டயலொக் 'உழவர் தோழன்' தேசிய தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குகின்றது
ஆகஸ்ட் 23, 2022 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கையின் தேசிய தேயிலை ஆராய்ச்சி அமைப்பான தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) தனது கூட்டாண்மையை சிறப்பாக நீடித்து இலங்கையின் முன்னணி கையடக்கத் தொலைபேசி அடிப்படையிலான விவசாயத் தகவல் சேவையான 'உழவர் தோழன்' சேவையினை வழங்கவுள்ளமையினை சமீபத்தில் அறிவித்தது.
தேயிலை கைத்தொழில் இலங்கையின் மிகவும் பழமையான தொழில்களில் ஒன்றாகும். இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன் அவர்களில் 400,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறிய தேயிலை தோட்டங்களை வைத்துள்ளர். சிறிய தேயிலை தோட்டங்களுக்கு நிலையான மற்றும் விரிவான ஆலோசனை சேவைகளை வழங்குவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தேயிலை சாகுபடி மற்றும் தேயிலை உற்பத்தி தொடர்பான புதிய தொழில்நுட்பம் மற்றும் முறைகளை வழங்குவதில் நிபுணத்துவம் கொண்டதாக செயற்படுகின்றது. 1925 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தேயிலை பயிர்ச்செய்கை மற்றும் தேயிலை உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற ஒரே ஒரு தேசிய நிறுவனமாகும். இது நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது / பிரபலப்படுத்துகின்றது.
மூன்று மொழிகளிலும் கிடைக்கும். உழவர் தோழன் சேவையானது, செழிப்பான பயிர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் விரிவான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஒவ்வொரு விவசாயியின் தேவைக்கேற்ப அதாவது, அவர்களின் பயிர் வகை, பண்ணை இருப்பிடம், மற்றும் சாகுபடியின் நிலை ஆகியவற்றுக்கு அமைய சரியான நேரத்தில் துல்லியமான தகவல்களை வழங்குகிறது. தற்போது தேயிலை சாகுபடி உட்பட 32 வகையான பயிர்களுக்கு விவசாய ஆலோசனைகளை உழவர் தோழன் சேவையானது வழங்குகின்றது. இந்த சேவையினை பெற்றுக்கொள்ள எந்தவொரு டயலொக் மொபைல் தொலைபேசியில் இருந்தும் 616க்கு அழையுங்கள் மற்றும் உழவர் தோழன் அழைப்பு சேவையுடன் இணைந்துக்கொள்ளுங்கள் மற்றும் Google Play Store மூலம் உழவர் தோழன் App ஐ டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். அழைப்புச் சேவைக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு ஒரு ரூபாய் (+வரி) அறவிடப்படுவதுடன் Dialog மொபைல் வாடிக்கையாளர்கள் மொபைல் App மூலம் அழைப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாளொன்றுக்கு 2 ரூபாய் (+வரி) அறவிடப்படும். மேலும் எவ்விதமான டேட்டா கட்டணங்கள் அறவிடப்படுவதில்லை.
உழவர் தோழன் சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு https://www.dialog.lk/govi-mithuru க்கு செல்லுங்கள்.