பொருள் விரிவாக்கம்

Dialog Smartlife IoT தீர்வுகள் Innovate Sri Lanka கண்காட்சி 2019

2019 ஏப்ரல் 4         கொழும்பு

 

news-1

(இடமிருந்து வலம்) டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை டிஜிட்டல் அலுவலகர் லசந்த தேவவரப்பெரும மற்றும் ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் - பேராசிரியர் சம்பத் அமரதுங்கே

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஏப்ரல் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் இலங்கை புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி 2019 இல் Internet of Things (IoT) தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி, உணவு மற்றும் வேளாண்மை, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல், எந்திரனியல், உட்பொதிந்த அமைப்புக்கள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், ஊடகங்கள், ஸ்மார்ட் நகரங்கள், மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறைகளில் புதுமைகளை வெளிப்படுத்தவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது. IoT காலநிலை மையம், NB-IoT Development Kit மற்றும் Ideaboard, NB-IoT சுற்றுச்கூழல் உணரி, B-IoT Smart Power Socket, Smart Energy மீட்டர் போன்ற இன்னும் அதிகளவான முன்முயற்சிகளை வழங்கியது. நிறுவனத்தின் விரிவான பகுதியாக புதுமையான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை புதுப்பித்தல் தொழில்நுட்பங்கள் மூலம் வாழ்க்கை மற்றும் நிறுவனங்களை வளப்படுத்துவதை நோக்கமாக கொண்டது.