அறிவித்தல்
Bill Format Update
அன்பான வாடிக்கையாளரே, 2481/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அண்மைக்கால அறிவுறுத்தல்களுக்கு அமைய, எதிர்வரும் 2026 ஜூலை 1 ஆம் திகதி முதல் புதிய கட்டணப்பட்டியல் (Bill) வடிவத்தை டயலொக் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய வடிவமைப்பு மாற்றமானது, உங்களது கட்டணப்பட்டியலின் தோற்றம் மற்றும் அதில் காண்பிக்கப்படும் விபரங்களில் உள்ளடக்கப்படும்.
VAT பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான மாற்றங்கள் பின்வருமாறு:
- தலைப்புப் பகுதி , உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் மாதிரி வடிவத்திற்கு அமைய சீரமைக்கப்படும்.
- Invoice வரிசை எண் , ஒரு சிறப்பு வரி Invoice தொடராக மாற்றியமைக்கப்படும்.
- திகதி வடிவம் MM/DD/YYYY என மாற்றியமைக்கப்படும்.
- வழங்குநரின் விபரங்கள் மேல் இடது பக்கத்தில் காண்பிக்கப்படும்.
- வாடிக்கையாளரின் விபரங்கள் மேல் வலது பக்கத்தில் காண்பிக்கப்படும்.
- முதன்மைப் பக்கத்தில் VAT வரம்பிற்குட்பட்ட, VAT வரம்பிற்குட்படாத மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்ட விபரங்களின் பகுப்பாய்வு உள்ளடக்கப்படும்.
- VAT வரம்பிற்குட்பட்ட பகுதிக்காக புதிய வரிசை விபரங்கள் சேர்க்கப்படும்:
- - வழங்கலின் மொத்தப் பெறுமதி
- - VAT தொகை (VAT விகிதப்படியிலான வழங்கலின் மொத்தப் பெறுமதி)
- - VAT உள்ளடங்கலான மொத்தத் தொகை
VAT பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர்களுக்கான மாற்றங்கள் பின்வருமாறு:
- திகதி வடிவம் MM/DD/YYYY என மாற்றியமைக்கப்படும்.
- வழங்குநரின் விபரங்கள் மேல் இடது பக்கத்தில் காண்பிக்கப்படும்.
- வாடிக்கையாளரின் விபரங்கள் மேல் வலது பக்கத்தில் காண்பிக்கப்படும்.
- முதன்மைப் பக்கத்தில் VAT வரம்பிற்குட்பட்ட , VAT வரம்பிற்குட்படாத மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்ட விபரங்களின் பகுப்பாய்வு உள்ளடக்கப்படும்.
- VAT வரம்பிற்குட்பட்ட பகுதிக்காக புதிய வரிசை விபரங்கள் சேர்க்கப்படும்.
மாதிரிக் கட்டணப்பட்டியல்
இப்புதிய வடிவமைப்பு மாற்றங்களை நீங்கள் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக, தயவுசெய்து கீழே உள்ள மாதிரிக் கட்டணப்பட்டியலைப் பார்வையிடவும்.
Viewவர்த்தமானி விபரம்
இந்த திருத்தப்பட்ட புதிய கட்டணப்பட்டியல் வடிவமானது, 2026 மார்ச் 27 ஆம் திகதியிடப்பட்ட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் 2481/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி வழிகாட்டல்களுக்கு அமைய அறிமுகப்படுத்தப்படுகின்றது.
Viewනිතර අසන පැන