Body

டயலொக் இலங்கையில் முதன்முறையாக ‘WiFi 6’ - எனும் அடுத்த தலைமுறை WiFi தரநிலையை அறிமுகப்படுத்தியுள்ளது

2023 மார்ச் 09         கொழும்பு

 

Next-Gen WiFi Standard

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி 'எதிர்காலம் இன்றே' எனும் தமது வர்த்தக நாம நெறிமுறைக்கமைய உண்மையாக செயற்படுவதன் மற்றுமொரு அடையாளமாக இலங்கையில் முதன்முறையாக Wi-Fi தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை தரநிலையான ‘WiFi 6’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அநேகமான வீடுகளில், ஸ்மார்ட்ஃபோன்கள், டெப்லட்டுகள் தொடக்கம் TVகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் மற்றும் தடையற்ற இணைப்பு தேவைப்படும் அதிக Wi-Fi இல் இயக்கப்படும் சாதனங்கள் போன்றன பாவனையில் இருப்பதனால், அறிமுகமாகியுள்ள இந்த புதிய Wi-Fi 6 ஆனது மேற்குறிப்பிட்ட பல சாதனங்களுக்கு இடையே சிறந்த தகவல்தொடர்புகளை செயல்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் அதிவேகத்திலும் குறைந்தளவு தாமதத்திலுமான டேட்டா தேவைப்படும் சந்தர்ப்பம் எழுவதால், அதன்போது Wi-Fi 6 ஆனது குறுக்கீடுகள் மிக்க வலயங்களிலும் கூட (அதாவது பல Wi-Fi வலையமைப்புகள் கொண்ட) சாதனங்கள் உகந்த முறையில் பரந்த பாதுகாப்புடன் தொழிற்பட உதவிகரமாக இருக்கின்றது.

Wi-Fi 6 என்பது முன்னையவற்றை காட்டிலும் கணிசமான மேம்படுத்தல் தன்மையை கொண்டதாகும், பல சாதனங்கள் டேட்டாவை கோரத் தொடங்கும் போதும், ஒரே வலையமைப்பில் பல Wi-Fi சாதனங்களைப் பயன்படுத்தும் போதும் ஏற்படும் சிக்கல்களைத் தணிப்பதற்கு உதவும் வகையில் Wi-Fi 6 புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது. மேலும், இந்த Wi-Fi 6 தொழில்நுட்ப பாவனையின்போது ஏற்படும் குறைந்தளவேயான தாமதமானது சிறந்த கேமிங் (gaming) மற்றும் ஸ்ட்ரீமிங் (streaming) அனுபவத்தை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.

Dialog Smart Home சமீபத்தில் WiFi 6 மூலம் செயற்படுத்தும் ‘Wi-Fi Mesh’ ஐ அறிமுகப்படுத்தியது, இது ஒரு முழுமையான மற்றும் மிகவும் பாதுகாப்பான வீட்டு Wi-Fi அமைப்பாக, குறைந்த கவரேஜ் புள்ளிகளை அகற்றுவதன் மூலம் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் Wi-Fi இணைப்பை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்திற்கு தயார்மிகு தீர்வு தொகுப்புகளில் இணைந்த சமீபத்திய சேர்ப்பிப்பாக இது அமைந்துள்ள அதேவேளை, தடையற்ற இணைப்பின் தேவையையும் நிவர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Dialog Smart Home Wi-Fi 6 செயற்படுத்தும் - Mesh பற்றிய மேலதிக விபரங்களை www.dialog.lk/smart-home ஊடாக அறிந்துக்கொள்ள முடியும்.