பொருள் விரிவாக்கம்

இலங்கையில் பரந்த புரோட்பாண்ட் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி க்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு IFC முன்வந்துள்ளது.

ஜூலை 26th, 2022         கொழும்பு

 

IFC Provides US$150 Million Funding Package

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சட்ட மற்றும் ஒழுங்குமுறை பிரிவின் குழும பொது ஆலோசகர்/துணைத் தலைவர் - றினேஷ் பெர்னாண்டோ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிதி அதிகாரி - வொங் ஹொங் சுயூ , IFC யின் இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான அதிகாரி - விக்டர் அன்டனிப்பிள்ளை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி - சுபுன் வீரசிங்ஹ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைவர் - டேவிட் நை பெக் லூ மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பெருநிறுவன நிதி தலைவர் - அஹமட் ரிஸா .

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி - டயலொக் (Dialog Axiata PLC ), சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) ஆதரவுடன் நாடு முழுவதும் புரோட்பாண்ட் இணைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் தயாராக உள்ளது.

மேற்படி IFC இன் 150 மில்லியன் டொலர் கடனுதவியானது , ஏற்கனவே உள்ள தளங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிய 4G தளங்களை உருவாக்குவதன் மூலம் டயலொக் அதன் வலையமைப்பு திறனை மேலும் விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் அது உதவிகரமாக அமையும். அதற்கமைய , Dialog அதன் 'ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்' தடத்தை (fibre optic network footprint) அதிகரிக்கவும் மற்றும் முக்கிய வலையமைப்பு செயற்பாடுகளில் கொள்திறன்கள் மற்றும் செயற்திறன்கள் இரண்டையும் அதிகரிக்கச்செய்து மேம்படுத்தல்களைச் செயற்படுத்தவும் முயல்கிறது.

இலங்கையில் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக, டயலொக் நாட்டிலுள்ள மொபைல் மற்றும் நிலையான புரோட்பாண்ட் சந்தையில் டயலொக் 50 சதவீதத்திற்கும் மேலாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதுமட்டுமன்றி இலங்கையில் பின்தங்கிய பகுதிகளுக்கு தரமான இணைப்புகளை திறம்பட விரிவுபடுத்துவதற்கும் தயாராக உள்ளது.

32 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பாவனையாளர்களைக் கொண்டு, மொபைல் சேவைகளின் பாவனையில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது, 149 சதவீத மொபைல் பாவனையில் தெற்காசிய நாடுகளில் மாத்திரம் அது சராசரியாக 85 சதவீதமாக உள்ளது. புரோட்பாண்ட் பாவனை மற்றும் அதன் வசதித்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய தரவரிசையில் இலங்கையானது முதல் 20 நாடுகளுள் ஒன்றாக இடம்பிடித்துள்ள அதேவேளை, இணைய தரம் மற்றும் வேகம், பதிவிறக்க வேகம் ஆகியவற்றில் உலகளவில் 125வது இடத்தையே (141 நாடுகளுள்) பெற்றுள்ளதால், இணையத் தரம் மற்றும் வேகம் ஆகியவற்றில் பலவீனமாக உள்ளதையே அது உணர்த்துகின்றது. முக்கியமாக மொபைல் தரவு பயன்பாடு மற்றும் 3G போன்ற பழைய தொழில்நுட்பங்களை அதிகமாக நம்பியிருப்பதன் காரணமாகவே சந்தையில் தரவரிசையில் இந்த குறிப்பிடத்தக்க இடைவெளி ஏற்பட்டுள்ளது.

IFC இன் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஹெக்டர் கோமஸ் அவர்கள் இது குறித்து தெரிவிக்கையில், “தரமான மற்றும் நம்பகமான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பானது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல மடங்கு விளைவைக் கொண்டிருக்கிறது. சமூகங்களை நெருக்கமாகக் கொண்டுவரும் அதே வேளையில் டிஜிட்டல் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை இது ஊக்குவிப்பதுடன் வளர்ச்சி மற்றும் வேலைகளுக்கான புதிய மற்றும் புதுமையான வழிகளை திறப்பதற்கு இது வாய்ப்பளிக்கிறது, டயலொக் உடனான இந்த பங்காளித்துவத்தில் IFC இன் முதலீடானது, தற்போதைய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும், இலங்கையின் தனியார் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி தலைவர் டேவிட் நை பெக் லாவ் அவர்கள் , “IFC , ஆசிஆட்டா மற்றும் டயலொக் இடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. கடந்த பல வருடங்களாக டயலொக் மற்றும் இலங்கை மீது IFC கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் நமது நோக்கிற்கேற்ப நாட்டின் தொலைத்தொடர்பு இணைப்பு உட்கட்டமைப்பை முன்னேற்றுவதற்கான எங்கள் பயணத்தில் நாம் தற்போது எதிர்கொள்ளும் பாரிய சவால்களை எதிர்கொள்வதற்கு உதவிகரமாக உள்ள அவர்களின் இந்த உறுதியான ஆதரவிற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். இலங்கையரின் வாழ்க்கைமுறை மற்றும் தொழில்முனைவு நிறுவனங்களையும் வளப்படுத்தி செழிக்கச்செய்வதில் இது முக்கிய பங்காற்றுகின்றது. இந்த சவாலான காலங்களில் IFC இன் இந்த நிதியுதவி இலங்கையின் எதிர்கால டிஜிட்டல் இணைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கும்." என்றார்.

முன்னணி பிராந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான Axiata Group Berhad இன் ஒரு பகுதியான Dialog, IFCயின் நீண்டகால வாடிக்கையாளராக இருந்து வருகின்றது. 2004 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் முந்தைய கடன் மற்றும் பங்கு முதலீடுகள் தவிர, இலங்கையிலுள்ள டயலொக் விநியோகஸ்தர்களின் வணிகத் திறன்களை வலுப்படுத்தவும், நாட்டின் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட சிறு வணிக உரிமையாளர்களுக்கு பயனளிக்கவும் IFC உதவியது. மேலும் ஆசிஆட்டா குழுமம், பங்களாதேஷ் உட்பட ஆசியாவில் IFC க்கு முக்கிய பங்குதாரராக இருந்து வருகின்றது, IFC ஆனது செயற்பாட்டிலுள்ள சந்தைகளில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பணிப்பாளர் / குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அதிகாரி சுபுன் வீரசிங்ஹ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “IFC உடனான டயலொக்கின் இந்த தொடர்பு 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்கின்றது, மேலும் ஒரு தேசமாக டயலொக் மற்றும் இலங்கை மீது அவர்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இன்று, நாம் ஒரு நாடாகவும், ஒரு நிறுவனமாகவும் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். IFC மற்றும் ஆசிஆட்டாவின் இந்த இணைவின் மூலம், நாட்டில் அடுத்த கட்ட தொலைத்தொடர்பு இணைப்பு உட்கட்டமைப்பு மேம்படுத்தலை ஆரம்பிக்கவும், தடையில்லா சேவைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை அனைத்து இலங்கையர்களுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பைத் தொடரக்கூடியதாகவும் அமையும்." என்றார்.

2050 ஆம் ஆண்டளவில், பசுமைமிகு தொடர்புகளை பின்தொடர்வதற்கும், உலகளாவிய காலநிலை நடவடிக்கை இலக்குகளை ஆதரிப்பதற்கும் மற்றும் நிகர பூஜ்ஜிய CO2 உமிழ்வை அடைவதற்கும் டயலொக் மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு அமைய, அதற்கான மொபைல் ஃபோன் இணைப்புகளுக்கான IFC செயற்திறன் தரநிலைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக முகாமைத்துவ கட்டமைப்பினூடேயான உறுதிகளை IFC வழங்கும்.

“இணைப்பை வலுப்படுத்துவது மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவது இலங்கைக்கு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியமானதாகும். இந்த சமீபத்திய முதலீட்டின் மூலம், IFC -Dialog Axiata synergy, நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் வணிகங்களுக்கான இணைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கான கூட்டுறவில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது,” என IFC இன் ஆசியா மற்றும் பசுபிக் உட்கட்டமைப்புக்கான பிராந்திய தொழில் பணிப்பாளர் இசபெல் சாட்டர்டன் தெரிவித்தார். "தொழில்நுட்பத்தின் ஆற்றலைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் புதுமைகளை உருவாக்கவும் மேலும் இலங்கையர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்." எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தத் துறை வேகமாக வளர்ந்து, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி வருவதால், வளர்ந்து வரும் சந்தைகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முன்னணி மேம்பாட்டு நிதியளிப்பாளர்களில் ஒன்றாக IFC தொடர்வதுடன் , சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து அம்சங்களையும் அது ஆதரிக்கின்றது. அதற்கமைய கடந்த தசாப்தத்தில், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் 6.5 பில்லியன் டொலர்களுக்கு அதிகமாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 பில்லியன் டொலர்களுக்கு அதிகமாகவும் நிதிப்பங்களிப்பை IFC வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் மேலதிகமாக, IFC அதன் சேவை நிறுவனங்களுக்கு அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடைமுறைகளை IFC இன் செயல்திறன் தரநிலைகளுக்கேற்ப சீரமைக்க உதவுகிறது.