டயலொக் அனுசரணை வழங்கும் 'எய' தேசிய நிகழ்ச்சியின் கொழும்பு தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
March 31, 2022 Colombo
சர்வதேச மகளிர் தினத்திற்கான தேசிய அளவிலான பெண்கள் வலுவூட்டல் மற்றும் மேம்பாட்டுத் திட்டமான 'எய' கொழும்பில் தனது நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிவிருத்தி, பாலர் மற்றும் ஆரம்பக் கல்வி, பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்விற்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியினால் அனுசரணை வழங்கப்பட்டது.
'எய' என்பது பெண்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சியாகும். இது மார்ச் 8 ஆம் தேதி BMICH இல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஏப்ரல் 7 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் மொனராகலை மாவட்டத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது. கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்த சந்தைகள், கலந்துரையாடல்கள், திருவிழாக்கள், விழிப்புணர்வுப் பட்டறைகள் மற்றும் பலவற்றை 'எய' நிகழ்ச்சி நடத்தவுள்ளது. அதன் மூலம், பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதங்கள் சமூகமயப்படுத்தப்படும். தொழில்முனைவோரைத் தோடல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சமத்துவமின்மையைக் குறைத்து, ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அணிதிரட்டி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், வலுவூட்டவும் தேவையான அறிவு பகிர்ந்து கொள்ளப்படும்.
'எய' நிகழ்ச்சி ஏற்கனவே மார்ச் 8, 9 மற்றும் 11 திகதிகளில் கொழும்பிலும், மார்ச் 10 அனுராதபுரத்திலும், மார்ச் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நுவரெலியாவிலும், மார்ச் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் களுத்துறையிலும், மார்ச் 24 புத்தளத்திலும், 28 ஆம் திகதி கம்பஹாவிலும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் மன்னாரில் ஏப்ரல் 01 ஆம் திகதியும் களுத்துறையில் ஏப்ரல் 3 ஆம் திகதியும், கேகாலையில் ஏப்ரல் 5 ஆம் திகதியும் மற்றும் இறுதியாக மொனராகலையில் ஏப்ரல் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. 'எய' திட்டத்தில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 0773743718 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ளலாம்.
மகளிர் தமது அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற அவசியமான ஆதரவு தளங்களை வழங்குவதில் டயலொக் உறுதியாக உள்ளது. அதன்படி, இந்நிகழ்வை வலுப்படுத்துவதுடன், மேலும் ஒரு படி மேலே சென்று, இலங்கையின் ஒரே ரகசியத் தன்மை பேணும், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உள்ளக செயற்பாட்டு ஆலோசனைச் சேவையான 'Yeheli.lk/Thozhi.lk' உட்பட அதன் மகளிரை மையமாகக் கொண்ட தளங்களின் ஆதரவையும் நிபுணத்துவத்தையும் விரிவுபடுத்துவதுடன், தகுதிவாய்ந்த மெய்நிகர் ஆலோசகர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டமான 'ஐடியாமார்ட் ஃபோர் விமன்' (IdeaMart for Women) மற்றும் விசேடமாக டிஜிட்டல் தொழில்முனைவையும் தொழிநுட்ப திறன்களையும் ஊக்குவிக்குமுகமாக டிஜிட்டல் தொழில்முனைவு மற்றும் வலுவூட்டல் திட்டத்தையும் டயலொக் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையின் தொழில் முனைவோர் கற்றுக்கொள்வதற்கும், துறைசார்ந்த வல்லுனர்களின் அறிவு மற்றும் நிபுணத்துவங்களை பெற்றுக் கொண்டு வளர்ச்சி அடைவதற்கும் பயன்தரக்கூடிய ஒரே கேந்திர நிலையமான ‘Diriya.lk’ யும் இந்த நிகழ்வுகளின்போது இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஆதரவை விரிவுபடுத்தும் DoC990 இலங்கையின் முதன்மையான டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் சேவை வழங்குநர், பெண்களின் நல்வாழ்வுக்காக பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆரோக்கியப் பக்கேஜ்களை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றது.