பொருள் விரிவாக்கம்

Doc990, நோயாளிகளுக்கு சௌகரியமான சேவையினை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் McLeod வைத்தியசாலையுடன் இணைந்துள்ளது.

2020 ஜனவரி 18        Colombo

 

news-1

புகைப்பிடத்தில் இடப்பக்கத்தில் இருந்து : டிஜிட்டல் ஹெல்த் வியாபார மேம்பாடு செயற்குழு அதிகாரி பிரவீன் நியோதன், டிஜிட்டல் ஹெல்த் வணிக பிரிவு தலைவர் ரிசா அனிஃப், யாழ்ப்பாணம் McLeod வைத்தியசாலையின் இயக்குனர் டாக்டர் . பி. சயந்தன், டிஜிட்டல் ஹெல்த் வியாபார மேம்பாட்டு தலைவர் தில்ஹான் ஜெயதிலகே மற்றும் டிஜிட்டல் ஹெல்த் வியாபார மேம்பாட்டு முகாமையாளர் நவோதா ரத்நாயக்க

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் வலுவூட்டப்படும் Doc990, யாழ்ப்பாணம் McLeod வைத்தியசாலையுடன் கூட்டிணைந்துள்ளமையினை சமீபத்தில் அறிவித்துள்ளது. நோயாளிகள் தங்களின் கையடக்க தொலைபேசியிலும் மற்றும் இணையத்தளத்தின் ஊடாகவும் ஏராளமான மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதனை எளிதாக்குகின்றது.

Doc990 தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்களை செனல் செய்தல், டெலி-டாக்டர் சேவை உள்ளிட்ட பல மருத்துவ சேவைகளை வழங்குகின்றது. மேலும் Doc990 இணையத்தளத்தின் ஊடாக தொலைபேசியின் ஊடாக மருத்துவ ஆலோசகர்களை தொடர்புக்கொள்ளல், மருந்துகளை வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ளல் முக்கிய ஆய்வக அறிக்கைகளை அணுகுதல் போன்ற சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் வைத்தியசாலைகளில் ஒன்றான McLeod மருத்துவமனையுடன் ஒன்றிணைந்து Doc990 இயங்குதளம் இப்போது இலங்கை முழுவதிலும் பரந்தளவிலான மருத்துவமனை தேர்வுடன் (115 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள்) தனது சேவையினை வழங்குகின்றது. Doc990 மொபைல் App அல்லது www.doc.lk இணையத்தளத்தின் ஊடாக மருத்துவர்கள் செனல் செய்யும் இலக்கத்தையும் வரிசையினையும் புதுப்பிப்புகளுடன் முழுமையான விபரங்களை வழங்குகின்றமையினால் அதிக நேரம் செலவிடும் அசௌகரியத்தினையும் குறைக்கின்றது.

இது, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் ஆசிரி ஹாஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, நவலோக்கா ஹாஸ்பிட்டல் பிஎல்சி மற்றும் சிலோன் ஹாஸ்பிட்டல் பிஎல்சி (டேர்டன்ஸ்) ஆகிய மூன்று முன்னணி தனியார் மருத்துவமனைகளுக்கிடையிலான கூட்டு முயற்சியாகும். டிஜிட்டல் ஹெல்த் இலங்கையின் சுகாதார துறைக்கு ஒரு டிஜிட்டல் முறையில் அதிநவீன, ஒருங்கிணைந்த, மின் வணிக உட்கட்டமைப்பை செயல்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதார வழங்குனர்களுக்கான மருத்துவ நியமனம் மேலாண்மை, இலங்கையின் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றின் ஊடாக புதிய கூறுகளை விரிவுப்படுத்துகின்றது.

நோயாளிகள் 990 க்கு அழைப்பினை ஏற்படுத்தியும் www.doc.lk க்கு விஜயம் செய்வதன் மூலமும் Google Play Store மற்றும் Apple App Store ஊடாக Doc990 mobile app இனை டவுன்லோட் செய்துக்கொள்வதன் மூலமும் வைத்தியர்களுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும். தற்போது வைத்தியர் பார்வையிடும் இலக்கம் என்ன என்பதையும் மொபைல் App ஊடாகவும் இணையத்தளத்தின் ஊடாகவும் தெரிந்துக்கொள்ள முடியும்.