பொருள் விரிவாக்கம்

91வது வருடாந்த ஆனந்த – நாளந்த ‘Battle of the Maroons’ போட்டிகளுக்கு டயலொக் அனுசரணை வழங்குகின்றது.

February 26th, 2020        Colombo

 

news-1

படத்தில் இடமிருந்து வலம்: ஆனந்த கல்லூரியின் அணித்தலைவர் கனிஷ்க ரந்திலககே, ஆனந்த கல்லூரி போட்டிக்குழு செயல் இணைத் தலைவர் லால் ஹெவகம, ஆனந்த கல்லூரி அதிபர் S.M. கீர்த்திரத்ன, டயலொக் பைனான்ஸ் பிஎல்சி இயக்குனர் / தலைமை நிர்வாக அதிகாரி அசங்க பிரியதர்ஷன, நாளந்த கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவ, நாளந்த கல்லூரி போட்டி குழு இணைத்தலைவர் மொஹான் குணதாச மற்றும் நாளந்த கல்லூரி அணித்தலைவர் அவிஷ்க பெரேரா

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கொழும்பு ஆனந்த மற்றும் நாளாந்த கல்லூரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் SMS மைதானத்தில் கலாநிதி. என். எம் பெரேரா ஞாபகார்த்த கிண்ணத்திற்காக மேதிக்கொள்ளும் 91வது Battle of the Maroons போட்டிகளுக்கு தொடர்ச்சியாக 3 ஆணடடாக அனுசரணை வழங்குகின்றது.

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் மிகவும் புகழ் பெற்ற போட்டியாக திகழும் Battle of the Maroons தற்போது திருவிழாக்கோலம் பூண்டுள்ளதுடன், கடந்தகால மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காகவும் ஆர்வத்தினை அதிகரிக்கும் போட்டியாகவும் இது உருவெடுத்துள்ளது. மேலும் இந்த போட்டிகள் உயர் தரத்தினையும் தக்கவைத்துள்ளது.

இவ்விரண்டு அணிகளும் குலரத்ன கிண்ணத்திற்காக 2020 மார்ச் 15ஆம் திகதி இதே விளையாட்டு மைதானத்தில் விளையாடவுள்ளார்கள்.

2020ஆம் ஆண்டு போட்டிகளுக்காக ஆனந்த கல்லூரியை துடுப்பாட்ட வீரரும் சகல துறை ஆட்டக்காரருமான கனிஸ்க ரந்திலககே வழி நடத்தவுள்ளதுடன் நாளந்த கல்லூரியை விக்கட் காப்பாளரும் துடுப்பாட் வீரருமான அவிஷ்க பெரேரா வழிநடத்தவுள்ளார்.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்hகளை உருவாக்கிய பெருமை இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் உண்டு. 1968ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தலைவமை வகித்த பந்துல வர்ணபுர நாலந்த அவர்கள் கல்லூரியை சேர்ந்தவர். அதே நேரத்தில் 1996ஆம் ஆண்டு உலக கோப்பை வென்று கொடுத்த அர்ஜுன ரனதுங்க ஆனந்த கல்லூரியை சேர்ந்தவர்.

இலங்கையின் இரு முதன்மையான பௌத்த பாடசாலைகளான ஆனந்த கல்லூரி மற்றும் நாளந்த கல்லூரி ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 55-க்கும் மேற்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளன. அவர்களில் பந்துல வர்ணபுர, அர்ஜுன ரனதுங்க, ரொ~hன் மஹனாம, மாவன் அதபத்து, மஹேல ஜெயவர்தன மற்றும் தினேஷ் சந்திமல் ஆகிய 6 வீரர்களும் இலங்கை அணியை வழி நடத்திய பெருமைக்குரியவர்கள் ஆவர்.

ஆனந்த கல்லூரியை சேர்ந்த அர்ஜுனா ரனதுங்கா (1982) சித்தாத் வெட்டிமுனி (1982) மற்றும் பிரெண்டன் குருப்பு (1986) ஆகியோர் முதல் அரை நூற்றாண்டு, முதல் நூற்றாண்டு மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு முதல் இரட்டை சதமானது பெற்றுக்கொடுக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு அறிமுகமானதில் இரட்டை சதம் அடித்த ஒரே விக்கெட் காப்பாளர் பிரெண்டன் குருப்பு அவார்.

ஏனைய குறிப்பிடத்தக்க ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளின் ஊடாக உயர்ந்த மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் பலர் மத்தியில் அஜித் டி சில்வா, சண்டிகா ஹதுருசிங்க, அவிஷ்க குணவர்தன, திலான் சமரவீர, திலன் விஜேசிங்க, லலித் கலுபெரும, அனுர ரணசிங்க, யோஹான்; குணசேகர குமார் தர்மசேன அசங்க கரசிங்க ஆகியோரும் அடங்குகின்றார்கள்.

முன்னாள் இலங்கை அணித்தலைவர் மகேலா ஜெயவர்தன நாலந்த கல்லூரியை சேர்ந்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இத்தகைய வீரர்களைத் தவிர - ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரியை சேர்ந்த சிறந்த கிரிக்கெட் நிர்வாகிகள், உயரடுக்கு கிரிக்கெட் நடுவர்கள், மரியாதைக்குரிய போட்டி நடுவர்கள், முன்னணி விளையாட்டு ஊடக பணியாளர்கள் மற்றும் மிக முக்கியமாக திறமையான சொற்பொழிவாற்றல் திறமை வாய்ந்த வர்ணனையாளர்கள் - குறிப்பாக மறைந்த கருணாரத்ன அபேசேகர பிரேமசர எபசிங்க மற்றும் பாலித பெரேரா போன்ற சிங்கள வர்ணனையாளர்களுக்கும் இதில் உள்ளடங்கியுள்ளார்கள்.

டயலொக் ஆசிஆட்டா இலங்கையின் தேசிய கிரிக்கெட், ரக்பி, கைப்பந்து மற்றும் நெட்பால் அணிகளின் பெருமைக்குரிய அனுசரணையாளராக திகழ்கின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதி தங்க கிண்ணம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட நெட்பால் போட்டி தொடர், கழகங்களுக்கிடையிலான ரக்பி, பீரிமியர் கால்பந்து, பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட், கனிஷ்ட கைப்பந்து ஆகியவற்றுடன் நெருக்கிய தொடர்பினை கொண்டிருப்பதுடன், இராணுவ பரா ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் தேசிய பரா விளையாட்டுக்களை ஒலிம்பிக் நிலைக்கு கொண்டு செல்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.