4As Philosophy
"கூம்பின் கீழ்பகுதியில் செல்வச்செழிப்பு" காணப்படுவதை டயலொக் ஏற்றுக் கொள்வதுடன், சந்தையை இலாபம் உள்ளடங்கிய வகையில் அணுகுவதற்கான நிலையான வர்த்தக மாதிரிகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. எமது சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் நாம் கடுமையாக உழைத்து வருகிறோம், குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும், குறைந்த வருமானமீட்டுபவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இவை சென்றடைவது தொடர்பில் அதிக கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் இணைப்பொன்றின் மூலம் பொருளாதார, கல்வி, சுகாதார மற்றும் களியாட்ட அனுகூலங்களை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வகையில் காணப்படும் பிரதான சவால்களில், சேவை கிடைக்கும் நிலை, தாங்கிக் கொள்ளும் தன்மை, பொருந்தும் தன்மை மற்றும் நாட்டம் போன்றன மிகவும் ஏற்புடையனவாக அமைந்துள்ளன. எமது நிலையான வர்த்தக மாதிரிகளின் மூலம், தொழில்நுட்ப கட்டளைப்படிவங்கள், சேவை மற்றும் வர்த்தக மாதிரிகள் மற்றும் தொடர்ச்சியான முதலீடுகளின் மூலம் இந்த சவால்களை நாம் கையாண்டுள்ளோம்.
எமது பெரும்பாலான புத்தாக்கங்கள், நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி உள்நாட்டவர்களை அவற்றுக்கு இலகுவாக பழக்கப்படுத்திக் கொள்ளும் வகையிலமைந்த வகையில் ஊக்குவிப்புகளை முன்னெடுக்கப்படுகின்றன. இவை டயலொக்கில் புத்தாக்கமான செயற்பாடுகளுக்கு வழிகோலியுள்ளன.
CASE: டயலொக் மொபைல் – eZ ரீலோட்
இந்த முறை இலங்கையில் இலத்திரனியல் முறை மீள்நிரப்பு (ரீசார்ஜ்) செய்யும் தொழில்நுட்ப பாவனையை ஊக்குவிக்கும் முன்னோடியாக இது அமைந்திருந்தது. கடதாசி அடிப்படையிலான இந்த வவுச்சர் முறையானது விநியோக சிக்கனத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ”ஆகக்குறைந்த மீள்நிரப்பும்” சிக்கல் நிலைகளையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைத்திருந்தது. இதன் காரணமாக மக்கள் செலவிடும் அளவு குறைக்கப்பட்டதுடன், சந்தையில் பரந்தளவில் கையடக்க தொலைபேசி பாவனையை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
பின்தங்கிய பிரதேசங்களுக்கான விஸ்தரிப்பு என்பது, டயலொக்கை பொறுத்தமட்டில் தொடர்ச்சியான செயற்பாடாக அமைந்துள்ளதுடன், இயலுமானவரை பல இலங்கையர்களை சென்றடைவதற்கான கம்பனியின் அர்ப்பணிப்பு என்பதற்கு அமைவானதாக உள்ளது.
CASE: டயலொக் மொபைல் – eZ Buddy
இது ”குரல் மூல அழைப்புகளுக்கான பகிரப்பட்ட இணைப்பு” எனும் கொள்கைக்கமைய, கையடக்க தொலைபேசி ஒன்றை ஒரே உரிமையாண்மையின் கீழ், பொது மேற்பார்வைக்கு அமைவாக பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த புத்தாக்கம் என்பது, பின்தங்கிய சமூகங்களுக்கு தொலைத்தொடர்பாடல் சேவைகளை பாரம்பரிய முறைக்கு அப்பால் சென்றடைவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
CASE: இலங்கையின் பின்தங்கிய சமூகங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட சேவைகளை சகாய விலையில் வழங்கும் வகையில் டயலொக் புரோட்பான்ட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக, அரசாங்கத்தின் மூலம் பின்தங்கிய பகுதிகளில் தாபிக்கப்பட்டுள்ள நெனசல பகுதிகளில் தாபிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை பரப்பும் நிலையங்களான நெனசல பகுதிகளில் இலகு சேவை விற்பனை நிலையங்களின் மூலம் சிக்கனமான விலையில் புரோட்பான்ட் இணைய சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைகளிலிருந்து மீட்சி பெறுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
CASE: சிங்களம் மற்றும் தமிழ் மொழி (உள்நாட்டு மொழி) சேவைகளை செயற்படுத்தல்
2G வலையமைப்பிலமைந்த கையடக்க தொலைபேசிகளில் சிங்கள/தமிழ் SMS சேவைகளின் அறிமுகத்தின் மூலம் உள்நாட்டு சமூகங்களுக்கு மொபைல் தொழில்நுட்பத்தின் முழுமையான பயனை பெற்றுக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது. முன்னர் குரல் மூலமான அழைப்புகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த பாவனையாளர்கள் தற்போது குறுந்தகவல்கள் மூலம் தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. சிங்கள/தமிழ் மூல கட்டமைபினால், பாவனையாளர்களுக்கு தமது சொந்த மொழியிலேயே தகவல்களையும் களிப்பூட்டும் விடயங்களையும் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.
CASE: டயலொக் மொபைல் – ஸ்டார் அழைப்பு
இந்த வசதி என்பது, ஒரே வலையமைப்பைச் சேர்ந்த பிரிதொரு பாவனையாளர் குரல் மூல செய்தியொன்றை, குறித்த குறுந்தகவல் அனுப்ப இயலாத நிலையினுள்ள பாவனையாளருக்கு மாற்றீட்டு முறையாக வழங்கும் வகையில் அமைந்த சேவையாகும். குறுந்தகவலுக்கு மாற்றீட்டை வழங்கி, நுகர்வோருக்கு பொறுப்பு வாய்ந்த வகையில் கையடக்க தொலைபேசி பாவனையை ஊக்குவிக்கும் வயைில் அமைந்த சேவையாக அமைந்துள்ளது.
CASE: eZ-காப்புறுதி
இதுபோன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம், டயலொக், தனது பொருட்கள் மற்றும் சேவைகளை ஒவ்வொரு நுகர்வோர் பிரிவுக்கும் மிகவும் பொருத்தமான வகையில் வழங்க எதிர்பார்த்துள்ளது.
CASE: டயலொக் ”சத்காரய” சேவையை அனுபவியுங்கள்
நுகர்வோர் உதவியளிக்கும் உட்கட்டமைப்புகளில் தொடர்ச்சியான முதலீட்டாளராகவும், நுகர்வோர் சேவை, மிகவும் பிந்திய வாடிக்கையாளர் இடைப்பரப்பு மற்றும் உறவுகள் முகாமைத்துவம் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் போன்றவற்றில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. டயலொக்கின் நவீன நுகர்வோர் தொடர்பாடல் நிலையம் என்பது, இலங்கையின் மிகப்பெரிய நவீன வசதிகள் படைத்த தொடர்பாடல் முகாமைத்துவ நிலையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது வாடிக்கையாளர் தொடர்பாடல் செயற்பாடுகளக்கு தொடர்ச்சியான புதுமைகளை உட்புகுத்தி வருவதன் மூலம், வாடிக்கையாளர்களின் இதயங்களிலும், மனதிலும் உறுதியான வர்த்தக நாமமாக நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
2007 இல் ஹொங்கொங் நகரில் இடம்பெற்ற ஆசயா பசுபிக் வாடிக்கையாளர் சேவை கொன்சோர்டியம் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர் உறவுகள் சிறப்புகளுக்கான விருதுகள் வழங்கலில், ’சிறந்த சாதனை பெறுபேறுகள் விருது” வழங்கி கௌரவித்திருந்தது. தெற்காசிய பிராந்தியத்தில் வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் உறவுகள் முகாமைத்துவ செயற்பாடுகளை பின்பற்றுகின்ற சிறந்த நிறுவனம் எனும் பெருமையை பெற்ற முதலாவது தெற்காசிய நிறுவனம் எனும் பெருமையை டயலொக் தன்வசப்படுத்தியிருந்தது.
2008 மார்ச் மாதம், பாரிய சீனா வாடிக்கையாளர் உறவுகள் முகாமைத்துவ விருதுகள் வழங்கும் நிகழ்வில் டயலொக் மூன்று விருதுகளை தன்வசப்படுத்தியிருந்தது. இந்த நிகழ்வில் டயலொக், வாடிக்கையாளர் முகாமைத்துவ கொள்கை விருது, வாடிக்கையளார் முகாமைத்துவ தொழில்நுட்ப விருது, சில்லறை வாடிக்கையாளர் அனுபவ விருது ஆகியவற்றை பெற்றிருந்தது.
எதிர்கால சவால்கள் மற்றும் எதிர்வினைகள்
தற்போது இது பிரதானமாக ”இணைப்பின் செலவீனம்” என்பதாகவே அமைந்துள்ளது. இலங்கையின் பின்தங்கிய சமூகங்களுக்கு இது ஒரு பெரும் தடையாக அமைந்துள்ளது. இந்த நிலை என்பது தனது பொருட்கள் மற்றும் சேவை வழங்கல்கள் தொடர்பில் அதிகளவு தெரிவுகளை வழங்கும் டயலொக்கின் சகல வர்த்தக பிரிவுகளின் மூலம் எதிர்நோக்கப்படும் நிலையாக அமைந்துள்ளது. பின்தங்கிய பிரதேசங்களில் பாவனையை ஊக்குவிக்கும் வகையில், டயலொக் தொடர்ச்சியாக புதிய விலைக் கொள்கைகளை அறிமுகம் செய்வது பற்றி ஆராய்ந்து வருகிறது.
இணைப்பொன்றின் மூலம் தமக்கு எவ்வாறான அனுகூலங்கள் கிடைக்கும் அல்லது தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அது எந்த வகையில் உதவியாக அமையும் என்பது பற்றி போதியளவு அறிவின்மை என்பது சகல வர்த்தக பிரிவுகளிலும் மற்றுமொரு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தனது விநியோக வலையமைப்பு மற்றும் கீழ்மட்ட விநியோகச் சங்கிலிகளின் மூலம் இந்த அனுகூலங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றி பின்தங்கிய பிரதேச மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வழிமுறையை டயலொக் இனங்கண்டுள்ளது. இந்த வழிமுறைகளின் மூலம் எதிர்காலத்தில் ”செய்தியை பரப்புவதற்கு” திட்டமிட்டுள்ளோம்.
தொடர்ந்தும் பன்முகத்தன்மை வாய்ந்த சந்தை சென்றடையும் கொள்கைகளை ஊக்குவிக்க டயலொக் தனது கவனத்தை செலுத்தவுள்ளதுடன், இதன் மூலம் இணைப்புகளை பெறாத இலங்கையின் பின்தங்கிய பகுதிகளுக்கு இணைப்புகளை வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.