பொருள் விரிவாக்கம்

'நாற்திசையும் டயலொக்' 2021 செயற்திட்டத்தினூடாக 1028 கிராமங்கள் மற்றும் தொலைத்தூர கிராமப்புற சமூகங்களுக்கான தொலைத் தொடர்பு இணைப்பை டயலொக் மேம்படுத்துகிறது

453 புதிய 4G கோபுரங்கள் , 2021 இல் மொத்தமாக 4380 தொடர்பு கோபுரங்கள்

மார்ச் 25, 2022         கொழும்பு

 

Newly commissioned Yakupitiya tower

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேதா அவர்கள், டயலொக் வலையமைப்பு சேவைகள் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக் பெர்ணான்டோ அவர்கள் ஆகியோருடன் டயலொக் தொழிநுட்ப மற்றும் விற்பனை குழு உறுப்பினர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யக்குப்பிட்டிய கோபுரத்தின் அருகே குழுவாக எடுத்துக்கொண்ட படம்.

Commissioning of the Yakupitiya tower

யக்குபிட்டிய கோபுரம் டயலொக் வலையமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பம்.

புகைப்படத்தில் இடமிருந்து வலமாக: டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழும பிரதம நிறைவேற்று தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டி அல்மேதா அவர்கள் , பாலிந்தநுவர பிரதேச செயலாளர் தர்ஷன ரணசிங்க அவர்கள் மற்றும் டயலொக் வலையமைப்பு சேவைகள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக் பெர்னாண்டோ அவர்கள் ஆகியோரை காணலாம்.

நாட்டின் ஒவ்வொரு முனையிலும் தொடர்பாடல் இணைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையர்களின் வாழ்வை வலுவூட்டுவதற்கும் வளப்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வழங்குமுகமாக, இலங்கையின் பரந்துபட்ட வலையமைப்பான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது முன்முயற்சியின் மூலமாக 'நாற்திசையும் டயலொக்' எனும் செயற்திட்டத்தை அறிவித்திருந்தது, அதற்கமைய 1028 கிராமங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் தொடர்பாடல் இணைப்பை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியின் மற்றுமொரு முயற்சியாக களுத்துறை மாவட்டத்தில் யக்குபிட்டிய தொடர்பு கோபுரத்தை டயலொக் நிறுவனம் அண்மையில் ஆரம்பித்து வைத்தது. மேற்படி 'நாற்திசையும் டயலொக்' செயற்திட்டமானது, எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதும் கவரேஜ் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்தகைய சவாலான காலகட்டத்தில் கவரேஜ் வசதிகளை தொடர்ந்து விரிவுபடுத்தியவாறு வாடிக்கையாளர்களின் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற டயலொக் நிறுவனம் 2021 ஆம் ஆண்டுக்குள் 3000 ற்கும் அதிகமான தொலைத்தொடர்பு கோபுரங்களில் செயற்திறனை மேலும் அதிகரித்து, 453 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைத்துள்ளதுடன், டயலொக் வலையமைப்பினுள் 4380 4G மொபைல் கோபுரங்களை அமைத்துள்ளது. இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தொடர்பாடல் கோபுரங்கள் என்ற பெருமையையும் இது சேர்ப்பித்தது.

தொலைதூர கிராமப்புற சமூகங்களைச் சென்றடைவதற்கு ஏற்றவாறு 'கிரீன் ஃபீல்ட்' கோபுரங்களை பயன்படுத்தி, டயலொக் அதன் கவரேஜ் திறனை விரிவுபடுத்தியது. மேலும், அடர்த்திமிகு பகுதிகளில் அவசரத் கவரேஜ் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளக்குக் கம்ப தீர்வுகளையும் பயன்படுத்தியது.

'நாற்திசையும் டயலொக்' செயற்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு இணைப்பின் தேவை மற்றும் ஓர் ஒன்றிணைந்த தேசமாக முன்னோக்கிச் செல்வதற்கு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் ஒரு தேசிய மட்டத்திலான கலந்தாலோசனைகளை நாங்கள் நடத்துகிறோம்" என டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைவருக்கும் டிஜிட்டல் வசதிகளை வழங்குவது தொடர்பில் நிறுவனம் என்ற ரீதியில் நாம் பார்க்கின்ற பார்வையிலும் அதனை கையாளும் விதத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்த உலகளாவிய பெருந்தொற்று ஒரு காரணியாக அமைந்தது. அவ்வாறே, இந்த திட்டத்தின் மூலம் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளையிலும், நபரிலும், குடும்பத்திலும் மற்றும் சமூகத்திலும் சிறந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தக்க எதிர்காலத்தை நோக்கி நாம் நகர்கிறோம் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்." என்றார்.

டயலொக் வலையமைப்பின் கவரேஜ் வசதிகளை மேம்படுத்தலானது, வலையமைப்பு கண்காணிப்பில் ஈடுபடுகின்ற சர்வதேச கண்காணிப்பு நிறுவனங்களின் பாராட்டை பெற்றுள்ளதுடன், Tutela நிறுவனத்தினால் 'சிறந்த 4G கவரேஜ்' கொண்ட வலையமைப்பு என டயலொக் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் ஆறு மாதங்களில் மேலும் 200 தொடர்பாடல் கோபுரங்களை நிர்மாணித்து இலங்கையில் கவரேஜ் திறனை மேலும் மேம்படுத்துவதற்கு டயலொக் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியை அடைகையில் 95% க்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு 'கவரேஜ்' வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளது.