பொருள் விரிவாக்கம்

டயலொக் பாற் பண்ணை விவசாயிகளுக்கான “சவிய” மொபைல் ஆலோசனை சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

2020 ஜனவரி 13         கொழும்பு

 

news-1

 

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பாற் பண்ணை உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்தி திறன் உற்பத்தி செய்யப்படும் பாலின் தரம் மற்றும் கால் நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவதற்காக “சவிய” எனும் மொபைல் சார்ந்த ஆலோசனை சேவையான அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க விவசாய திணைக்களத்தின் உணவுக்கான முன்னேற்றத்தின் முன்முயற்சியினால் நிதியளிக்கப்பட்ட சந்தை சார்ந்த பால் (MOD) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையின் பால் துறையில் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்ட சர்வதேச நிர்வாக சேவை Corps (IESC) உடன் இணைந்து இந்த சேவையானது வழங்கப்படுகின்றது. இது வேளாண்மை முன்னேற்றத்திற்கான உணவு முயற்சியாகவும் காணப்படுகின்றது. “இந்த சேவைக்கான தொழில்நுட்ப அறிவுரைகளை சந்தை சார்ந்த பால் திட்டத்தின் நிபுணத்துவம் பெற்ற குழுவானது வழங்குகிறது.

இலங்கை கால் நடைத் தொழிலில் பால்வளத்தின் முக்கியத்துவம் இருந்த போதிலும் வளர்ந்து வரும் உள்ளூரின் பால் தேவையில் 30-40% ஐ மட்டுமே நாடு பூர்த்தி செய்கின்றது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவையும் தரத்தையும் மேம்படுத்துவதற்காக 5,000 க்கும் மேற்பட்ட பால் விவசாயிகளின் திறனினை மேம்படுத்துவதனை MOD பிரதான நோக்கமாக கொண்டிருந்தாலும் தொடர்புடைய தகவல்களை சரியான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது 332,335 விவசாயிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. பால் நடைமுறைகள், பால் மேலாண்மை, கால் நடை தீவனம் மற்றும் கன்று மேலாண்மை குறித்து துல்லியமான மற்றும் பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் “சவிய” இந்த தகவல் இடைவெளியினை நிவர்த்தி செய்கின்றது. விவசாயிகளின் மொபைல் தொலைபேசிக்கு தகவல்கள் நேரடியாக அனுப்பப்பட்டு விவசாயிகளின் தனிப்பட்ட தேவைகள், விலங்குகளின் வளர்ச்சி நிலைகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களுக்கு ஏற்ப ஊட்டச்சத்து மற்றும் நோய் தடுப்பு போன்றவற்றுக்கு அமைய தனிப்பயனாக்கப்படுகின்றது.

இந்த சேவையானது DAPH, மாகாண DAPH கள் மற்றும் பால் பதப்படுத்தும் நிறுவனங்களின் தற்போதைய விரிவாக்க முயற்சிகளை நிறைவு செய்கின்றது. மேலும் பதிவு செய்யப்பட்ட பால் தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு விலங்குகளின் கர்ப்பகாலத்தில் இருந்து கன்று ஈன்றுதல், பாலூட்டுதல் சுழற்சியுடன் இணைக்கப்பட்ட உரை மற்றும் குரல் வழியாக நேர உணர் திறன்ää வணிக ரீதியாக மதிப்பு மிக்க தொழில்நுட்ப செய்திகளை வழங்குவதன் மூலம் பரந்த அளவை அடைய உதவுகின்றது.

சந்தை சார்ந்த பால் நிறுவன தினத்தில் தயாரிப்பின் முதல் மாதிரி வெளியீடானது கடந்த ஆண்டு ஜுலை மாதம் அனுராதபுரத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்ச்சியில் 800 க்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் கலந்துக் கொண்டார்கள்.

விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களை வழங்குவதற்காகவும் அவர்களின் தனிப்பட்ட பயிர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள உழவர் தோழன் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விவசாயிகளுக்கான டயலொக் இன் சேவைகளில் “சவிய” வும் இணைந்துக்கொள்கின்றது. 600,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுடன் 20 பயிர்களை கொண்ட உழவர் தோழன் சேவையானது இலங்கையின் மிகப்பெரிய மொபைல் விவசாய சேவையாகும். உள்ளடக்க பங்காளிகளின் வேளாண்மை அமைச்சின் கீழ் உள்ள வேளாண்மைத் துறையும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்தின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுடன் இணைந்து குடும்ப ஊட்டச்சத்து ஆலோசனைகளையும் வழங்குகின்றது.

டயலொக் வாடிக்கையாளர்கள் உழவர் தோழன் அல்லது சவிய சேவைகளை பதிவு செய்துக்கொள்வதன் மூலம் தினசரி 1 ரூபாய் மற்றும் வரிகளுக்கு எந்தவொரு பயிருக்குமான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். உழவர் தோழன் அல்லது சவிய அல்லது இரண்டிற்கும் பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டயலொக் கையடக்க தொலைபேசியில் இருநது 616 க்கு அழைத்து அவர்களுக்கு பொருத்தமான மொழியினை பதிவு செய்துக்கொள்ள முடியும். 6162 க்கு அழைப்பதன் மூலமும் சவிய சேவையினை நேரடியாக அணுகிட முடியும்.