பொருள் விரிவாக்கம்

செனெஹே சியபத 2017 செயற்றிட்டமானது கோட்டபொல மாத்தரைபிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

21st August 2017         Colombo

 

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரின் வழிநடத்தலில்; மாத்தரை மாவட்டத்தில் கோடபொல பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செனெஹே சியபத கிரமாத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இலங்கையின் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களில் முன்னிலையில் இடம்பெற்றது.

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. சாகல இரத்னாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) குலசூரிய, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் காவன் இரத்நாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி அமலி நாணயக்கார, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடக செயலாளர் சம்பிக விஜயசூரிய கோடபொல பிரதேச செயலாளர் G. அமரசிங்க மற்றும் இலங்கை இராணுவத்தின் 58வது பிரிவு கட்டளை அதிகாரி பிரிகேடியர் A.M.S.D அட்டபட்டு ஆகியோரும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்டு இந்த நிகழ்வினை மேலும் சிறப்படைய செய்தார்கள்.

செனெஹே சியபத செயற்றிட்டத்தின் மூலம் இந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பினால் முற்றாக வீடுகளை இழந்த எஹகலியகொட மற்றும் போடபொல பிரதேச மக்களுக்காக புதிய 37 வீடுகள் நிர்மாணிப்பதற்கான புதிய செயற்றிட்டமானது சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2017 மே மாதம் 27ம் திகதி இந்த செயற்றிட்டத்திற்கு ஆதரவு நல்கும் விதமாக Dialog நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கைகோர்த்துக்கொள்ளும் படி அன்புடன் அழைத்திருந்தது. அதன் பிரதிபலனாக 2 வாரத்தில் 16.53 மில்லியன் ரூபாய் சேகரிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒப்புக்கொண்டமைக்கு அமைய னுயைடழப நிறுவனம் 33.47 மில்லியன் ரூபாவை இணைத்து இந்த செயற்றிட்டத்திற்கு நன்கொடை வழங்கியது. RIL ப்ரபொட்டி பிஎல்சி தங்களின் பங்களிப்பாக 7.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது. மொத்தமாக 57.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணித்து வழங்கல் செயற்றிட்டத்தில், செனெஹே சியபத செயற்றிட்டத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹகலியகொட பிரதேசத்தில் 25 வீடுகளும் மாத்தரை மாவட்டத்தில் கோடபொல பிரதேசத்தில் 12 வீடுகளும் கட்டி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) நிபந்தனைகளுக்கு அமைய இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுவதுடன் அதற்காக அவசியமான பங்களிப்பினை வழங்குவதற்காக இலங்கை முப்படையினரும் இணைந்துக்கொண்டார்கள். மேலும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் கண்காணிப்பில் இச் செயற்றிட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது.

“கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவினை வழங்கும் முகமாக எமது வாடிக்கையாளர்களும் தங்களுடைய பங்களிப்பினை வழங்கியமைக்காக நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நன்கொடை வழங்கப்பட்டமையானது எமது வாடிக்கையாளர்கள் ஏனையவர்களுக்கு உதவுவதற்காக எந்நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் என்பதே இதன் பிரதிபலிப்பாகும். பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்தவ அமைச்சு மற்றும் ஏனைய அலுவலகத்தின் ஆதரவுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்த வீடுகளை வழங்குதல் என்பது எமக்கு பெருமையே.” என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுபுன் வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்

2017 ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஊடக மாநாட்டில் 2017 செனெஹே சியபத செயற்றிட்டமானது பாராளுமன்ற உறுப்பினர், அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் கௌரவ ஆளுனர் அனுர பிரியதர்~ன யாப்பா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் அனர்த்த முகாமைத்தவ அமைச்சு ஆகியயோருக்கிடையில் இந்த ஒப்பந்தமானது கைசாத்திடப்பட்டது.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நன்மைகளை பெற்றுக்கொடுக்கம் செயற்றிட்டத்தில் மே மாதம் 20ம் திகதி செனெஹே சியபத செயற்றிட்டம் இலங்கையின் முன்னனி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனமானது 3ம் பகுதியாக கேகாலை மாவட்டத்தில் அரனாயக்க சாமசர கந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டதையடுத்து இந்த வருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ரூபாய் நன்கொடையினை SMS, Star Points, eZ Cash மூலம் நன்கொடை வழங்கும் படி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டது. அதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு 50 ரூபாய்க்கும் மேலும் 100 ரூபாவை இணைத்து 150 ரூபாவாக மும்மடங்காக்கப்பட்டு இந்த செயற்றிட்டத்திற்கு நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதி தொகையின் மூலம் பகிர்ந்தளிப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் கணக்காய்வு நிறுவனத்தினால் சுயாதீனமாக கணக்காய்வு செய்யப்பட்டது. இதனை sm.dialog.lk/floodrelief க்கு விஜயம் செய்வதன் மூலம் பார்வையிட முடியும்.