பொருள் விரிவாக்கம்

AI ஆற்றல்மிக்க DIA ஊடாக வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் Dialog

WhatsApp மற்றும் MyDialog App மூலம் அதிநவீன டிஜிட்டல் தானியங்கி சேவை!

2026 ஆகஸ்ட் 03         கொழும்பு

இலங்கையின் #1 தொடர்புச் சேவை வழங்கியான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Dialog இன் அறிவார்ந்த உதவியாளரான (Intelligent Assistant) DIA இன் AI ஆற்றல்மிக்க திறன்களுடன் தனது டிஜிட்டல் வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் உயர்த்தியுள்ளது. 0777678678 என்ற WhatsApp இலக்கத்தின் மூலமும் MyDialog App மூலமும் கிடைக்கப்பெறும் DIA, வாடிக்கையாளர்கள் தமக்கு நன்கு அறிமுகமான டிஜிட்டல் தளங்கள் ஊடாக சேவைகளை இலகுவாகப் பெறவும் நிர்வகிக்கவும் வழிவகுக்கிறது.

DIA மூலமாக, வாடிக்கையாளர்கள் Dialog மொபைல், ஹோம் Home Broadband மற்றும் Dialog Television சேவைகள் தொடர்பிலான பரந்த அளவிலான சேவைகளையும் உதவிக்கோரிக்கைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதில் சேதமடைந்த ரீசார்ஜ் கார்டுகளின் PIN எண்களை மீளமைத்தல், முறைப்பாடுகளைப் பதிவுசெய்தல், துண்டிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் புதுப்பித்தல் (Reconnection), பேக்கேஜ்களை மாற்றுதல் மற்றும் கட்டண மீளளிப்புச் செய்தல் (Reversals), மற்றும் முன்னெச்சரிக்கையான சேவை ஆதரவு (Proactive support) ஆகியவை அடங்கும்.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய பேக்கேஜ், கணக்கு இருப்பு (Account balance) மற்றும் டேட்டா இருப்புகளைப் பார்வையிடவும், பேக்கேஜ்களுக்கு கூடுதல் டேட்டா சேர்க்கவும் முடியும். அத்துடன், அன்றாட கணக்கு மற்றும் சேவை தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் 24/7 மணிநேரமும் டிஜிட்டல் முறையில் DIA வைக் கையாள முடியும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் DIA மூலமாகவே ரோமிங் (Roaming) சேவைகளை இலகுவாகச் செயல்படுத்தி, வெளிநாட்டிலும் தடையற்ற தொடர்பைப் பெற முடியும்.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவரப்பெரும தெரிவிக்கையில், "Dialog இல், தொழில்நுட்பத்தை வசதியுடனும் அணுகல்தன்மையுடனும் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவங்களை நாங்கள் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறோம். AI திறன்கள் இப்போது DIA உடன் இணைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் எங்களுடன் மிகவும் எளிதாகத் தொடர்புகொள்ளவும், விரைவான ஆதரவைப் பெறவும், தினமும் பயன்படுத்தும் டிஜிட்டல் தளங்கள் மூலமே தமது சேவைகளை நிர்வகிக்கவும் முடியும். வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப எளிமையான, உள்ளடக்கிய மற்றும் விரைந்து பதிலளிக்கக்கூடிய எதிர்கால சேவை அனுபவங்களை வழங்குவதற்கான எங்களது பயணத்தில் இது மற்றொரு முக்கிய அடியாகும்." என்றார்.

வாடிக்கையாளர்கள் 0777678678 என்ற WhatsApp இலக்கத்திற்குச் செய்தி அனுப்புவதன் மூலமோ அல்லது MyDialog App ஐ அணுகுவதன் மூலமோ DIA உடன் இணையலாம். மேலதிக விபரங்களுக்கு https://dialog.lk/ask-dia என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

AI ஆற்றல்மிக்க DIA ஊடாக வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் Dialog

WhatsApp மற்றும் MyDialog App மூலம் அதிநவீன டிஜிட்டல் தானியங்கி சேவை!

3rd August 2026         கொழும்பு