பொருள் விரிவாக்கம்

அம்பாறை மாவட்ட டயலொக் கிளப் விஷன் வாடிக்கையாளர்களுக்கு விசேட பொங்கல் கொண்டாட்டம்

2020 ஜனவரி 22         கொழும்பு

 

news-1

 

இலங்கையின் முதன்மையான விசுவாச திட்டமான கிளப் விஷன், அம்பாறையில் வசிக்கும் தங்களுடைய விசேட சலுகைகளை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிளாக்பஸ்டார் திரைப்படமான தர்பார் திரைப்படத்தினை பொங்கல் பண்டிகைக்கு பிந்தைய விருந்தாக அம்பாறையிலுள்ள ஒரு அதிநவீன திரையறங்கில் பிரத்தியேக சிறப்பு திரையிடலாக வழங்கியிருந்தது.

இது 2020ஆம் ஆண்டில் முதலாவதாக இடம்பெற்ற நிகழ்வாகும். மேலும் டயலொக் கிளப் விஷன் ஏற்பாடு செய்த பல அற்புதமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். கிளப் விஷனானது தனிப்பயனாக்கப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள், வாழ்க்கை முறைகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்ற இன்னும் பலவற்றை தனது மதிப்பு மிக்க அங்கத்தவர்களுக்கு வழங்குகின்றது. டயலொக் கிளப் விஷன் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அற்புத கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களை தெரிந்துக்கொள்ள வாடிக்கையாளர்கள் MyDialog App க்கு அல்லது www.dialog.lk/club-visionக்கு செல்லுங்கள். மேலும் இலங்கையின் முதன்மையான விசுவாச திட்டத்தில் எவ்வாறு இணைந்துக்கொள்வது என்பது பற்றிய விபரங்களையும் அறிந்துக்கொள்ள முடியும்.