பொருள் விரிவாக்கம்

Dialog MyOffer தனிப்பட்ட பயனர் அனுபவத்திற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் வலுவூட்டப்பட்ட சலுகைகளை அளிக்கிறது

2024 ஜூலை 30         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது MyOffer சேவையின் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை அறிவித்துள்ளது. இந்த வெகுமதி தளமானது சந்தாதாரர்களுக்கு பிரத்தியேக சலுகைகளையும் அனுகூலங்களையும் அளிக்கும்பொருட்டு வெளியிடப்பட்டது. இப்போது flash offers மற்றும் பிரசித்தி பெற்ற Blaster Plan-களுக்கான சலுகைகள் ஆகிய அம்சங்களை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் சிறந்த மதிப்பை அளிக்கும் நோக்குடன் இயங்கவுள்ளது. இந்த மேம்பாடு தொலைத்தொடர்பு துறையில் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மைய தீர்வுகளை அளிக்க டயலொக் காட்டும் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களின் மாறுபட்ட தேவைகளுக்கு தீர்வளிக்கிறது.

ஏற்கனவே இருக்கும் call மற்றும் data offer-களுடன், டயலொக் மொபைல் வாடிக்கையாளர்கள் இப்போது நாளாந்தம் புதுப்பிக்கப்படும் flash offers-ஐ பெற்றுக்கொள்ள முடியும். இது தனிப்பட்ட data plan-களை அளிக்கும். இதனுடன் Unlimited Blaster, Fun Blaster, Call Blaster மற்றும் Triple Blaster ஆகிய பிரபல Blaster Plan-களுக்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன. மேலும், Dialog Home Broadband வாடிக்கையாளர்களுக்கு தமது Wi-Fi plan-களுக்கு மேலதிகமாக பிரத்தியேக data சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த முன்னெடுப்பு, வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில் டயலொக் தொடர்ந்து காட்டும் அர்ப்பணிப்பின் ஒரு முக்கியமான அங்கமாகும். வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு தீர்வளிக்கும் வகையில் தனிப்பட வடிவமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதில் டயலொக் எடுக்கும் முன்னேற்றகரமான அணுகுமுறையை இந்த மேம்பாடுகள் காட்டுகின்றன. MyOffer-இன் சேவைகளும் சலுகைகளும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் அவர்களின் தற்போதைய Recharge வழக்கங்களை கருத்தில் கொண்டு கவனமாக உருவாக்கப்பட்டுள்ளன.

சலுகைகளை பார்க்கவும், பயன்படுத்தவும் சந்தாதாரர்கள் MyDialog App-ஐ பயன்படுத்தலாம் அல்லது அவர்களது அருகிலுள்ள சில்லறை விற்பனையாளரை நாடலாம். சில்லறை விற்பனையாளர்கள் Retailer Hub App-ஐ பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க முடியும்.

இந்த புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், Dialog புதிய தொழில்நுட்பத்துடன் சந்தையில் முன்னணி இடத்தை வகிக்கிறது, இணைப்பின் மற்றும் விலையின் மலிவுத்தன்மை இரண்டையும் ஒருசேர மேம்படுத்தி அளிக்கிறது. இந்த மேம்பாடுகள், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளையும் மீறி அவர்களை திருப்திப்படுத்த நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றன. மேலும் தகவல்களுக்கு https://www.dialog.lk/ ஐப் பார்வையிடவும்.