கள் என்ன வகையான பிரத்தியேக தரவுகளை சேகரிக்கிறோம்?

நாங்கள் சேகரிக்கும் அல்லது பெற்றுக் கொள்ளும் பிரத்தியேக தரவுகளின் வகைகள் உங்களுடன் எங்களின் உறவைப் பொறுத்து மாறுபடலாம் மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

  1. அ. வாடிக்கையாளர்களுக்காக

    • தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);

    • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு;, சாரதி அனுமதிப்பத்திரம், ஏனைய திகதி, இணைய வரைமுறை முகவரிகள் (IP Addresses), இணைய குக்கீகள் (Cookies) போன்றவை)

    • குடித்தொகை தகவல்கள் (வயது, திருமண நிலை, பாலினம் போன்றவை);

    • புகைப்படங்கள், போட்டிகள் அல்லது பரிசு வென்ற போட்டிகளுக்கு நீங்கள் சமர்ப்பிக்கக் கூடிய அல்லது எங்கள் தளங்களில் பதிவேற்றக் கூடியவை

    • இருப்பிடத் தகவல்கள்;:

    • உற்பத்தி பிரத்தியேக தகவல்கள் (விருப்பத்தேர்வுகள், உங்கள் சேவைத் திட்டத்தில் சேர்க்க நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், கடன் வரம்பு போன்றவை)

    • நிதித் தகவல்கள் (நேரடிப் பற்று மற்றும் தொடர்புடைய பட்டியல் செலுத்தும் வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவை);

    • சாதன கணக்கு தகவல்கள் (அழைப்பு பயன்பாடு, சாதன அடையாள இலக்கங்கள்;, கணக்கு நிலுவைகள், பரிவர்த்தனை வரலாறு, கடன் தகவல்கள், பட்டியல் செலுத்துதல் மற்றும் லொயல்டி புள்ளிகள் போன்றவை);

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) அமைப்பால் எடுக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் காட்சி மற்றும்

    • எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு மையங்களுக்கு நீங்கள் மேற்கொள்கின்ற அழைப்புகளின் பதிவுகள்.

  2. ஆ. பங்குதாரர்களுக்காக:

    • தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை)

    • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறப்புச் சான்றிதழ், திகதி போன்றவை)

    • குடித்தொகை தகவல்கள் (திருமண நிலை, பாலினம் போன்றவை);

    • தேசியம் மற்றும் வதிவு

    • வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு இலக்கம், வங்கி கிளை மற்றும் வங்கி போன்றவை);

    • பயனாளி/அடுத்த உறவினர் விவரங்கள்;

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) அமைப்பால் எடுக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் காட்சி

    • நீங்கள் எங்களுக்கு மேற்கொண்ட அழைப்புகளின் ஏதேனும் பதிவுகள்; மற்றும்

    • மத நம்பிக்கைகள்.

  3. இ. வணிக பங்காளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்காக

    • தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);

    • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறந்த திகதி, இணைய வரையறை முகவரிகள், இணைய குக்கீகள் போன்றவை);

    • வணிகத் தகவல்கள் (நிறுவனத்தின் பெயர், தொழில்தருனரின் பெயர், புதவி, திணைக்களம் போன்றவை); மற்றும்

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையால் எடுக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் காட்சி.

  4. ஈ. வருகை தருவோர்களுக்காக (எங்கள் வளவு/அலுவலகம் /நேரலை தளங்களில் ஏதேனும் ஒன்றுக்கு)

    • தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்; போன்றவை);

    • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு சாரதி அனுமதிப்பத்திரம்;, பிறந்த திகதி, இணைய வரையறை முகவரிகள், இணைய குக்கீகள் போன்றவை);

    • வணிகத் தகவல்கள் (நிறுவனத்தின் பெயர், தொழில்தருனரின் பெயர், பதவி, திணைக்களம் போன்றவை);

    • இனம்;

    • தேசியம்;

    • மற்றும்

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையால் எடுக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் காட்சி.

  5. உ. வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் மற்றும் பணியாளர்களுக்காக:

    • தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்றவை);

    • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு சாரதி அனுமதிப்பத்திரம்;, பிறந்த திகதி, இணைய வரையறை முகவரிகள், இணைய குக்கீகள் போன்றவை);

    • கல்வி மற்றும் தொழில்முறை தகவல்கள் (கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் மற்றும் உரிமங்கள் போன்றவை)

    • வேலைவாய்ப்பு வரலாறு (முந்தைய புதவி, முந்தைய தொழில்தருனர்;, நடுவர்கள் போன்றவை);

    • உயிரியல் அடையாளங்கள் (பயோமெட்ரிக்ஸ்);

    • பாலினம்;

    • இனம்;

    • தேசியம்;

    • வயது

    • அவசர தொடர்புத் தகவல்கள் (பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம்;, மின்னஞ்சல் முகவரி போன்றவை)

    • திருமண நிலை

    • பயனாளி/அடுத்த உறவினர் விவரங்கள்;

    • நிதி தகவல்கள் (நேரடி வைப்பு கணக்கு போன்றவை)

    • தகவல் தொலைத்தொடர்பு தகவல்கள் (பதிவு கோப்புகள், மென்பொருள் /வன்பொருள் இருப்புக்கள்;, பயனாளர் செயல்பாடுகள் போன்றவை);

    • புகைப்படங்கள்;

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையால் எடுக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் காட்சி.

    • மேலதிக வேலைவாய்ப்பு வரலாறு (செயலாற்றுகை மற்றும் ஒழுக்காற்றுப் பதிவுகள், மருத்துவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் வருடாந்த விடுமுறை பதிவுகள், சம்பள விவரங்கள் போன்றவை);

    • ஏதேனும் இருந்தால்;, உங்கள் உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் முடிவுகள்,

    • தத்துவ மற்றும் அரசியல் நோக்குகள் அல்லது இணைப்புகள்;

    • மத நம்பிக்கைகள்; மற்றும்

    • குற்றப் பதிவு மற்றும் பொலிஸ் அறிக்கைகள்.

நாங்கள் சேகரிக்கும் மேலதிக பிரத்தியேக தரவுகள்:

போர், பயங்கரவாதம், கலவரங்கள், இயற்கைப் பேரிடர் அல்லது நோய் பரவல் போன்ற நெருக்கடி காலங்களில் நாம் சேகரிக்கலாம்:

  • உங்கள் உடல்நலம் மற்றும் உடல் நிலை

  • உங்கள் வீட்டில் உள்ள தனிநபர்களின் உடல்நிலை

  • உங்கள் உடல் நலப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் முடிவுகள் ஏதேனும் இருந்தால்;

  • உங்கள் உடல் வெப்பநிலை

  • உங்கள் இடம்; மற்றும்

  • அரசியல் நோக்குகள் அல்லது இணைப்புகள்.

உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எப்போது சேகரிப்போம்?

உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் சேகரிக்கலாம் அல்லது பெற்றுக்கொள்ளலாம்::

  1. அ. வாடிக்கையாளர்களுக்காக

    • நீங்கள் எங்கள் வலையமைப்பு, தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் போது (எங்கள் அழைப்பு மையங்கள், விற்பனையாளர்கள்; மற்றும் விற்பனை ஊடகங்கள் உட்பட).

    • நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது அல்லது எங்கள் வலையமைப்பு, தயாரிப்புகள் மற்றும் /அல்லது சேவைகள் அல்லது வேறு ஏதேனும் நோக்கங்களுக்காகப் பதிவு செய்யும் போது.

    • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள், ஏனைய டிஜிட்டல் ஊடகங்கள்;, மின்னஞ்சல்கள், கேள்விக் கொத்துக்கள் அல்லது கருத்துக்கணிப்புகள் போன்றவை).

    • நீங்கள் எங்களின் டிஜிட்டல் பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தும்போது அல்லது தொடர்பு கொள்ளும்போது, எங்களின் இணையதளங்கள் அல்லது சமூக ஊடகப் பக்கங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடும் போது.

    • எங்கள் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், ஊக்கத்தொகைகள் அல்லது லொயல்டி நிகழ்ச்சித் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பங்கேற்கும் போது.

    • நீங்கள் எங்கள் ஏதேனும் வளவுக்குள் உட்பிரவேசிக்கும் போது.

    • வெளிவாரி முகவர்களிடமிருந்து (கடன் குறிப்பீட்டு முகவர்கள், பரிசோதனை அல்லது விசாரணை முகவர்கள் போன்றவர்கள்).

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது பங்காளிகள் /இணை நிறுவனங்களுடனான உங்கள் உறவின் காரணமாக எங்கள் உள்ளக தரவுத்தளத்திலிருந்து.

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையிலிருந்து.

  2. ஆ. பங்குதாரர்களுக்காக

    • எங்கள் பங்குப் பதிவுப்புத்தகத்திலிருந்து.

    • உங்கள் தொடர்புத் தகவல்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்க எங்களைத் தொடர்புகொள்ளும்போது.

    • உங்கள் அடையாள ஆவணம்(களை) எங்களிடம் வழங்கும்போது.

    • நகல் பங்குச் சான்றிதழ்களை வழங்குதல், பங்குச் சான்றிதழில் மாற்றம் செய்தல், பங்குப் பரிமாற்றங்களை நடத்துதல், பங்கிலாப பணிப்பாணை தொடர்பான தகவல்கள்களைப் புதுப்பித்தல் போன்ற உங்கள் பங்கு தொடர்பான ஏதேனும் நடவடிக்கையை கோருவதற்கு எங்களைத் தொடர்புகொள்ளும்போது.

    • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள், ஏனைய டிஜிட்டல் ஊடகங்கள்;, மின்னஞ்சல்கள் போன்றவை).

    • நீங்கள் எங்கள் வளவுக்குள் உட்பிரவேசிக்கின்ற போது.

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையிலிருந்து.

  3. இ. வணிக பங்காளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்காக

    • நீங்கள் எங்கள் வலைப்பின்னல், தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் போது.

    • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புக்கள், ஏனைய டிஜிட்டல் ஊடகங்கள்;, மின்னஞ்சல்கள், கேள்விக்கொத்துக்கள் அல்லது கருத்துக்கணிப்புக்கள் போன்றவை).

    • நீங்கள் எங்களின் டிஜிட்டல் பயன்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தும்போது அல்லது தொடர்பு கொள்ளும்போது, எங்களின் இணையதளங்கள் அல்லது சமூக ஊடகப் பக்கங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடும் போது.

    • நீங்கள் எங்கள் ஏதேனும் வளவிற்குள் உட்பிரவேசிக்கும் போது.

    • வெளிவாரி முகவர்களிடமிருந்து (கடன் குறிப்பீட்டு முகவர்கள், பரிசோதனை அல்லது விசாரணை முகவர்கள் போன்றவர்கள்).

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது பங்காளிகள்/இணை நிறுவனங்களுடனான உங்கள் உறவின் காரணமாக எங்கள் உள்ளக தரவுத்தளத்திலிருந்து.

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையிலிருந்து.

  4. ஈ. வருகை தருபவர்களுக்காக (எங்கள் ஏதேனும் வளவு/அலுவலகம்/இணைய தளங்களுக்கு)

    • நீங்கள் எங்கள் வருகைதருவோர்; பதிவு புத்தகம் அல்லது பார்வையாளர் நுழைவு படிவத்தை பூர்த்தி செய்யும் போது.

    • உங்கள் அடையாள ஆவணம்(களை) எங்களிடம் வழங்கும்போது.

    • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள், ஏனைய டிஜிட்டல் ஊடகங்கள், மின்னஞ்சல்கள், கேள்விக்கொத்துக்கள் அல்லது கருத்துக்கணிப்புகள் போன்றவை).

    • உங்கள் விருந்தோம்புகின்ற நபருக்கு தகவலை வழங்கும்போது.

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையிலிருந்து.

  5. உ. வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு

    • நீங்கள் எங்களிடம் விண்ணப்பம் செய்யும்போது.

    • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள், ஏனைய டிஜிட்டல் ஊடகங்கள்;, மின்னஞ்சல்கள், கேள்விக்கொத்துக்கள் அல்லது கருத்துக்கணிப்புகள் போன்றவை).

    • வெளிவாரி முகவர்களிடமிருந்து (கடன் குறிப்பீட்டு முகவர்கள், பரிசோதனை அல்லது விசாரணை முகவர்கள் போன்றவர்கள்).

    • நீங்கள் எங்கள் ஏதேனும் வளவுக்குள் உட்பிரவேசிக்கும் போது.

    • உங்கள் நடுவரிடமிருந்து.

    • உங்கள் முந்தைய தொழில்தருனரிடம்(களிடமிருந்து).

    • நீங்கள் வணிக உறவு வைத்திருக்கின்ற அல்லது வைத்திருந்த எவரேனும் நபரிடமிருந்து.

    • உங்கள் அல்லது எங்கள் ஆட்சேர்ப்பாளர், ஆட்சேர்ப்பு முகவர் அல்லது ஆட்சேர்ப்பு இணையதளம் /தளத்திலிருந்து.

    • உங்கள் உடல்நலம் மற்றும் பௌதீக ஆலோசகரிடமிருந்து (ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவர் போன்றவர்களிடமிருந்து).

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது பங்காளர்கள் /இணை நிறுவனங்களுடனான உங்கள் உறவின் காரணமாக எங்கள் உள்ளக தரவுத்தளத்திலிருந்து.

    • எங்கள் கண்காணிப்பு கேமரா (CCTV) முறைமையிலிருந்து.

உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம்?

உங்கள் பிரத்தியேக தரவுகள் பின்வரும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் அல்லது செயன்முறைப்படுத்தப்படலாம்:

  1. அ. வாடிக்கையாளர்களுக்காக

    • நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ள எங்கள் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்குதல்.

    • எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அம்சங்களில் ஏற்படும் நன்மைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரிவித்தல்.

    • எங்களின் சமீபத்திய சலுகைகள், பிரச்சாரங்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை உங்களுக்கு வழங்குதல் (அத்தகைய புதுப்பிப்புகளுக்கு நீங்கள் சந்தாதாரராக இருக்கின்ற போது).

    • எங்கள் சந்தா அல்லது கணக்கு பதிவு பற்றிய சேவை செய்திகளை உங்களுக்கு அனுப்புதல்.

    • சட்டங்கள் மற்றும் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குமுறைக் கடப்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எங்கள் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குறுத்துகை உரிமைகள் மற்றும் பரிகாரங்களை பாதுகாத்தல் அல்லது செயல்படுத்துதல்.

    • எங்கள் குழுமக் கம்பனிகள், துணை நிறுவனங்கள், பங்காளிகள் /இணை நிறுவனங்கள் மற்றும் உங்களுக்கு ஆர்வமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது ஏனைய டிஜிட்டல் ஊடகங்கள், மின்னஞ்சல்கள், முதலியன அல்லது சமூக ஊடகங்கள் மூலம் உங்களுக்குத் தகவலை அனுப்புதல் (அத்தகைய செய்திகளிலிருந்து நீங்கள் அங்கத்துவத்திலிருந்து நீங்கிக் கொள்ளலாம்).

    • முறைப்பாடுகள் அல்லது கணக்கு விசாரணைகளுக்கு பதிலளித்தல்.

    • கடன் மீட்புகளை நிர்வகித்தல்.

    • தேவைப்படும்போது உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தல் (உங்கள் கடவுச்சொல் அல்லது பாதுகாப்புத் தகவலை நீங்கள் தவறாக வைக்கலாம், பின்னர் உங்கள் தரவுகளை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்க ஏனைய பிரத்தியேக தரவுகளை நாங்கள் கோர வேண்டியிருக்கலாம்).

    • எங்கள் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளின் (உங்கள் சேவை விருப்பங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அடையப்பட்டது) மற்றும் தயாரிப்பு மற்றும்/அல்லது சேவை மேம்பாடுகள் மற்றும் விருத்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தை மற்றும் தயாரிப்பு பகுப்பாய்வுகளை மேற்கொள்ளுதல்.

    • ஏனைய சட்டபூர்வமான நோக்கங்கள்.

  2. ஆ. பங்குதாரர்களுக்காக

    • உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தல்.

    • உங்கள் தொடர்புத் தகவல்கள் மற்றும் நியமன விவரங்களைப் புதுப்பித்தல், நகல் பங்குச் சான்றிதழ்களை வழங்குதல் அல்லது பங்குச் சான்றிதழ்களை மாற்றுதல், பங்கு பரிமாற்றங்கள் அல்லது பகிர்வு பரிமாற்றங்களைப் பதிவு செய்தல், பங்கிலாபம் வழங்குதல், நியமன அறிவிப்புகளைப் பதிவு செய்தல் போன்ற உங்கள் பங்குதாரர் தொடர்பான உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுதல்.

    • சட்டங்கள் மற்றும் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எங்கள் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் பரிகாரங்களை பாதுகாத்தல் அல்லது செயற்படுத்துதல்.

    • ஏனைய சட்டபூர்வமான நோக்கங்கள்.

  3. இ. வணிக பங்காளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்காக

    • வியாபாரத்தை செயல்படுத்தல்.

    • வணிகத்தின் ஒழுங்கமைத்தல் மற்றும் முகாமை செய்தல்

    • உடல்நலம், ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு.

    • சட்டங்கள் மற்றும் சட்ட, ஒப்பந்த மற்றும் /அல்லது ஒழுங்குறுத்துகைக் கடப்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எங்கள் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குறுத்துகை உரிமைகள் மற்றும் தீர்வுகளைப் பாதுகாத்தல் அல்லது செயல்படுத்துதல்.

    • எமது சொத்துக்கள் மற்றும் நலன்களை பாதுகாத்தல்.

    • ஏனைய சட்டபூர்வமான நோக்கங்கள்.

  4. ஈ. வருகைதருபவர்களுக்காக (எங்கள் ஏதேனும் வளவு/அலுவலகம்/இணைய தளங்களுக்கு)

    • உடல்நலம், ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு.

    • சட்டங்கள் மற்றும் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எங்கள் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குறுத்துகை உரிமைகள் மற்றும் பரிகாரங்களை பாதுகாத்தல் அல்லது செயல்படுத்துதல்.

    • ஏனைய சட்டபூர்வமான நோக்கங்கள்.

  5. உ. வேலை வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்காக

    • சாத்தியமான வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வகிபாகங்களுக்காக வேட்பாளர்களை அடையாளம் கண்டு மதிப்பீடு செய்தல்.

    • ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல் தொடர்பாக பதிவு செய்தல்.

    • பின்னணி சோதனைகளை நடத்துதல்.

    • சட்டங்கள் மற்றும் சட்ட, ஒப்பந்த மற்றும் /அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எங்கள் சட்ட, ஒப்பந்த மற்றும்/அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் பரிகாரங்களை பாதுகாத்தல் அல்லது செயல்படுத்துதல்.

    • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் உடல்நலம் அல்லது பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் அவசர சூழ்நிலைகளில் உங்களை அல்லது உங்கள் அவசரகாலத் தொடர்பாளரை தொடர்புகொள்தல்.

    • ஏனைய சட்டபூர்வமான நோக்கங்கள்.

  6. ஊ. ஊழியர்களுக்காக (மேலே உள்ள வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு மேலதிகமாக)

    • தொழில் முன்னேற்றம் மற்றும் பிரத்தியேக வளர்ச்சி.

    • சம்பளம் மற்றும் வேலை அனுகூலங்களின் நிர்வாகம் மற்றும் முகாமை

    • குறுகிய கால மற்றும் நீண்ட கால ஊக்குவிப்புத் திட்டங்கள்.

    • வழக்குகள் உட்பட ஆனால் அவை மாத்திரம் அல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை உறவுகள் பிணக்குகள்,

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது பங்காளிகள் /இணை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு பயிற்சிகள்.

    • செயலாற்றுகை முகாமை.

    • வேலை மற்றும் பயண அனுமதி மற்றும் குடிவரவு/குடியகழ்வு தேவைகளின் விண்ணப்பம்

    • கடன்கள், காப்புறுதி மற்றும் மருத்துவ நோக்கங்கள்.

    • ஒழுக்காற்று நடவடிக்கைகள் அல்லது முடிவுறுத்தல்.

    • உடல்நலம் மற்றும் ஆபத்தின்மையை உறுதி செய்தல்.

    • கணக்கியல், நிதி அறிக்கை மற்றும் வணிக திட்டமிடல்.

    • பாதுகாப்பு கண்காணிப்பு.

    • குழுவை உருவாக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வணிகம் தொடர்பான நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல்.

    • உள்வாரி அல்லது வெளிவாரி விசாரணைகள்.

    • கணக்காய்வு நோக்கத்திற்காக ஆராய்ச்சி, சம்பள ஆய்வுகள்

    • எங்களுடனான உங்கள் வேலை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களுடன் இணங்குதல்.

    • ஏதேனும் சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை வேண்டுகோள் அல்லது கோரிக்கை.

    • ஏனைய சட்டபூர்வமான நோக்கங்கள்.

உங்கள் பிரத்தியேக தரவுகளை நாம் யாருக்கு வழங்குவோம்?

உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் வெளிப்படுத்தலாம்:

  1. அ. வாடிக்கையாளர்களுக்காக

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள் /இணை நிறுவனங்களுக்கு.

    • சர்வதேச அழைப்புகளை நெறிப்படுத்தும் போது ஏனைய கொண்டு செல்பவர்கள்; மற்றும் இயக்குனர்களுக்கு.

    • எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, உங்கள் பாதுகாப்பைப் தக்கவைப்பதற்கு, மோசடியை விசாரிப்பதற்கு அல்லது சட்ட அமுலாக்க கோரிக்கைக்கு பதிலளிப்பதற்கு, வெளிப்படுத்துதல் அவசியமான அல்லது நியாயமானதாக இருக்கும் போது மூன்றாம் தரப்பினருக்கு.

    • எங்கள் சேவை வழங்குநர்கள், களப்பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் அல்லது எங்கள் சார்பாக அல்லது எங்கள் அறிவுறுத்தலின்படி செயல்படும் ஏனைய மூன்றாம் தரப்பினருக்கு.

    • நாங்கள் உட்பட்ட அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் சட்ட அல்லது ஒழுங்குறுத்துகைக் கடப்பாட்டுக்கு இணங்க வேண்டிய அவசியம் இருக்கின்ற ஏதேனும் பொது அதிகார சபை, அரசு, ஒழுங்குறுத்துகை அல்லது நிதி முகவருக்கு.

    • நீங்கள் சம்மதித்த/தவிர்க்காத எங்கள் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக எங்கள் வணிக பங்காளர்களுக்கு.

    • கடன் சரிபார்த்தல் மற்றும் மோசடி முகாமைத்துவத்துக்காக மூன்றாம் தரப்பினர்களுக்கு.

    • தேவைப்படுகின்றவாறும் மற்றும் தேவைப்படுகின்ற போதும் உங்கள் தகவலைச் சரிபார்ப்பது உட்பட, எங்கள் கட்டண ஊடகங்களாக செயல்படும் எவையேனும் தரப்பினர்களுக்கு.

    • எங்கள் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக மூன்றாம் தரப்பினர்களுக்கு.

    • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினர்களுக்கு.

    • எங்கள் விற்பனையாளர்கள் அல்லது முகவர்களுக்கு.

    • நாங்கள் விற்பனை அல்லது வணிகப் பரிவர்த்தனையில் (உதாரணமாக: இணைத்தல் அல்லது கையகப்படுத்துதல்) ஈடுபட்டால், எங்கள் வணிகத்தின், சொத்துக்களின் அல்லது பங்குகளின் (ஏதேனும் வங்குரோத்து நிலை அல்லது அது போன்ற நடவடிக்கைகள் உட்பட) அனைத்து அல்லது ஏதேனும் பகுதியை மீள்-ஒழுங்குபடுத்துதல், இணைத்தல். விற்பனை செய்தல், கூட்டு நிறுவனமாக மாற்றுதல், சாட்டுதல் செய்தல், இடமாற்றுதல் அல்லது ஏனைய இடப்பெயர்வு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், உங்கள் பிரத்தியேக தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதில் அல்லது மாற்றுவதில் நியாயமான அக்கறையை நாம் தக்க வைத்துக் கொள்வோம். அத்தகைய மூன்றாம் தரப்பினர்கள் என்பவர்கள் எடுத்துக்காட்டாக, கையகப்படுத்துகின்ற அல்லது இலக்கு நிறுவனம் ஒன்றாகவும் மற்றும் அவற்றின் ஆலோசகர்களாகவும் இருக்கலாம்.

    • “உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?" என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினர்களுக்கு.

  2. ஆ. பங்குதாரர்களுக்காக

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள்/இணை நிறுவனங்களுக்கு.

    • நாங்கள் உட்பட்ட அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படக் கூடியவாறு சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாடுகளுக்கு இணங்க வேண்டிய அவசியம் உள்ள விடத்து எதேனுமொரு பொது அதிகார சபைக்கு, அரசுக்கு, ஒழுங்குறுத்துகை அல்லது நிதி முகவருக்கு.

    • பங்கிலாபங்களை வழங்கும் நோக்கத்திற்காக வங்கிகளுக்கு.

    • நாங்கள் விற்பனை அல்லது வணிகப் பரிவர்த்தனையில் (உதாரணமாக: இணைத்தல் அல்லது கையகப்படுத்துதல்) ஈடுபட்டால், எங்கள் வணிகத்தின், சொத்துக்களின் அல்லது பங்குகளின் (ஏதேனும் வங்குரோத்து நிலை அல்லது அது போன்ற நடவடிக்கைகள் உட்பட) அனைத்து அல்லது ஏதேனும் பகுதியை மீள்-ஒழுங்குபடுத்துதல், இணைத்தல். விற்பனை செய்தல், கூட்டு நிறுவனமாக மாற்றுதல், சாட்டுதல் செய்தல், இடமாற்றுதல் அல்லது ஏனைய இடப்பெயர்வு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், உங்கள் பிரத்தியேக தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதில் அல்லது மாற்றுவதில் நியாயமான அக்கறையை நாம் தக்க வைத்துக் கொள்வோம். அத்தகைய மூன்றாம் தரப்பினர்கள் என்பவர்கள் எடுத்துக்காட்டாக, கையகப்படுத்துகின்ற அல்லது இலக்கு நிறுவனம் ஒன்றாகவும் மற்றும் அவற்றின் ஆலோசகர்களாகவும் இருக்கலாம்.

    • “உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?" என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு.

  3. இ. வணிக பங்காளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்கு

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள்/இணை நிறுவனங்களுக்கு.

    • எங்கள் மூன்றாம் தரப்பு முகவர்கள், சேவை வழங்குநர்கள், ஆலோசகர்கள், அறிவுறுத்துனர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும்/அல்லது துணை ஒப்பந்ததாரர்களுக்கு.

    • நாங்கள் உட்பட்ட அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படக் கூடியவாறு சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாடுகளுக்கு இணங்க வேண்டிய அவசியம் உள்ள விடத்து எதேனுமொரு பொது அதிகார சபைக்கு, அரசுக்கு, ஒழுங்குறுத்துகை அல்லது நிதி முகவருக்கு.

    • நாங்கள் விற்பனை அல்லது வணிகப் பரிவர்த்தனையில் (உதாரணமாக: இணைத்தல் அல்லது கையகப்படுத்துதல்) ஈடுபட்டால், எங்கள் வணிகத்தின், சொத்துக்களின் அல்லது பங்குகளின் (ஏதேனும் வங்குரோத்து நிலை அல்லது அது போன்ற நடவடிக்கைகள் உட்பட) அனைத்து அல்லது ஏதேனும் பகுதியை மீள்-ஒழுங்குபடுத்துதல், இணைத்தல். விற்பனை செய்தல், கூட்டு நிறுவனமாக மாற்றுதல், சாட்டுதல் செய்தல், இடமாற்றுதல் அல்லது ஏனைய இடப்பெயர்வு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், உங்கள் பிரத்தியேக தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதில் அல்லது மாற்றுவதில் நியாயமான அக்கறையை நாம் தக்க வைத்துக் கொள்வோம். அத்தகைய மூன்றாம் தரப்பினர்கள் என்பவர்கள் எடுத்துக்காட்டாக, கையகப்படுத்துகின்ற அல்லது இலக்கு நிறுவனம் ஒன்றாகவும் மற்றும் அவற்றின் ஆலோசகர்களாகவும் இருக்கலாம்.

    • “உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?" என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு.

  4. ஈ. வருகைதருபவர்களுக்கு (ஏதேனும் எங்கள் வளவு/அலுவலகம் /இணைய தளங்களுக்கு)

    நாங்கள் வழக்கமாக உங்கள் பிரத்தியேக தரவுகளை ஏதேனும் வெளிவாரி நிறுவனங்களுடனும் அல்லது மூன்றாம் தரப்பினருடனும் பகிர்வதில்லை அல்லது பரிமாற்றம் செய்வதில்லை. எவ்வாறாயினும், உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் பகிர்கின்றவிடத்து மற்றும் பகிர்கின்ற போது அல்லது பரிமாற்றம் செய்கின்ற போது, அது “உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?" என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக இருக்கும். இந்த பிரத்தியேக அறிவித்தலின்படி நாங்கள் அவ்வாறு செய்வோம்.

    மேலும், நாங்கள் உட்பட்ட அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படக் கூடியவாறு சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாட்டுக்கு இணங்க வேண்டிய அவசியம் உள்ள விடத்து எதேனுமொரு பொது அதிகார சபையால், அரசால், ஒழுங்குறுத்துகை அல்லது நிதி முகவரால் வேண்டப்பட்டால், நாம் உங்கள் பிரத்தியேக தரவுகளை வெளிப்படுத்துவோம்.

  5. உ. வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக

    • எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள்/இணை நிறுவனங்களுக்கு.

    • பின்னணி சரிபார்த்தல் வழங்குநர்களுக்கு.

    • நாங்கள் உட்பட்ட அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படக் கூடியவாறு சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை கடப்பாட்டுக்கு இணங்க வேண்டிய அவசியம் உள்ள விடத்து எதேனுமொரு பொது அதிகார சபைக்கு, அரசுக்கு, ஒழுங்குறுத்துகை அல்லது நிதி முகவருக்கு.

    • நிர்வாகம் அல்லது ஏனைய சேவைகளை வழங்கும் ஏனைய மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு.

    • எங்களால் அல்லது எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் அல்லது பங்காளிகள்;/இணை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ஏதேனும் ஒத்துழைப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு.

    • நாங்கள் விற்பனை அல்லது வணிகப் பரிவர்த்தனையில் (உதாரணமாக: இணைத்தல் அல்லது கையகப்படுத்துதல்) ஈடுபட்டால், எங்கள் வணிகத்தின், சொத்துக்களின் அல்லது பங்குகளின் (ஏதேனும் வங்குரோத்து நிலை அல்லது அது போன்ற நடவடிக்கைகள் உட்பட) அனைத்து அல்லது ஏதேனும் பகுதியை மீள்-ஒழுங்குபடுத்துதல், இணைத்தல். விற்பனை செய்தல், கூட்டு நிறுவனமாக மாற்றுதல், சாட்டுதல் செய்தல், இடமாற்றுதல் அல்லது ஏனைய இடப்பெயர்வு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், உங்கள் பிரத்தியேக தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்துவதில் அல்லது மாற்றுவதில் நியாயமான அக்கறையை நாம் தக்க வைத்துக் கொள்வோம். அத்தகைய மூன்றாம் தரப்பினர்கள் என்பவர்கள் எடுத்துக்காட்டாக, கையகப்படுத்துகின்ற அல்லது இலக்கு நிறுவனம் ஒன்றாகவும் மற்றும் அவற்றின் ஆலோசகர்களாகவும் இருக்கலாம்.

    • “உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?" என்பதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு.

மேலே குறிப்பிட்டுள்ள உங்கள் பிரத்தியேக தரவுகளின் இரகசியத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதையும், ஏதேனும் அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காகவும் உங்கள் பிரத்தியேக தரவுகளைப் பயன்படுத்துவதிலிருந்து கட்டுப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்வதற்காக, தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப நியாயமான முயற்சிகளைப் பயன்படுத்துகிறோம்.

மேலே குறிப்படப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, உங்களுக்குத் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகளை வழங்கும் போது, அவர்களின் பிரத்தியேக இணையதளங்கள்/கையடக்க செயலிகள் அல்லது தளங்களுக்கு நீங்கள் மீள்வழிகாட்டப்படும்போது, ஏனைய ஊடகங்கள் மூலம் உங்கள் பிரத்தியேக தரவுகளைச் எங்கள் சேவை வழங்குநர்கள் சேகரிக்கலாம்.

அத்தகைய ஒவ்வொரு சேவை வழங்குநரின் பிரத்தியேக அறிவித்தலை மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் வலுவாக உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். ஏதேனும் சேவை வழங்குநரின் உள்ளடக்கம், பிரத்தியேக அறிவித்தல்கள்; அல்லது நடைமுறைகள் மீது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழுமையான அளவிற்கு எங்களிடம் எந்த கட்டுப்பாடும் இல்லை மற்றும் ஏதேனும் பொறுப்பை ஏற்பதுமில்லை.

பிரத்தியேக தரவுகளின் பரிமாற்றங்கள்

உங்கள் பிரத்தியேக தரவுகளை புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஏனைய நிறுவனங்களுக்கு எம்மால் மாற்றலாம். உங்களது பிரத்தியேக தரவுகள் இலங்கைக்கு வெளியில் அமைந்துள்ள எங்கள் குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள், பங்காளிகள்;/இணை நிறுவனங்கள் மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பினர்களுக்கு மாற்றப்பட்டால், உங்கள் பிரத்தியேக தரவு பரிமாற்றமானது நிறுவன ரீதியாக, ஒப்பந்த ரீதியாக மற்றும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்பதோடு உங்கள் பிரத்தியேக தரவுகளைப் பாதுகாப்பதற்காக இந்தத் தரவுகளைப் பெறுகின்ற தரப்பினருக்கான நியாயமான போதுமான அளவிலான பாதுகாப்பு மற்றும் மேலதிக உள்ளுர் சட்டத் தேவைகள் அமுலாக்கப்படுகின்றன.

உங்கள் பிரத்தியேக தரவுகளை நாங்கள் எவ்வாறு சேமித்து பாதுகாப்போம்?

தேவைக்கேற்ப உங்கள் பிரத்தியேக தரவுகளை இலத்திரனியல் அல்லது பௌதீக வடிவத்தில் நாங்கள் சேகரித்து சேமிக்கலாம். இத்தகைய பிரத்தியேக தரவு தகவல் தொழிநுற்ப முறைமைகள் (உதாரணமாக: வெளிவாரி கிளவுட் ஸ்டோரேஜ், உள்ளக அல்லது மூன்றாம் தரப்பு முகாமை முறைமைகள், மின்னஞ்சல்கள், தரவுத்தளங்கள், வன் தட்டுக்கள்; போன்றவை) மற்றும் பௌதீக களஞ்சிய அறைகள் போன்றவற்றில் எங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வளவுகளில் சேமிக்கப்படலாம்.

பிரத்தியேக தரவுகள் அல்லது தற்செயலான வெளிப்படுத்துதல், இழப்பு அல்லது அழித்தல் அல்லது சேதப்படுத்துதல் போன்ற பிரத்தியேக தரவுகளின் அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோத செயன்முறையைத் தடுப்பதன் மூலம் பாதுகாப்பான சூழலில் உங்கள் பிரத்தியேக தரவுகளைச் செயன்முறைப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். உங்கள் பிரத்தியேக தரவுகள் மற்றும் எங்கள் வலையமைப்பு அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்க பல்வேறு பௌதீக, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளில் சில:

  1. பிரத்தியேக தரவு குறியீட்டுச் சொற்கள்

  2. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தல்;

  3. எங்கள் நடைமுறைகளை மேம்படுத்த காலத்திற்கு காலம் பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வுகளளை மேற்கொள்தல், மற்றும்

  4. அத்தகைய பிரத்தியேக தரவுகளை அறிந்து கொள்ள வேண்டிய ஊழியர்களுக்கு அத்தகைய பிரத்தியேக தரவுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்.

உங்கள் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானது ஆனால் இணையத்தில் பரிமாற்றம் செய்யும் முறை, செயன்முறையின் போது பாதுகாப்பது அல்லது இலத்திரனியல் சேமிப்பக முறை 100% பாதுகாப்பானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக தரவுகளைப் பாதுகாப்பதற்காக வணிக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிகளைப் பயன்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம், அதன் முழுமையான பாதுகாப்பிற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது.

உங்களின் பிரத்தியேக தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம்?

உங்கள் பிரத்தியேக தரவுகளை சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் வரை மாத்திரமே நாங்கள் அதை வைத்திருப்போம். பிரத்தியேக தரவுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் காலம் ஏற்புடைய சட்டங்களின் தேவைகள் அல்லது சட்டபூர்வமான வணிகத் தேவைகளாலும் பாதிக்கப்படலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும், அத்தகைய பிரத்தியேக தரவுகள் நீண்ட காலத்திற்கு வைக்கப்படலாம், அவ்வாறு செய்வதற்கு ஒரு சட்ட அல்லது ஒழுங்குமுறை காரணம் இருக்கும் (இதில் சட்ட அல்லது ஒழுங்குறுத்துகை நோக்கத்திற்காக இனி தேவைப்படாத நிலையில் அது நீக்கப்படும்).

பிரத்தியேக தரவுகள் அதன் தக்கவைப்பு காலத்தை தாண்டியதும், அத்தகைய பிரத்தியேக தரவுகளைத் தக்கவைக்க சரியான காரணம் இல்லை என்றால், பிரத்தியேக தரவுகள் பாதுகாப்பாக அகற்றப்படும்.

உங்கள் உரிமைகள் என்ன?

உங்கள் பிரத்தியேக தரவுகள் துல்லியமாகவும் இற்றைப்படுத்தியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் உங்கள் உரிமைகள் மற்றும் பிரத்தியேகத்தை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் ஏதேனும் தவறான தகவல்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விருப்பங்கள் மூலம் எங்களுக்கு அனுப்பப்பட்ட எழுத்துமூல அறிவித்தலைப் பெற்றதிலிருந்து நியாயமான காலத்திற்குள் சரி செய்யப்படும். கோரப்பட்ட எந்த திருத்தங்களும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்.

நியாயமான விலையில் நியாயமான நேரத்திற்குள் உங்கள் பிரத்தியேக தரவுகளை (முடிந்தவரை) எங்களின் வசம் அல்லது கட்டுப்பாட்டில் கிடைக்கச் செய்வோம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் மூலம் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் எங்கள் தகவல் தொடர்புகளை உங்களுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு நீங்கள் எங்களைக் கோரலாம். எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான சந்தாவை நீங்கள் இரத்துசெய்யாத வரையில், குறிப்பிட்ட டயலொக் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கட்டாய தயாரிப்பு அல்லது சேவைத் தகவல் தொடர்புகளைப் பெறுவதற்கு இந்தத் தேர்வுகள் பொருந்தாது.

உங்கள் பிரத்தியேக தரவுகளை வழங்காததன் விளைவுகள்

உங்களைப் பற்றிய சில பிரத்தியேக தரவுகளை நாங்கள் சேகரிக்க வேண்டியிருக்கலாம் மற்றும் அத்தகைய தகவலை வழங்கத் தவறினால் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம்:

  1. எங்களால் உங்கள் விண்ணப்பத்தைச் செயல்படுத்த முடியாமல் போகலாம் மற்றும்/அல்லது எங்கள் தயாரிப்பு மற்றும்/அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாமல் போகலாம்.

  2. எங்களின் தயாரிப்புக்கள் மற்றும்/அல்லது சேவைகள் மீதான உங்கள் கோரிக்கைகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியாமல் போகலாம்.

  3. எங்கள் இணையதளம், இணைய இணைப்புகள் அல்லது டிஜிட்டல் தளங்களில் சில அம்சங்களுக்கான அணுகலை வரையறை செய்யவும் அல்லது தடுக்கவும் காரணமாகலாம்.

  4. ஏதேனும் விளம்பரங்கள், எங்கள் சேவைகள்/தயாரிப்புகள் அல்லது வெளியீடுகள் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகள் குறித்து எங்களால் உங்களுக்குத் தெரிவிக்க முடியாமல் போகலாம்.

  5. எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊக்குவித்தல் நடவடிக்கைகளுக்கான அழைப்பிதழ்களைப் பெற முடியாமல் போகலாம்.

  6. உங்களுடன் தொடர்புகொள்வதற்கான எங்கள் திறனை எதிர்மறையாக பாதிக்கும்.

  7. உங்கள் பங்கு தொடர்பான உங்கள் கோரிக்கைகளை எங்களால் செயல்படுத்த முடியாமல் போகலாம்.

  8. பங்குதாரர் சந்திப்புகள் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பங்கிலாபங்களை நேரடியாக அனுப்புவதை எங்களால் உங்களுக்குத் தெரிவிக்க முடியாமல் போகலாம்.

  9. உங்களுடனோ அல்லது எதிர் தரப்பினருடனோ ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாமல் போகலாம் அல்லது உங்களுடன் அல்லது எதிர் தரப்பினருடன் ஒப்பந்தத்தை தொடர முடியாமல் போகலாம்.

  10. ஏதேனும் சாத்தியமான வேலைவாய்ப்பு, ஈடுபாடு அல்லது பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உங்கள் வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கும்.

  11. அத்தகைய பிரத்தியேக தரவுகளை நாங்கள் சேகரிக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்ற பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறைகளை மீறுவதாக அமையும்.

பிரத்தியேக தரவுகளை எங்களிடம் சமர்ப்பிப்பதன் மூலம், நீங்கள் பின்வருவனவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள்:
  1. நீங்கள் இந்த பிரத்தியேக அறிவித்தலை வாசித்து புரிந்துகொண்டுள்ளீர்கள், மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி பிரத்தியேக தரவுகளைப் பயன்படுத்துதல், செயன்முறைப்படுத்துதல், வெளிப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளீர்கள்.

  2. நீங்கள் வழங்கிய அனைத்துத் தகவல்கள்களும் மற்றும் பிரதிநிதித்துவங்களும் உங்களுக்குத் தெரிந்த வரையில் உண்மையானவை மற்றும் சரியானவை, மேலும் நீங்கள் அறிந்த வகையில் தொடர்புடைய எந்தத் தகவலையும் தவிர்க்கவில்லை.

மேலும் தகவலுக்கு யாரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்?

இந்த அறிவித்தலைப் பற்றி அல்லது எங்கள் பிரத்தியேக மற்றும் தகவல்கள் கையாளுதல் நடைமுறைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது முறைப்பாடுகள்; இருந்தால், பின்வரும் முறைகள் மூலம் எங்கள் தரவு பிரத்தியேக அலுவலரைத் தொடர்பு கொள்ளவும்:

  1. முகவரி: 475, யூனியன் பிளேஸ், கொழும்பு 02

  2. தொலைபேசி: 0094 77 7 678 678

  3. மின்னஞ்சல்: privacy@dialog.lk

பிரத்தியேக அறிவித்தலுக்கான இற்றைப்படுத்தல்கள்

இந்த பிரத்தியேக அறிவித்தலை காலத்திற்கு காலம் எங்கள் சொந்த விருப்பத்தின் பேரில், தேவை ஏற்படும் போது திருத்துவதற்கு, மாற்றுவதற்கு, புதுவிடயங்களை சேர்ப்பதற்கு அல்லது இற்றைப்படுத்துவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. மிக சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரத்தியேக அறிவித்தல் அதன் முந்தைய பதிப்புகளில் காணப்படுகின்ற சகல விடயங்களையும் மேலோங்கி இருக்கும் மற்றும் பதிப்பு இலக்கம்; மற்றும் திகதி அதற்கேற்ப இற்றைப்படுத்தப்படும். ஏதேனும் மாற்றங்களையும் உங்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு எந்தக் கடப்பாடும் இருக்கமாட்டாது, மேலும் ஏதேனும் மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்வதற்கு அவ்வப்போது இந்த பிரத்தியேக அறிவித்தலை சரிபார்க்கும்படி உங்களை நாம் ஊக்குவிக்கிறோம். பிரத்தியேக அறிவித்தலின் நியதிகளில் எவையேனும் மாற்றங்களையும் சேர்த்து கடைப்பிடிப்பதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.