டயலொக் ஆசிஆட்டா வழங்கும் பிஎன்எஸ் கொண்டாட்ட இசைக் கச்சேரி ‘ஒப நிசா’
2019 ஜனவரி 10 கொழும்பு
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் நிறுவனமானது, இலங்கையினால் அதிகமாக நேசிக்கப்படும் பாடக இரட்டையர்களான BnS (பாத்தியா மற்றும் சந்தோஷ்) ஆகியோரின் 20ஆவது வருடாந்த கொண்டாட்ட நிகழ்ச்சியான ‘ஒப நிசா’(Oba Nisa) இசைக் கச்சேரியை அரங்கேற்றவுள்ளது.
இந்த இசைக் கச்சேரி தாமரை தடாக அரங்கில் 2019 ஜனவரி 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மாலை 6.30 மணிமுதல் நடைபெறவுள்ளது.
டயலொக் சுப்பர் இரசிகர்’ ஆவதன் மூலம் டயலொக் வழங்கும் ‘ஒப நிசா’ கச்சேரிக்கான மிக முக்கிய நபர்களுக்குரிய (VIP) ஆசனங்களை வெல்வதற்கு BnS இரசிகர்களுக்கு வாழ்நாளில் அரியதோர் சந்தர்ப்பத்தை இந்தக் கச்சேரி ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது. தங்களுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய BnS பாடலை பேஸ்புக்கில் இன்ஸ்டக்ராமில் ((Facebook and Instagram) #DialogBnSObaNisa மற்றும் #DialogSuperFan உடன் பதிவிட்டு இரசிகர்கள் தங்களது பயனர் பெயர்களை (usernames) குறிப்பிடுவதன் மூலம் ஆசனங்களை வெல்வதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு இசைக் கச்சேரிகள் தாமரை தடாக உள்ளக அரங்கில் உயிரோட்டம் பெறும் அதேவேளை மாபெரும் இறுதி நிகழ்ச்சியை தாமரை தாடாக அரங்குக்கு வெளியிலுள்ள வளாகத்தில் இருந்தவாறு BnS இரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
BnS இரட்டையர்களுடன் கடந்த இரண்டு தசாப்தங்களாக இணைந்து பாடிய பிரபல கலைஞர்களான ரந்திர், அஷன்தி, உமாரா, உமாரியா, நலின், மஹேஷ், நதீக்கா, பில்லி மற்றும் 2Forty2 பாண்ட் வாத்தியக் குழுவினர் போன்றவர்கள் டயலொக் வழங்கும் ‘ஒப நிசா’ இசைக் கச்சேரியின் போது பழைய காலத்து விருப்புக்குரிய பாடல்களையும் புதிய ஆல்பத்தில் உள்ள பாடல்களையும் கலந்து பாடி மேடையை அதிரச் செய்வர்.