பொருள் விரிவாக்கம்

141வது றோயல் தோமியன் ‘Battle of the Blues’ க்கு டயலொக் அனுசரணை வழங்குகின்றது

2020 பெப்ரவரி 19         கொழும்பு

 

news-1

புகைப்படத்தில் இடமிருந்து வலம் : ரோயல் கல்லூரி அணித் தலைவர் தெவிந்து சேனாரத்ன, ரோயல் - தோமியன் போட்டிக்குழு இணைத் தலைவர் பிரசன்ன பெர்னாண்டோ, ரோயல் கல்லூரி அதிபர் B.A. அபேரத்னே, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணாயக்கார, புனித தோமஸ் கல்லூரியின் தற்காலிக வார்டன் அசங்க பெரேரா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் Enterprise Business மற்றும் Large Enterprise விற்பனை பிரிவு உப தலைவர் நவீன் பீரிஸ், ரோயல்-தோமியன் போட்டிக்குழ இணைத்தலைவர் மகேஷ் நானாயக்கார, புனித தோமஸ் கல்லூரி அணித் தலைவர் தெவின் ஏரியகம

இலங்கையின் முன்னணி ஆண்கள் பாடசாலைகளான கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமஸ் கல்லூரி ஆகியவை கௌரவ D.S. சேனாநாயக்க ஞாபகார்த்த கிண்ணத்திற்காக 'Battle of the Blues' என 2020ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு SSC மைதானத்தில் 141வது முறையாக விளையாடவுள்ளார்கள்.

2020ஆம் ஆண்டுக்கான ‘Battle of the Blues’ க்கு இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலாக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்குவதுடன் சகலத்துறை அட்டக்காரர் தெவின் ஏரியகம அவர்கள் கல்கிஸ்சை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதுடன், Reid Avenue சார்பாக தெவிந்து செனாரத்ன தலைமைதாங்கவுள்ளார்.

“ரோயல் - தோமியன்', 140 ஆண்டுகளில் பரவலான மற்றும் வண்ணமயமான வரலாற்றைக் கொண்டுள்ளது, மேலும் இது உலகின் இரண்டாவது மிக நீண்ட தடையில்லா கிரிக்கெட் தொடராகவும் உள்ளது, இது அடிலெய்டில் உள்ள புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஆல்பிரட் கல்லூரிக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் மோதலுக்கு அடுத்தபடியாகும். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட், ஒரு வருடத்திற்கு முன்பே தொடங்கியது மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆ~ஸ் தொடர் 02 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

1880ம் ஆண்டு இடம்பெற்ற முதல் போட்டியானது காலி முகத்திடலுக்கு எதிரில் தற்போது தாஜ் சமுத்ரா ஹோட்டல் அமைந்துள்ள இடத்தில் இடம்பெற்றது. இது நூற்றாண்டின் தொடரின் தொடக்கமாகும். இரண்டு அணிகளும் போட்டியை விளையாடுவதற்காக Beira முழுவதும் தங்கள் படகுகளை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது.

றோய்-தோ விளையாட்டு துறையில் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அமைச்சர் (1901 - 1902) D.S சேனாநாயக்க மற்றும்; அவரது புதல்வர் பிரதம மந்திரி அமைச்சர் (1927-1929) டட்லி சேனாநாயக்க ஆகிகோர் ரோயல் கல்லூரி கிரிக்கெட் அணியில் விளையாடியவர்களாவர். மேலும் பிரதம மந்திரி (1914-1915) சார் ஜோன் கொதலாவல மற்றும் ஜனாதிபதி (1925) J.R ஜயவர்தன ஆகியோர் தோமஸ் கல்லூரி கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவர்களாவர்.

1885ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் இரு பாடசாலைகளுக்கும் இடையிலான ஓட்ட எண்ணிக்கை 35ஆக இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் றோயல் கல்லூரி இரண்டாம் நாளில் 9 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து வெளியேறியது. இதன் போது தோமஸ் கல்லூரி வெற்றியீட்டியது. இந்த கிண்ணமானது தற்போது ரோயல் கல்லூரியில் உள்ளதுடன் இந்த கிண்ணத்தினை இவ்வருடம் தனதாக்கிக்கொள்ள தோமஸ் கல்லூரி மிகுந்த உற்சாகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிதார ஹப்புஹின்ன தலைமையில் 2019ஆம் ஆண்டில் சிறந்த திறமையினை வெளிப்படுத்திய பின்னர் இந்த அண்டு ஒரு ரோயல் கல்லூரிக்கு மிகுந்த சவாலினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Reid Avenue அணியானது கடைசியாக 2016ஆம் ஆண்டு கீ~hந்த படிதரத்ன தலைமையில் கிண்ணத்தை வென்றது.

டயலொக் 2019அம் ஆண்டு 140வது பதிப்பில் இலங்கையின் Blue Ribbon Big Match, The Battle of the Blues உடன் நீண்ட மற்றும் வெற்றிகரமான பங்காளித்துவத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது. ரோயல்-தோமியனின் 141வது பதிப்பு போட்டிக்கு டயலொக் 12வது ஆண்டாக அனுசரணை வழங்கியுள்ளது. பாடசாலை விளையாட்டுக்களின் மேம்பாட்டாளரான டயலொக் ஒவ்வொரு போட்டியின் போது ஒவ்வொரு ஓட்டத்திற்கும் 1000 ரூபாவினையும் ஒவ்வொரு விக்கெட் வீழ்த்தப்படுவதற்கும் 10,000 ரூபாவினையும் வழங்குகின்றது. கடந்த வருட போட்டியின் போது 1,166,000 ரூபாவினை டயலொக் வழங்கியது. ரோயல் மற்றும் தோமஸ் கல்லூரி அதிபர்களுடன் ஆலோசனை நடாத்தி வளங்கள் பற்றாக்குறையாக உள்ள பாடசாலை கிரிக்கெட்டை மேம்படுத்தவதற்கு உதவுகின்றது. ‘Play for a Cause’, தொடக்கத்திலிருந்து 5,143,000 ரூபாய் பெறுமதியினை கொண்ட கிரிக்கெட் உபகரணங்கள் பத்து பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பான மிக உயர்ந்த பாரம்பரியத்தில் விளையாடப்படுகின்றது. இரண்டு பாடசாலைகளும் பரஸ்பர மரியாதைää நட்புறவுää விளையாட்டுத்திறன் மற்றும் விளையாட்டின் பிணைப்பை உருவாக்கியுள்ளன. இது களத்தில் மற்றும் வெளியிளும் பாராட்டப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலமான பிணைப்பாகும். ரோயல் கல்லூரியின் முன்னைய அதிபர் குறிப்பிட்டபடி புனித தோமஸ் இல்லாமல் ரோயல் இல்லை ரோயல் இல்லாமல் தோமஸ் இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.