பொருள் விரிவாக்கம்

இலங்கையின் விளம்பர துறையில் புதிய புரட்சி! Dialog Television மற்றும் Emerging Media கூட்டணி

2025 மார்ச் 14         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

புகைப்பட விளக்கம் இடமிருந்து வலமாக: யமித் அனுராத, தயாரிப்பு மேலாளர் - விளம்பர வணிகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஜெஃப்ரி பால்ட்சிங், சேனல் விளம்பரம் - DTV தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; புபுது அலுத்கெதர, வணிகத் தலைவர் - ஊடகம் மற்றும் உள்ளடக்கம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஹர்ஷ சமரநாயக்க, துணைத் தலைவர் - பிராண்ட் மற்றும் ஊடகம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லிம் லி சான், குழு தலைமை இயக்க அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சஞ்சீவ ராஜபக்ஷ, நிறுவனர் / நிர்வாக இயக்குனர், Emerging Media; டைனர் பெர்னாண்டோ, இணை நிறுவனர் / இயக்குனர், Emerging Media; N. ஹீரத், தலைமை நிர்வாக அதிகாரி, Emerging Media. ரோஹந்த வீரசேகர, நிறுவன விற்பனை மேலாளர் - உள்ளூர் சேனல்கள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மை Pay- TV சேவை வழங்குநராக இருக்கும் Dialog Television, விளம்பரத்தின் எளிமையும், திறனும் மேம்பட Emerging Media உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம், Dialog Television, வழங்கும் உலகத் தரத்திலான பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் Emerging Media -வின் டிஜிட்டல் விளம்பரம் மற்றும் இலக்காகக் கொண்ட சந்தைப்படுத்தல் (targeted marketing) திறன்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இந்த இணைப்பு, திரைப்படங்கள், கல்வி-பொழுதுபோக்கு, குழந்தைகள், இசை, விளையாட்டு, உள்ளூர் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பிரிவுகளில் 18 விளம்பரத்திற்குரிய சேனல்களை கொண்ட Dialog Television மற்றும் Emerging Media -வின் நவீன விளம்பரத்துறை திறமைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு பல சேனல்களில் பிராண்ட் வெளிப்பாட்டை அதிகரிக்க வணிகங்களுக்கு ஒரு தடையற்ற தளத்தை உருவாக்குகிறது.

1.7 மில்லியன் வீடுகளுக்கு மேல் சென்றடையும் Dialog Television, விளம்பரதாரர்களுக்கு பரந்த ரசிகர் கூட்டத்தை சென்றடையும் ஒரு வலுவான தளமாக விளங்குகிறது. &flix, Star Movies, TLC, Animal Planet, AXN, Zee Café, Comedy Central, Star Plus, A+, Nickelodeon, Star Vijay, Zee Tamil, Star Sports, Ten Cricket, Sony SIX, ThePapare TV, Channel One, Citi Hitz, Channel C உள்ளிட்ட பிரபல உலகளாவிய மற்றும் உள்ளூர் சேனல்களில் விளம்பரங்களை பதிய ஏதுவாக உள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம், Emerging Media விளம்பர விற்பனையை எளிதாக்கி, குறிப்பிட்ட பார்வையாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு விளம்பரங்களை செலுத்த உதவுகிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழு தலைமை செயல் அதிகாரி லிம் லி சான் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் முன்னணி Pay- TV சேவை வழங்குநராக, நாங்கள் இலங்கை முழுவதும் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட 1.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு சேவை செய்கிறோம். இன்று, Emerging Media உடன் இந்த கூட்டாண்மையில் இணைந்து, எங்கள் நிர்வாகத் தொலைக்காட்சி தளம் மற்றும் பிராண்ட் பலத்தை பயன்படுத்தி இலங்கை முழுவதும் உள்ள உள்ளூர் வணிகங்களுக்கு தரமான விளம்பர வெளிப்பாடு மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என தெரிவித்தார்.

Emerging media-வின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ ராஜபக்ஷ இதைப் பற்றி கூறுகையில்,”Dialog Television உடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். இது இலங்கையின் மீடியா மற்றும் விளம்பர துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், விரிவான, மேம்பட்ட மற்றும் நவீன விளம்பர தீர்வுகளை வழங்குகிறோம். Dialog Television சேவையின் பார்வையாளர்களை அதிகரிக்க, அதேசமயம் விளம்பரதாரர்கள் முழுமையான சந்தைப் பிரவேசத்தையும் (Market Penetration) இலக்கமிடலையும் எளிதாக்கலாம். இலங்கையின் விளம்பர துறையை ஒரு புதிய மட்டத்துக்கு கொண்டு செல்லும் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக இது இருக்கும்.” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பின் மூலம், Dialog Television வழங்கும் பரந்த உள்ளடக்க சேகரிப்பையும், Emerging media-வின் டிஜிட்டல் விளம்பர நுண்ணறிவையும் இணைத்து, விளம்பரதாரர்களுக்கு எளிமையான மற்றும் பயனுள்ள விளம்பர வாய்ப்புகளை வழங்கும் ஒரு வலுவான தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.