பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து 100,000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு டேட்டா புலமைப்பரிசீலினை விரிவுபடுத்துகிறது

December 21, 2021         Colombo

 

Students from schools across the nation receiving Data Scholarships from the NanaDiri Data Scholarships programme to further pursue their online learning from home.

நெனதிரி டேட்டா புலமைப்பரிசில் திட்டத்தினூடாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆன்லைன் கற்றலை வீட்டிலிருந்தவாறே தொடர்ந்து முன்னெடுக்க தேவையான டேட்டாவை புலமைபரிசில் அடிப்படையில் பெறுகிறார்கள்.

எந்தவொரு பிள்ளையும் கல்வியை தொடர்வதில் பின்தங்கியிருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மனுசத் தெரணவுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் உள்ள 470 பாடசாலைகளில் உள்ள 103,478 மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் கல்வியினை தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில் 'நெனதிரி டேட்டா புலமைப்பரிசில்' திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக உதவியது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நெனதிரி டேட்டா புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், ‘டயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் 3 மாதங்களுக்கு அவர்களின் கல்வி செயற்பாடுகளுக்காக 10GB டேட்டா வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, "தொற்றுநோயின் பின்னணியில், இந்த தகுதியுள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு நிதி நிவாரணம் வழங்கும் அதே வேளையில், டிஜிட்டல் பிளவைக் குறைத்து எங்கள் தேசத்தை ஆதரிக்கக்கிடைத்தமையினையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கோவிட்-19 பரவலை தொடர்ந்து கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் வகையில் டயலொக் நமது நாட்டின் பாடசாலை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வளங்களை அவர்களுக்கு அளித்து ஒளிமயமான எதிர்காலத்தைத் தொடர வழிவகை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உறுதிபூண்டுள்ளது"

நாடு முழுவதும் உள்ள மாணவர்களை அவர்களின் கல்வி முயற்சிகளுடன் ஆதரிக்கும் தொடர் முயற்சிகளில் இது டயலொக்கின் மற்றொரு முயற்சி. இந்த முயற்சிக்கு மேலதிகமாக, நெனச முன்னெடுப்பின் கீழ் பலவிதமான கல்வி தளங்களை டயலொக் வழங்குகிறது; Nenasa TV, Nenasa Educational App, Nenasa Smart School மற்றும் கட்டணமில்லா Nenasa 1916 தொலைதூர உதவி அழைப்பு சேவை ஆகியன அடங்கும். டயலொக் மெரிட் புலமைப்பரிசில் திட்டங்கள் உயர்தர மாணவர்களின் உயர்கல்வியை ஆதரிக்கின்றன. இந்த முயற்சிக்கு மேலதிகமாக, டயலொக் தனது கல்விசார் பக்கேஜில் நெனச சிங்களம், நெனச தமிழ் மற்றும் குரு TV அலைவரிசைகளுக்கான இலவச அணுகலை டயலொக் டெலிவிஷன் மற்றும் ViU App மூலம் நீட்டித்தது. மிக சமீபத்தில், 2021 உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 379 குழந்தைகள் மேம்பாட்டு மையங்களுக்கும் இலவச புரோட்பாண்ட் இணைப்பை வழங்கியது. மேலும், இ-தக்ஸலாவா, தேசிய கற்றல் உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (LCMS) / கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரத்திற்குப்பட்ட தேசிய பல்கலைக்கழகங்களின் அனைத்து உத்தியோகபூர்வ மின்-கற்றல் தளங்களுக்கும் எந்தவொரு டேட்டா கட்டணமும் இன்றி நிறுவனம் இலவச அணுகலை நீட்டித்தது.