Dialog Ridee Reyak 2019 - இலங்கையின் ப்ரீமியர் Silver Carpet நிகழ்ச்சி அதன் ஐந்தாவது முறையாகவும் இடம்பெறவுள்ளது
28 November 2019 Colombo
அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Silver Carpet நிகழ்ச்சி Dialog Ridee Reyak 2019, இசை நடனம், கவர்ச்சி மற்றும் பொழுதுபோக்குகள் ஆகியவற்றின் ஊடாக உங்களுக்கு மறக்க முடியாத மாலைபொழுதொன்றின் அனுபவங்களை வழங்க காத்திருக்கின்றது. இந்நிகழ்வானது 2019 டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நெலும் போகுன மஹிந்த ராஜபக் ஷ திரையறங்கில் மாலை 6.30 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Silver Carpet நிகழ்வான Dialog Ridee Reyak உள்@ர் பொழுதுபோக்கு நாட்காட்டியில் பல ஆண்டுகளாக மிகவும் கவரச்சிமிக்க நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
320 க்கும் மேற்பட்ட உள்@ர் சினிமா கலைஞர்களை ஆதரிப்பதற்காக நிதி திறட்டுவதற்கான 17வது சந்தர்ப்பத்தில் சினி ஸ்டார் அறக்கட்டளையால் இந்திகழ்ச்சியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சினி ஸ்டார் அறக்கட்டளையான, Dialog Ridee Reyak நிகழ்ச்சியினூடாக பெற்றுக்கொள்ளப்படும் நிதியின் ஊடாக ஆண்டு தோறும் அதன் உறுப்பினர்களுக்கு மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகையினையும் தகுதியுடைய முந்தைய கலைஞர்களுக்கான மாதாந்த உதவித்தொகையினையும் வழங்குகின்றது.
சிங்கள சினிமாவில் நீண்ட காலமாக நிலவும் இந்த பாரம்பரியத்தை இரசிக்கும் வகையில் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நேரடியாக நடாத்த திட்டமிடப்பட்டிருக்கு; 'Dialog Ridee Reyak 2019' நிகழ்ச்சியில் இன்றைய மற்றும் முந்தைய பிரபலமான பாடல்கள் பாடப்படவுள்ளதுடன் அந்த பாடல்களுக்கு நடனங்களும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் ரவீந்திர ரந்தெனிய, மாலனி பொன்செகா, ஸ்ரீயானி அமரசேனா, கிளீட்டஸ் மென்டீஸ், வீனா ஜெயக்கொடி, ஜுவன் குமாரனதுங்க, ஸ்ரீயந்தா மென்டீஸ், தில்ஹானி ஏகநாயக்க, சங்கீதா வீரரத்ன, சன்ன பெரேரா, ஜாக்சன் அந்தோணி, யசோதா விமலதர்ம, பந்த சமரசிங்ஹே, டென்னிசன் கூரே, அனுஷா தமயந்தி, நிலந்தி டயஸ், மஞ்சுளா குமாரி, உபேக் ஷா சுவர்ணமாலி, ரோஷன் பிலாபிடிய, சுராஸ் மாபா, சாரங்க திசசேகர, புபுது சதுரங்க, ரோஷான் ரணவண, வசந்த குமாரவில, கிரிராஜ் கவுசல்யா, ஷைலி திலங்க, விஷ்வ கொடிகார, சசினி அயோந்ர, தினக் ஷா பியசாத், ஸ்ரீசாத்ரி பியசாத், சனுந்தி பியசாத், ஊதாரி பேரேரா, சாலனி தரங்க, ருவன் விக்ரமசிங்ஹ பிரியந்த விஜகோன், உதாரி வர்ணகுலசூரிய, செனாலி பொன்சேகா, தருக வின்னியாராச்சி, சுலக்சி ரணதுங்க, மற்றும் இன்னும் பலரும் கலந்துக்கொள்ள உள்ளார்கள். Ridee Reyak இன் முந்தைய 16 பதிப்புக்களில் பார்வையாளர்களை மயக்கிய சன்ன உபுலி நடன குழு இம்முறையும் மேடையை ஒளிரச் செய்யும்.
டயலொக் ஆசிஆட்டா உள்@ர் கலை மற்றும் கலாச்சாரத்தின் வலுவான ஊக்குவிப்பாளராகவும், இலங்கை கலைஞர்களின் நலன்விரும்பியாகவும் செயற்படுகின்றது. வெள்ளித்திரை களைஞர்கள் பொதுமக்களுக்கு ஆற்றிய மிகச்சிறந்த சேவைக்கு நன்றியினை தெரிவிப்பதற்காக 2015ஆம் ஆண்டு டயலொக் ஆசிஆட்டா சினி ஸ்டார் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்துக்கொண்டது.
Dialog Ridee Reyak 2018 நிகழ்ச்சிக்கான ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000, ரூ.6000 மற்றும் 7500 பெறுமதியான டிக்கட்டுக்களை பொரலை சதீப நுகேகொடை/மஹாரகம/கிரிபத்கொடை சரசவி புத்தகசாலை மற்றும் கொழும்பு 02 நவலோக்கா வைத்தியசாலையில் அமைந்துள்ள சினி ஸ்டார் தலைமை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். எந்தவொரு டயலொக் தொலைபேசியிலிருந்து 444 க்கு அழைத்து மொபைல் டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள முடிவதுடன், எந்தவொரு மொபைல் வலையமைப்பின் மூலமாகவும் 444 மொபைல் App இல் இருந்து டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும். டிக்கட்டுக்கள் பற்றிய மேலதிக விபரங்களை 0777 372 700 எனும் துரித இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியின் போது TikTok வீடியோ App அறிமுகப்படுத்தப்படவுள்ளது. TikTok app challenge இல் பங்கேற்கும் ரசிகர்கள் உள்@ர் கலைஞர்களுடன் இணைந்து பதிவிடுவதற்கான வாய்ப்பினை Dialog Ridee Reyak வழங்குகின்றது.