நாடளாவிய ரீதியில் உள்ள eZ Banking முகவர்கள் தற்போது Genie டிஜிட்டல் சேமிப்பு கணக்குகளுக்கான பணவைப்புகளை மேற்கொள்ள முடியும்
2023 ஜூலை 10 கொழும்பு
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா மற்றும் Dialog Finance PLC வழங்கும் Genie டிஜிட்டல் சேமிப்பு கணக்குகளுக்கான பண வைப்புக்களை நாடு முழுவதுமுள்ள eZ Banking நிலையங்களில் மேற்கொள்ள eZ Banking முகவர்கள் தற்போது தேவையான உதவிகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
புரட்சிகரமான இந்த eZ Banking சேவையென்பது eZ Cash தளத்தின் ஒரு மற்றுமொரு சேவையாகும். நாடுமுழுவதும் இலங்கையர்களுக்கு டிஜிட்டல் நிதி அனுபவத்தில் ஒப்பில்லாத சௌகரித்தையும் வசதியையும் வழங்குவதோடு eZ Cash நாட்டின் மிகப்பெரிய மொபைல் பண வலையமைப்பாகும். இது நாடளாவிய ரீதியில் பணப்பரிமாற்றத்தை சாதாரண மக்களுக்கு ஏற்ப இலகுவாக்கும் வகையில் இயங்குகின்றது.
Dialog Finance PLC இன் genie டிஜிட்டல் சேமிப்பு கணக்கானது கவர்ச்சிகரமான வட்டிகளுடன் அவர்களின் மொபைலிலுள்ள genie App ஊடாக முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட genie டெபிட் அட்டை மூலம் டிஜிட்டல் கட்டண செலுத்துகைகளை மேற்கொள்ளவும் பணப்பரிமற்றங்களை நிகழ்த்தவும் வழிவகுக்கிறது. eZ Banking கணக்கு உள்ளவர்களுக்கு தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள 1300 eZ Banking நிலையங்களூடாக பணவைப்பை மேற்கொள்ளமுடிவதன் மூலம் நாட்டின் மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட டிஜிட்டல் கணக்காக இது திகழ்கிறது.
Dialog இனால் வலுவூட்டப்படும் eZ Banking சேவையானது பிற வங்கி வாடிக்கையாளர்களின் பணம் வைப்பு செய்தல் மற்றும் மீளப்பெறல் முதலிய வங்கி பரிவர்த்தனைகளை eZ Cash விற்பனையாளர்கள் ஊடாக மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு புரட்சிகரமான வங்கி சேவையாகும். நாடு முழுவதும் பல்வேறு விற்பனைநிலையங்களில் பரந்துவிரிந்துள்ள eZ Banking வலையமைப்பினூடாக வசதியான வங்கி சேவைகளை வழங்குகிறது. இது ஒவ்வொரு விற்பனையாளரையும் ஒரு வங்கி முகவராக மாற்றுகின்றது.