பொருள் விரிவாக்கம்

டயலொக், பொலன்னறுவையில் இடம்பெற்ற சில்ப சேனா கண்காட்சியில் எதிர்காலத்திற்கான 5G பயன்பாடுகளை காட்சிப்படுத்தியது

2019 ஒக்டோபர் 30        

 

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆனது விஞ்ஞானத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் தொழில்நுட்ப புரட்சி கண்காட்சியான ஷில்பா சேனவில் பலதரப்பட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கisAk; எதிர்காலத்திற்கான 5G பயன்பாடுகளையும் காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கண்காட்சி சமீபத்தில் பொலன்னறுவை விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த கண்காட்சியானது 360ᴼ வீடியோ அழைப்பு, 360ᴼ அதி உயர் வரையறை live VR streaming, மனித போஸ் டிராக்கிங் மற்றும் ரோபோட்டிக் கட்டுப்பாடு, (டிஜிட்டல் இரட்டையர்கள்) தொழில்முறை ரோபோட்டிக்ஸ், AI திறன் கொண்ட மனித ரோபோக்கள், ஸ்மார்ட் உட்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் ஆட்டோமே~ன் (தொழில்துறை கண்காணிப்பு)> மற்றும் பல்வேறு 5G njhopy;El;g பயன்பாட்டுகள், செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர கற்றல் (ML) கணினி பார்வை (CV) இன்டர்நெட் ஒப் திங்ஸ் (IoT), மற்றும் அதிகளவான தரவு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றினை காட்சிபடுத்தியிருந்தது .

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய ஐந்து நாள் தேசிய கண்காட்சியுடன் டயலொக் கைகோர்த்துக் கொண்டதுடன் தொழில்நுட்ப இடைவெளியினை குறைக்க உதவுவதோடு புதிய தொழில்நுட்பத்தையும் அறிவையும் சமூகங்களுக்கு திறம்பட அறிமுகப்படுத்தி 4வது தொழில்துறை புரட்சிக்கு வழிவகுத்தது (IR 4.0).

news-1

சமீபத்திய தொழில்நுட்பத்தை நிரூபிக்கும் டயலொக் கண்காட்சியை சுற்றி கூட்டம்

news-1

குறைந்தளவிலான தாமதம் மற்றும் உயர் அலைவரிசை திறன்களை மேம்படுத்தும் வீடியோ அழைப்பு மற்றும் VR ஸ்ட்றீமிங் சேவைகளின் விளக்கம்

news-1

தொலைநிலை கண்காணிப்பு மற்றும் ஆட்டோமேஷனுக்கான தொழில்துறை IoT விளக்கம்

news-1

புத்திசாலித்தனமான மனித ரோபோவான Sanbot உடன் குழந்தைகள் தொடர்பு கொள்கிறார்கள்