பொருள் விரிவாக்கம்

டயலொக் தனது சமீபத்திய Dialog Television ஒலிபரப்பு மையம் மற்றும் செயற்கைக்கோள் புவி நிலையத்தை புத்தளத்தில் திறந்துள்ளது

October 27th, 2022         Colombo

 

Dialog Commissions its Latest DTV Broadcast Centre & Satellite Earth Station in Puttalam

படத்தில் இடமிருந்து வலம்: டயலொக் டெலிவிஷனின் ஊடக சேவை அபிவிருத்திகள் பிரிவின் பொது முகாமையாளர் பண்டார அத்தநாயக்க, டயலொக் டெலிவிஷனின் வர்த்தக பிரிவு தலைவர் சிரந்த டி சொய்சா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேடா. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் தரவு மைய சேவைகள் பிரிவு ஆலோசகர் அமல் களுஆராச்சி, மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் எனர்ஜி அமைப்பின் முதன்மை பொறியியலாளர் ரத்னே பிரசாத்

Dialog Commissions its Latest DTV Broadcast Centre & Satellite Earth Station in Puttalam

அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணையற்ற பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதற்கு, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அர்ப்பணிப்புடன் புத்தளத்தில் தனது சமீபத்திய டயலொக் டெலிவிஷன் ஒலிபரப்பு மையம் மற்றும் மற்றும் செயற்கைக்கோள் புவி நிலையம் ஆகியவற்றை புத்தளத்தில் திறந்துள்ளது

நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கிற்கான ஒருங்கிணைப்பாளராக, டயலொக் தனது வாடிக்கையாளர்களுக்கு உயர்தரத்திலான நம்பகமான தொலைக்காட்சி சேவைகளை உறுதிசெய்து வழங்குவதற்கான வசதியை உருவாக்கியுள்ளது. மாலம்பையில் அமைந்துள்ள அதன் முதன்மை ஒலிபரப்பு மையம் மற்றும் செயற்கைக்கோள் புவி நிலையத்தை போன்றே, புத்தளத்தில் உள்ள டயலொக் தொலைக்காட்சி ஒலிபரப்பு மையம் மற்றும் செயற்கைக்கோள் புவி நிலையம் ஆகியவையும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் பணியமர்த்தப்பட்டு, உயர் சேவை கிடைப்பதை இலக்காகக் கொண்டு முதன்மையாக செயல்படுகின்றன.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேடா, “இலங்கையின் முன்னணி Pay TV சேவை வழங்குனரான, Dialog Television ஆனது, எங்களின் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு மற்றும் கல்விச் சேவைகளை வழங்குவதனையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதைப் போலவே, இந்த அதிநவீன டயலொக் டெலிவிஷன் ஒளிபரப்பு மையம் மற்றும் செயற்கைக்கோள் புவி நிலையம் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லா நேரங்களிலும் தடையற்ற தொலைக்காட்சி சேவைகளை பெறுவதை உறுதிசெய்ய உதவுகின்றது. எங்கள் அதிநவீன உள்கட்டமைப்புடன், இலங்கையின் முதற்தர தொலைக்காட்சி அனுபவத்தை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கான எங்கள் வாக்குறுதியை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்.