Body

டயலொக் தனது கூட்டாளர்களான Meta வுடன் இணைந்து Text-only Facebook மற்றும் Discover மூலமாக Underconnected செய்யப்பட்டவர்களை இணைத்தல் போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது

2023 ஏப்ரல் 04         கொழும்பு

 

Dialog Launches Text-only Facebook & Discover

டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி Meta உடன் இணைந்து, எழுத்து மட்டுமேயான ஃபேஸ்புக் (Text- only Facebook) மற்றும் Discover App ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த இணைப்பு வசதி உள்ளவர்கள், Facebook இனை அணுகுவதற்கும், தரவுக் கட்டணங்கள் இல்லாமல் இணையத்தில் எழுத்து மூலமான உலாவலுக்கும் இது உதவுகிறது.

ஃபேஸ்புக்கின் இந்த Text- only Facebook எனும் உரை - மட்டும் பதிப்பு பயனர்கள் தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைந்திருக்கவும், புதுப்பிப்புகளைப் பகிரவும் மற்றும் அவர்களின் மொபைல் சாதனங்கள் மூலம் முக்கியமான தகவல்களை அணுகவும் அனுமதிக்கிறது. இருப்பினும், பயனர்கள் இந்த பதிப்பில் வீடியோக்கள் அல்லது படங்களை பார்க்க முடியாது. டயலொக் வாடிக்கையாளர்கள் தங்கள் Facebook பயன்பாட்டில் உரை மட்டும் பயன்முறை மற்றும் Facebook இன் முழுப் பதிப்பு (டேட்டா பயன்முறை) ஆகியவற்றுக்கு இடையே மாறுவதற்கான விருப்பத்தை இப்போது பெற்றுள்ளனர். டிஸ்கவர் மொபைல் வெப் (Discover mobile web) மற்றும் Android App மூலம் டயலொக் வாடிக்கையாளர்கள் டேட்டா இல்லாமல் இணையம் முழுவதும் இணைய தளங்களை உலாவலாம். இந்த முன்முயற்சியின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய, இலவச தரவை பயன்படுத்தும் போது குறைந்த அலைவரிசை போக்குவரத்தை மட்டுமே Discover ஆதரிக்கிறது, அங்கு வீடியோ, ஓடியோ, படங்கள் மற்றும் ஏனைய வகையான தீவிர டேட்டா பாவனைகளை இது ஆதரிக்காது.

"டயலொக்கில், ஒவ்வொரு இலங்கையருக்கும் இணைய அணுகல் அவசியமானது என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த முயற்சியானது எங்களது 17 மில்லியன் சந்தாதாரர்களுக்கு அடிப்படை இணைய சேவைகளை அணுக உதவும் என நாங்கள் நம்புகிறோம்" என டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், "டிஜிட்டல் இடைவெளிகளை குறைத்து அனைவருக்கும் மலிவாகவும் மற்றும் அணுகக்கூடிய இணையச் சேவைகளை வழங்குவதற்கான Dialog இன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்கவரில் டேட்டா கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் Facebook மற்றும் இணையத்தில் உலாவுவதற்கான திறனை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனவே, அவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பில் இருப்பதற்கான வசதியை இது வழங்குகிறது" என்றார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தக அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டாளர் பங்காளித்துவத்திற்கான Meta இன் உப தலைவர் போள் கிம் தெரிவிக்கையில் "இலங்கை மக்களுக்கான நிலையான மற்றும் நம்பகமான இணைப்பிற்கான அணுகலை மேம்படுத்த உதவும் வகையில் Dialog உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது இந்த கூட்டிணைவானது இணையவழி இணைவில் நிலவும் முக்கிய தடைகளை அகற்றுவதில் ஒரு முன்னோக்கிய படியாக அமைந்துள்ளது" என்றார்.

text-only Facebook மற்றும் Discover பற்றிய கூடுதல் விபரங்களை https://dlg.lk/3lWuya7 ஊடாக அணுகலாம்.