Body

டயலொக்கின் சயுறுவானது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் (MEPA) சமுத்திர பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்காக கைகோர்க்கிறது

2023 ஜூலை 27         கொழும்பு

 

Star Rewards

Dialog Axiata PLC ஆல் வலுவூட்டப்பட்ட சயுறு, உலக சமுத்திர தினத்தன்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையுடன் (MEPA) இணைந்து, கடல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கான நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுக்கிறது. இது 2023 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' என்ற தொனிப்பொருளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

இக்கூட்டாண்மையின் ஒரு அங்கமாக சயுறுவானது கரையோர சமூகங்களின் வாழ்வில் நல்லபடியான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார் சவால்களை இனங்கண்டு தீர்ப்பதற்கான திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளில் தொடர்ந்தும் பங்கெடுக்கும். இக்கூட்டாண்மையானது ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் குறிப்பாக இலக்கு 1 (வறுமை இன்மை), இலக்கு 13 (காலநிலை நடவடிக்கை) மற்றும் இலக்கு 14 (நீர்வாழ் உயிரினங்கள்) ஆகியவற்றிற்கு பங்களிக்க எத்தனிக்கிறது. மேலும் இம்முன்னெடுப்பு கண்டல் தாவரங்களில் மாசை குறைத்தல், முருகைக்கற்பாறைகள், ஆமைகள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர துறைமுகங்களில் ஏற்படும் மாசு ஆகிய முக்கியமான சூழல் பிரச்சினைகளை தடுப்பது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பல்வேறுபட்ட விழிப்புணர்வுகளை முன்னெடுக்கும். இதற்கு மேலதிகமாக, டயலொக் மேலும் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ‘சயுறு’ எனும் smartphone app ஐ வெளியிட திட்டமிட்டுள்ளது. இது மீன்பிடி துறைக்கு உதவியாய் அமைவதுடன் இணையவசதி இல்லாத இடத்திலிருந்தும் அமைவிடத்தை பார்வையிடும் வசதிகளை வழங்கும். இந்த app ஐ உபயோகிக்கும் டயலொக் பாவனையாளர்களுக்கு டேட்டா கட்டணம் அறவிடப்படமாட்டாது.

2020ல் வெளியிடப்பட்ட சயுறு, ஒரு இலவச மும்மொழி குரல்வழி ஊடாடல் (Interactive Voice Response - IVR) சேவையாகும். இது வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து வானிலை ஆலோசனை சேவை அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற தினசரி முன்கணிப்புகளை வழங்கும். அவசர காலங்களில் மீனவர்கள் தத்தமது மொழிகளில் குரல் செய்திகளை அனுப்ப முடியும். Outbound Dialing (OBD) தொழில்நுட்பம் மூலம் செயற்படும் இந்த வசதியினூடாக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யமுடியும்

நிலைபேறான அபிவிருத்தி மற்றும் கரையோர சமூகங்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுவதற்கான டயலொக்கின் அர்ப்பணிப்பை சயுறு மற்றும் MEPA வின் இந்த கூட்டிணைவு உறுதிப்படுத்துகிறது. இவையிரண்டும் இணைந்து ஒரு சுத்தமான ஆரோக்கியமான கடற்சூழலை எதிர்கால சந்ததியினருக்காக வழங்குவதற்கு முனைந்துள்ளன.

மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள https://dlg.dialog.lk/sayuru ஐ பார்வையிடுங்கள்.